இந்தியா பிரதான செய்திகள்

நக்ரோடா பகுதி இந்திய ராணுவ முகாம் மீது தற்கொலைப் படைக்குழு தாக்குதல் – மோதல் தொடர்கிறது:-

indian-miltry

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள நக்ரோடா பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை தற்கொலைப் படைக்குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த தற்கொலைப் படையினருக்கும் இந்திய அரசாங்கப் படைகளுக்கும் இடையே பலத்த மோதல்கள் இடம்பெறுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மோதலில் ஒரு இள நிலை அதிகாரி உட்பட இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காஷ்மீர் நெடுஞ்சாலையில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டு உள்ளதாகவும் நக்ரோடா பகுதியில் உள்ள பாடசாலைகளை மூடுமாறு துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *