இலங்கை பிரதான செய்திகள்

யாழ் பல்கலை மாணவர்கள் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் நீடிப்பு

குjaffna-university-boysளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த காவல்துறை உத்தியோகத்தர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டிருந்தனர். ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என பிரேத பரிசேதனை அறிக்கையின் மூலம் தெரியவந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *