இலங்கை பிரதான செய்திகள் முஸ்லீம்கள்

முஸ்லிம் எய்ட்டினால் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன

handover
மிகவும் வறிய, பின்தங்கிய விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை கையளிக்கும் இரண்டு நிகழ்வுகள் இன்று (8)  நடைபெற்றுள்ளன. முஸ்லிம் எய்ட் இனால் அமைக்கப்பட்ட 24 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறையில் காலை 9:30 மணியளவிலும் 77 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு தோப்பூர் கிராமத்தில் பிற்பகலிலும் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலையடிக் கிராமம், கல்லரைச்சல், தென்னம்புள்ள கிராமம், கருவாட்டுக் கல் கிராமங்களைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கும் தோப்பூர் உப பிரதேச செயலப் பிரிவில் அடங்கும்  பாலதோப்பூர், தோப்பூர். அல்லை நகர் மேற்கு மற்றும் கிழக்கு, இக்பால் நகர், ஆசாத் நகர், ஜின்னா நகர், பாரதிபுரம்    கிராமங்களைச் சேர்ந்த 77 குடும்பங்களுக்கும் மேற்படி வீடுகள் வழங்கப்பட்டன.

பாரம்பரிமான இக்கிராமங்கள் யுத்தம் மற்றும் குறை அபிவிருத்தி காரணமாக பல ஆண்டுகள் பாதிக்கப்பட்ட கிராமங்கள் ஆகும். மேற்படி கிராமங்களில் வாழும் மிகவும் வறிய மக்கள் பிரிவினருக்கே இவ்வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.  கணவனை இழந்த பெண்கள் , விசேட தேவையுடையவர்கள்,  நலிவுற்ற குடும்பங்கள் பல இத்திட்டத்தில் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிரதேச செயலர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், முஸ்லிம் எய்ட் இலங்கைக்கான பணிப்பாளர், நலன் விரும்பிகள், சமய, சமூகத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இக் கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *