இலங்கை பிரதான செய்திகள்

அவன்ட் கார்ட் பணிகளை கடற்படையினர் மேற்கொள்வதனால் 233 கோடி வருமானம்

avanguard
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகளை கடற்படையினர் மேற்கொள்வதனால் சுமார் 233 கோடி ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி அவன்ட் கார்ட் நிறுவனத்திடமிருந்து, கடற்படையினர் பணிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாக்கும் பணிகளில் அவன்ட் கார்ட் நிறுவனம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈட்டப்பட்ட வருமானம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

  • அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகளை கடற்படையினர் மேற்கொள்வதனால் சுமார் 233 கோடி ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கடற்படையினர் பீத்திக் கொண்டுள்ளனர். இதில் புரியாத விடயம் என்னவென்றால், உலகின் எந்தவொரு நாடும் சேவை நிறுவனங்களான வான், கடல் மற்றும் தரைப் பாதுகாப்புப் படையினரை வைத்து வருமானம் பார்க்க நினைப்பதில்லை?

    ஆக, திரு. கோத்தபாய ராஜபக்ஷவினால் நீதிக்குப் புறம்பான முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்த அவன்கார்ட் நிறுவனத்தின் நடவடிக்கைகளைப் புதிய அரசும் நியாயப்படுத்த முயலுகின்றதா? இந்நடவடிக்கையானது, முறைகேடுகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்குமே வழிவகுக்கும், என்பதை மறுக்க முடியாது! மேலும், இந்நடவடிக்கையைத் தொடர்வதன் மூலம், ‘கடற்படையினரில் ஒரு தரப்பினர் ஆளும் அரசுக்கு விசுவாசம் காட்டாது, அதை இயக்குபவர்களுக்கே விசுவாசமாக இருப்பார்கள்’, என்பதையும் மறுக்க முடியாது?

    அவன்கார்ட் நிறுவனம் மூலம், படையினரை வைத்து வருமானமீட்டுவதனை விடுத்து, அதை மூடிவிட்டுப் படையினரை நாட்டின் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்துவதே, நாட்டுக்கு நல்லது!