பிரதான செய்திகள் விளையாட்டு

பந்து தலையில் தாக்கியதன் காரணமாக அஸ்திரேலியாவின் அடம் வோர்க்ஸ் வைத்தியசாலையில்

Australia’s Adam Voges raises his helmet after making a double century against New Zealand on the third day of the first International Cricket Test match at Basin Reserve, Wellington, New Zealand, Sunday, Feb. 14, 2016. (Ross Setford/SNPA via AP) NEW ZEALAND OUT

அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டவீரர்  அடம் வோர்க்ஸ் பந்து தலையில் தாக்கிய காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவுஸ்திரேலியாவில நடைபெற்று வரும்  உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடர்  இன்று  பேர்த் நகரில்  ஆரம்பமாகிய வேளை  ஆரம்ப ஆட்டத்தில் வெஸ்டேர்ன் அவுஸ்திரேலியா- தாஸ்மேனியா ஆகிய அணிகள் போட்டியிட்டன.

முதலில் வெஸ்டேர்ன் அவுஸ்திரேலியா அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த நிலையில் இடைவேளைக்கு சற்று முன்னதாக அந்த அணியின் அடம் வோக்ஸ், கமரோன் ஸ்டீவன்சன் வீசிய பந்தை அடிக்காமல் தலையை குனிந்த போது எதிர்பாராதவிதமாக அந்த பந்து வேகமாக அவரது தலைக்கவசத்தை  தாக்கி, தலையில் அடிபட்டது.

கடுமையான வலி மைதானத்தில் விழுந்த  வோக்சுக்கு பயிற்சியாளர்கள்  வழங்கிய முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இதே ஷெபீல்ட் ஷீல்ட் போட்டியின்போது, முன்னாள்  துடுப்பாட்ட வீரரான  பிலிப் ஹியூக்ஸ் பந்து தாக்கியதில் உயிரிழந்தமை  குறிப்பிடத்தக்கது.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *