இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

15094253_1796907060597922_2011757369204862235_n
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் விட்டுவிட்டு பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடா்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழகியுள்ளது. பலரது வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. அதேவேளை  இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டங்கள் கிடைக்காது தற்காலிக வீடுகளில்  வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.
குறிப்பாக கிளிநொச்சியில் உருத்திரபுரம், பொன்னகா், இரத்தினபுரம், பரந்தன் சிவபுரம், பண்ணங்கண்டி, மலையபளபுரத்தின்  ஒரு பகுதி, என பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. பல வீதிகளில் வெள்ளம் ஊடறுத்து பாய்கிறது. இதனால் சில மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது.

மேலும் இதுவரை வெள்ளத்தினால் இடம்பெயரும் நிலைமை மக்களுக்கு ஏற்படவில்லை. இருந்தும் தற்போது பெய்கின்ற மழை தொடர்ந்தும் பெய்துவருமனால் வெள்ளப்பாதிப்பு மேலும்  அதிகாிக்கலாம் என எதிர்பாா்க்கப்படுகிறது.

15107308_1796907143931247_9085607481051790398_n 15107371_1796906950597933_3741081022638586332_ndsc01258 dsc01269 dsc01289 dsc01291dsc01293 dsc01297 dsc01300

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *