இலங்கை பிரதான செய்திகள்

காணாமல் ஆக்கப்படவர்களின் தகவல்களை வெளிப்படுத்து – யாழில் போராட்டம்.

குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்
img_5102
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்துமாறு கோஷமிட்டனர்.  இதேவேளை சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவரும் யாழ்ப்பணத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களால் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ம் திகதி கடத்தி செல்லப்பட்டனர்.
img_5102
அது தொடர்பில் யாழ்.நீதிமன்றில் கடந்த ஐந்து வருட காலமாக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.

img_5123 img_5133 img_5144 img_5165

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *