இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட அதிகார சபை தெரிவு:-

ankayan-2

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைக்கான தெரிவு, இன்று 04-12-2016 காலை பதினோரு மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதன் தலைமையில் கிளிநொச்சியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிக்கான அதிகாரசபைத் தெரிவில் அதிகாரசபைச் செயலாளர், இருபது அதிகாரசபை உறுப்பினர்கள் மற்றும் ஐந்து அதிகாரசபைக்கான ஆலோசகர்கள் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனா்

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது பிரச்சனைகளை நேரடியாகவும், கடிதம் மூலமும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதனிடம் தெரிவித்தனர்

இத் தெரிவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கையன் இராமநாதன் , அவருடைய பிரத்தியேக செயலாளரும் தந்தையுமான இராமநாதன் ,சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர் , கட்சியின் உறுப்பினர்கள் ,மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ankayan-6

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *