இலங்கை பிரதான செய்திகள்

வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் வெளிநாட்டுகளுக்கு பயணம்

permission-granted
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எட்டுப்பேருக்கு அடுத்து வரும் வாரங்களில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு வடமாகாண அவைத்தலைவர் அனுமதி அளித்துள்ளார்.  வடமாகாண சபையின் 66 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் தாம் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதனால் தமதுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என அவைத்தலைவரிடம் விண்ணப்பித்து இருந்தனர்.

அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் விடுமுறை விண்ணப்பம் அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுப்பினர்களுக்கு விடுமுறை அளிக்க அவைத்தலைவர் சம்மதம் தெரிவித்தார்.  வடமாகாண கல்வி அமைச்சர் த.குருலராஜா உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்களான சி.மயூரன் , ஞா.குணசீலன் , இ.ஆர்னோல்ட் , ஆயூப் அஸ்மீன் , சு.சுகிர்தன் , சூசைரட்னம் பிரேமசிறைவா , மற்றும் க.தர்மலிங்கம் ஆகிய உறுப்பினர்களே வெளிநாடுகளுக்கு பயணம் ஆக உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *