இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு பிரதான நீதவான் உள்ளிட்ட 70 நீதவான்கள் இடமாற்றம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

seventy
கொழும்பு பிரதான நீதவான் உள்ளிட்ட 70 நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த இடமாற்ற உத்தரவு அமுலுக்கு வர உள்ளது. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நீதவான்களை இடமாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்ற உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய விரும்புவோர் எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றங்களின் அடிப்படையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் பிரதி செயலாளர் பீ.பீ. ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, கல்கிஸ்ஸ நீதவான் ஏ.எம்.எம். சஹாப்டீன் ஆகியோர் உள்ளடங்களாக 70 நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *