Home இலக்கியம் எப்பொழுதும் அவர்கள் அப்படி வருவதில்லை!

எப்பொழுதும் அவர்கள் அப்படி வருவதில்லை!

சி.ஜெயசங்கர்.

by admin

 

ஆக்கிரமிப்பாளர்களும் அபகரிப்பாளர்களும்
எப்பொழுதும்
வாள் கொண்டும் வேல் கொண்டும்
குதிரைகளில் வருவதில்லை.

எப்பொழுதும்
துப்பாக்கிகள் கனரக ஆயுதங்களுடன்
பீரங்கி வண்டிகளிலும் கவச வாகனங்களிலும்
வருவதில்லை.

எப்பொழுதும்
புனித நூல்களுடனும் புராணங்களுடனும்
வருவதில்லை.

ஆக்கிரமிப்பாளர்களும் அபகரிப்பாளர்களும்
அதிகார பூர்வமாகவும் சட்டரீதியாகவும்
உத்தியோகபூர்வ வாகனங்களிலும்
ஆசியுடனும் காவலுடனுங்கூட
வருவர்.

காடுகள் மேடுகள் காக்கவெனவும்
தேச நலனெனவும்
விளக்கங்கள் வியாக்கியானங்களுடன்
அவர் வருவர்.

ஆக்கிரமிப்பாளர்கள் அபகரிப்பாளர்கள்
எப்பொழுதும் குதிரைகளிலும்
கனரக வாகனங்களிலும் வருவதில்லை.

எப்பொழுதும் அவர்கள் அப்படி வருவதில்லை
எப்பொழுதும் அவர்கள் எப்படியும் வருவர்.

சி.ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More