இலங்கை பிரதான செய்திகள்

தாலிக்கொடி அறுத்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

jaffna-rounup_ci
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.திநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணி ஒருவரின் தாலிக்கொடி அறுத்த இளைஞர் ஒருவரை வீதியில் சென்றவர்கள் துரத்திப்பிடித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

திருநெல்வேலி வாலையம்மன் கோவிலடி பகுதியில் இன்று மாலை 4மணியளவில் நடந்து சென்றுகொண்டிருந்த வயோதிப்பெண்மணியின் தாலிக்கொடியினை மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் அறுத்து சென்றுள்ளனர்.

அதனைக் கண்ட வீதியில் சென்றவர்கள் இருவரையும் துரத்தி சென்று பிடிக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் பொதுமக்களிடம் பிடிபட்டார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பி சென்றுள்ளனர். பொதுமக்களிடம் பிடிபட்ட நபர் தற்போது யாழ்.பொலிஸரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *