இந்தியா பிரதான செய்திகள்

இணைப்பு 2 – அரைக்கம்பத்துக்கு இறக்கப்பட்ட அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது

jeyalalitha_CI

 

இணைப்பு 2 –  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது என அப்பலோ மருத்துவமனை அறிக்கை விட்டதனைத் தொடர்ந்து  அதிமுக தலைமை கழகத்தில் அரைக்கம்பத்துக்கு இறக்கப்பட்ட அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகமுதல்வர் ஜெயலலிதா காலமானார்- உணர்ச்சி வசப்பட்ட அதிமுக தொண்டர்கள் வாகனங்கள் மீது தாக்குதல்

ஜெயலலிதா சிகிச்சை பலனிளிக்காத நிலையில்  இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 68. ஜெயலலிதா மரணமடைந்த செய்தி அறிந்து அதிமுகவினரும், பொதுமக்களும்  அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்து கதறி அழுது வருகின்றனர் என தொிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணர்ச்சி வசப்பட்ட அதிமுக தொண்டர்கள் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்   தடுப்புகளை உடைத்து கலவரத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக அனைத்து  மதுபானக்கடைகளையும்  கடைகளையும்  மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  அத்துடன்  திரையரங்குகளில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *