Home இந்தியா மாவோயிஸ்ட்களை தேடி தமிழகத்தின் கோவையில் காவல்துறையினர் தேடுதல் :

மாவோயிஸ்ட்களை தேடி தமிழகத்தின் கோவையில் காவல்துறையினர் தேடுதல் :

by admin

இந்தியாவின் கேரள மாநிலத்தின்  நிலம்பூர்  காட்டுப் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்திய காவல்துறையினருக்கும்;, மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த  மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டதுடன் 15 பேர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில்  மோதலில் காயமடைந்த மாவோயிஸ்ட்கள் தமிழகத்தின் கோவை பகுதிக்குள்  தங்கியிருந்து  அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர்  சந்தேகத்துக்குரிய நபர்கள் சிகிச்சைக்கு வந்தால், தகவல்  வழங்குமாறு அறிவித்ததுடன்  பல்வேறு மலைக் கிராமங்களிலும் வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மலைகள் சூழ்ந்துள்ள கேரள அட்டப்பாடியைப் பொறுத்தவரை, 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ள நிலையில் அதேபோன்று தமிழகத்திலும் 80-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More