Home உலகம் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 10போ் பலி

பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 10போ் பலி

by admin

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனா்.

கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கியுடன் நுழைந்த இனந்தொியாத நபா் அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது

இதுபற்றி தகவல் அறிந்தது சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினா் துப்பாக்கிதாரியை கைது செய்வதற்காக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

மேலும் காயங்களுடன் துப்பாக்கிதாாி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

குறித்தநபர் துப்பாக்கி சூட்டை ஏன் நடத்தினார்? என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாச் நிலையங்களில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்கா #பல்பொருள்அங்காடி #துப்பாக்கிச்சூடு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More