இலங்கை பிரதான செய்திகள்

திசை மாறி வந்த தமிழக மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

15193680_1142233709226165_6219681806284566211_n
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடல் கொந்தளிப்பு காரணமாக திசை மாறி வந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கால நிலை சீரானதை அடுத்து தமிழகத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

வடக்கில் புதன்கிழமை இரவு முதல் கால நிலை சீரின்மை காணப்பட்டதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடல் கொந்தளிப்பு காரணமாக தமிழக மீனவர்கள் திசை மாறி வடக்கு கடற்பிரதேசத்திற்கு வந்த நிலையில் வடமராட்சி மீனவர்களால் வியாழக்கிழமை காப்பற்றப்பட்டு கரை சேர்க்க பட்டனர்.

15230757_1142234542559415_4498243967020488093_n

தமிழகம் நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த முத்தப்பன் நடராஜன் (வயது  43) நடராஜன் செல்வம் (வயது 39) நடராஜன் சங்கர் (வயது 36) பழனி பாலு (வயது 36) ராஜகுண்டம் கோவிந்தசாமி (வயது 30) ஆகிய மீனவர்களே காப்பற்றப்பட்டனர்.

குறித்த மீனவர்கள் ஐந்து பேரும் இன்று வெள்ளிக்கிழமை கால நிலை சீரானத்தை அடுத்து மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

15241955_1142233995892803_8696716152086416135_n15253375_1142233772559492_2883554799713259750_n

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *