Home சினிமா அமிதாப் பச்சன் நலம் பெற பிரார்த்திக்கிறேன்! ஹிந்தி சூப்பர் ஸ்டாருக்காக தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுதல்!!

அமிதாப் பச்சன் நலம் பெற பிரார்த்திக்கிறேன்! ஹிந்தி சூப்பர் ஸ்டாருக்காக தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுதல்!!

by admin

தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான் எனும் திரைப்படத்தில் நடித்து வரும் அமிதாப் இரவு பகலாக தூக்கம் மற்றும் ஓய்வின்றி தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். அத்துடன் மும்பையில் இருந்து அழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்களும் அமிதாப்புக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இமயமலை செல்வதற்காக வட இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக நடிகர் ரஜினிகாந்த், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது நண்பரும், நடிகருமான அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய இறைவனிடம்  தான் பிரார்த்திப்பதாக கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More