உலகம் பிரதான செய்திகள்

நியூஸிலாந்தினை தாக்கிய 2 நிலநடுக்கங்கள்- அணை ஒன்று உடைந்து ஆற்றுநீர் கிராமங்களை நோக்கி பாய்கின்றது

newszi33

நியூஸிலாந்தில் ஏற்பட்டுள்ள முதல் நிலநடுக்கத்தில் இரண்டு பேர்  உயிரிழந்த சில மணி நேரங்களில், அந்நாட்டின் தெற்கு தீவு ஒன்றில் மற்றொரு பலமான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.1 என்ற ரிக்ரர் அளவில் பதிவாகியுள்ளது

நியூசிலாந்தின் தெற்குப்பகுதியில்  இடம்பெற்ற முதலாவது நிலநடுக்கம் கிறிஸ்ட்சர்சில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில்; நிலை கொண்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டதுடன் சுனாமியும் தாக்கியுள்ளது.   கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் பல்வேறு சாலைகளில் வெடிப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தெற்கு தீவு பகுதியில் உள்ள கிளாரியன்ஸ் ஆற்று அணைக்கட்டின் தடுப்பு சுவர் உடைந்து ஆற்றின் குறுக்கே விழுந்துள்ளதால் , நீரோட்டம் தடைபட்ட ஆற்றுநீர், மால்பரோ மாவட்டத்தில் உள்ள சில ஊர்களை நோக்கி பாய தொடங்கியுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்துக்கு பின்னர் ஏற்படும் மறு நிலவதிர்வுகள் தொடர்வதால் பெரும்பாலான பாடசாலைகள்  மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

newzi2q newziland11

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *