இலங்கை பிரதான செய்திகள்

மாகாண முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

maithri-cms

அடுத்த வருடம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாகாண முதலமைச்சர்களும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இன்று (22); ஒரு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டார். இங்கு மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மாகாண அமைச்சர்கள் தமது பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *