இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும் பிரபாகரனுக்கு வாழ்த்தி சுவரொட்டிகளும்

image-0-02-06-cc1bb5b2c00e8d9f4654638e938f989d4c8a9341bce61025631fc14cbe063c44-v
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில்  மாவீரர் நாள் வாசகங்கள் என்பன  எழுதப்பட்டும்; தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும்  வீதியோரங்களில் இன்று ஞாயிறு   காணப்படுகின்றது .

குறித்த  சம்பவம் தொடர்பாகத்  தெரிய வருவதாவது  , நேற்று இரவு நேரம் விஸ்வமடுப்பகுதியில்  இனந்தெரியாத நபர்களினால்; தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஐம்பதிற்கு  மேற்ப்பட்டவை ஏ35 பாதையில்  வீசப்பட்டுள்ளதுடன் வட்டக்கச்சி  சந்தையில் உள்ள  விளம்பரப்பலகையிலும் மற்றும் தார் வீதிகளிலும்   நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால்  மாவீரர்நாள் தொடர்பான வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது

மேலும் இன்றையதினம் மாலை  ஆறுமணிக்கு  மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் .

image-0-02-06-0a512678d9d1efb767c30dcc558a0b6feb88908f380e490d501648718869cb0d-v image-0-02-06-53d481689222c814c76007e86b79e4c2d7a5a71acf40e944bc7856b3d75c5e7e-v image-0-02-06-601ce90004c5427613f49e27a4b6f228d838987f83797b4ecc5592bc2b2b9e01-vimage-0-02-06-d6f1fabcaf2e8ffec757c8796de7884596e6039dc7115ca780c21ee10ebd6e57-v image-0-02-06-d8159cd67b39ed6fe004fe776c789fa66f2a9fd7e0bf81cdceaf003f806f71f4-v

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *