இலங்கை பிரதான செய்திகள்

டுபாயில் பாரியளவு கொள்ளையில் ஈடுபட்ட இலங்கையருக்கு தண்டனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

jail

டுபாயில் பாரியளவு கொள்ளையில் ஈடுபட்ட இலங்கையர் ஓருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று இலங்கையர்கள் சேர்ந்து டுபாயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஒரு மில்லியன் திர்ஹாம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ள நிலையில் ஏனைய இரண்டு இலங்கையர்களும் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சார்ஜா விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது குறித்த 47 வயதான இலங்கையரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிறைத் தண்டனையை பூர்த்தி செய்ததன் பின்னர் குறித்த நபரை நாடு கடத்த உள்ளதாக டுபாய் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த நபருக்கு ஓராண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *