இலங்கை பிரதான செய்திகள்

யாழ்பாணத்திற்கு சூறாவளி எச்சரிக்கை.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

img_4867

வடக்கில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால், யாழ்மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை இரவு முதல் மழையுடன் காற்று வீசி வருகின்றது. அத்துடன் குளிரான கால நிலை ஏற்பட்டு உள்ளது.

கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவத்தினர் எச்சரித்து உள்ளனர்.

img_4853

இதேவேளை திருகோணமலையிலிருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளது எனவும்,  இத்தாழமுக்கம் யாழ் குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதே வேளை    இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது எனவும், இதனால்,  2ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை காணப்படும் என வானிலை அவதானிப்பு நிலையத்தினால்  தொிவிக்கப்பட்டுள்ளது என  யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

img_4873 img_4875 img_4884 img_4894 img_4903img_4912

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *