இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினரால் 3 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

kashmeer
காஷ்மீரில் மச்சல் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பணியில் இருந்த 3 இந்திய வீரர்கள், பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டுள்ள னர் எனவும்  இவர்களில் ஒருவரின் உடல் அங்கவீனம் அடைந்தநிலையில் மீட்கப்பட்டது எனவும் இது இந்திய  ராணுவம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு காஷ்மீரில் நடந்த மோதல் சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் நேற்று கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிப்போரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த கிடைத்த தகவல்களை அடுத்து  அங்கு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது   ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும்  சம்பவ இடத்திலிருந்து 2 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *