பிரதான செய்திகள் விளையாட்டு

பொப்பி மலர்களை அணியக் கூடாது என உத்தரவிடவில்லை – பீபா

fifa
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பொப்பி மலர்களை அணியக் கூடாது என உத்தரவிடவில்லை என சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பொப்பி மலர்களை அணிந்து வீரர்கள் பங்கேற்கக் கூடாது என சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை தெரிவித்துள்ளது. அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் ஆடைகள் அணிவதற்கு சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை அனுமதிக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை இவ்வாறு எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *