இந்தியா பிரதான செய்திகள்

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் பயிற்சி :

Indian Army soldiers practice during a training session at an army camp near India and Pakistan Border, Punjab, India Thursday, May 30, 2002. Firing across the India-Pakistan border killed 14 people and three police officers were slain by suspected Islamic militants Thursday, hours after Britain's envoy urged the nuclear-armed neighbors to pull back from the brink of war. (AP Photo/Aman Sharma)

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் பயிற்சியைத்  ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர், பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்ற அதேவேளை , பாகிஸ்தான்  ராணுவமும் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இதை யடுத்து இரு நாடுகளுக்கிடையே  ஒரு  பதட்டமான சூழ்நிலைதோன்றியுள்ள நிலையில்  பஞ்சாப் மாநிலத்தின் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் ராணுவம் போர் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தப் பயிற்சியில் ஆயுதங்கள் ஏந்திய உலங்குவானூர்திகள், தரைப்படையினர் பங்கேற்க உள்ளதாகவும்  எந்த சூழ்நிலையையும் எதிர் கொள்ள பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருப்பதை உணர்த்து வதற்காகவே இந்தப் பயிற்சி நடைபெறுவதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *