Home இலக்கியம் மொழி என்பது உரையாடல் சாதனம் மாத்திரமல்ல அது உணர்வு சார்ந்தது பண்பாடு சார்ந்தது.

மொழி என்பது உரையாடல் சாதனம் மாத்திரமல்ல அது உணர்வு சார்ந்தது பண்பாடு சார்ந்தது.

சுவாமி விபுலானந்தா .அழகியற் .கற்கைகள் .நிறுவக நிகழ்வுகள்! சி மௌனகுரு.

by admin

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு இலங்கையின் ஒரு கலை பயில் பெரும் கலைக்கூடம் 2002இல் ஆரம்பிக்கப்பட்ட இது கடந்த 20 வருட காலங்களைப் பெரும் சிரமத்தோடு கடந்து வந்துள்ளது. அதனை அருகிலிருந்து அவதானிக்கும் வாய்ப்பும் அதனோடு பயணிக்கும் வாய்ப்பும் நமக்கு கிடைத் திருக்கிறது அதனால் அதனை உள்ளும் புறமும் அறியும் வாய்ப்பும் வாய்த்திருக்கிறது
அதன் வளர்ச்சியில் பங்கு கொண்டோர் பலர் அண்மைக்காலமாக அதன் செயல்பாடுகள் பல் துறைப் பட்டனவாக வளர்ந்து வருவதை அவதா னிக்க முடி கின்றது அங்கு கல்விபயிலும் நடன, நாடக,
ஓவியத்துறை, மாணவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று தங்கள் திறமைகளைக் காட்டி வருகிறார்கள் இந்தப் பின்னணியிலேயே தான் அண்மையிலே அந்த நிறுவகம் கொழும்பு கட்புல, ஆற்றுகைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து நடத்திய இசை நிகழ்வை வைத்து பார்க்க வேண்டிய உள்ளது.

இது நடந்தது 14.02.2024 அன்று ஏறத்தாழ முப்பதுக்கு மேற்பட்ட சிங்கள மாணவர்களும்
60க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களும் இணைந்த நிகழ்வு ஒன்றை மேடையில் காணும் வாய்ப்பு கிடைத்தது மேடையில் பெரும் தொகை மாணவரக்ள் இணைந்து கொண்ட பெரு நிகழ்வு அது இதற்கு சிறப்பு விருந்தினராக நான் அழைக்கப்பட்டு இருந்தேன் இரண்டு பல்கலைக்கழக வேந்தர்களும் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள் இதன் ஒழுங்கமைப்பாளராகச் செயல் ,பட்டவர் திருமதி காமினி, கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளரான இவர் இனக்குழும இசையில் கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்கொண் டிருப்பவர் அவருக்கு உதவியாக இசைத்துறை முது நிலை விரிவுரையாளர் கலாநிதி பிரியா ஜதீஸ்வரன் இசைத் துறைத் தலைவி கலாநிதி நிர்மலேஸ்வரி
ஆகியோர் இருந்திருக்கிறாரக்ள் எனவும் அறிகிறேன் ஒளி வசதிகளை நாடக விரிவுரையாளர் தர்மலிங்கம் செய்திருந்தார்.

கொழும்புப் கட்புல ஆற்றுகைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒரு இளைஞர் .அவரது பெயர் றோகன் நெத்சிங்கா அவர் ஒரு இசைப்பேராசிரியர் அவர் ரஷ்யா வில் இசைத் துறையில் ஆராய்ச்சி பண்ணி யவர் இனக்குழும இசை (Ethnomusicology} அவரது ஆய்வுத்துறையாகும் அவரோடு உரையாடும் போது அவரது ஆர்வமும் அறிவும் செயல் திறனும் தெரிந்தன கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக்கழக. இசைத் துறையும் விபுலானந்த அழகியல் கற்கைகைகள் நிறுவ இசைத் துறையும்
இணைந்து இந்த நிகழ்வை நடத்தியன இசை நிகழ்வு பெரும்பாலும் இரு இனத்தாரிடமும் பயில் நிலையிலுள்ள கிராமிய இசைகளையே மையம் கொண்டிருந்தன.

தாலாட்டு பாடல்
ஒப்பாரிப் பாடல்
சடங்குப் பாடல்
வேடிக்கைப் பாடல்
நாடகப் பாடல்
என அவை அமைந்திருந்தன. சிங்கள தமிழ் இசை மரபுகளின் ஒற்றுமையை அங்கே காண முடிந்தது
பாடு பொருளும் பாடல் இசையும் ஒன்றாக இருந்ததை அனைவரும் அவதானித்திருப்ப ர்
சிங்கள மாணவர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாடியதும் தமிழ் மாணவர்கள் சிங்களப்பாடல்களைப் பாடியதும் பின்னர் இரு சாராரும் இணைந்து சில பாடல்களைப் பாடியதுமான அந்த ஒற்றுமை மனதைக் கவர்ந்தன மனதை நெகிழ்வித்தன எங்கள் தலைமுறையோடு இந்த இன ஒற்றுமை போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டி ருந்த எம்போன்றோருக்கு இந்த நிகழ்வு பெரும் திருப்தி யையும்  நமது இளம் தலைமுறை மீது நம்பிக்கையும் தந்தது.

இந்த அழகிய தீவில் வாழு கின்ற சிங்கள மாணவர் களுக்கும் தமிழ் மாணவர் களுக்கும் இடையே பெரும் சுவராக நிற்பது மொழியாகும் ஒருவர் மொழியை ஒருவர் அறியாத நிலை இணைப்பு மொழியாக ஆங்கிலமே இருக்கின்ற காலனிய மனோபாவம்நமது கல்வித் திட்டம் காரண மாக சிறு வயதில் இருந்தே இரு இன மாணவர்களும். மற்றவ ர்கள் மொழியை பூரணமாக அறிகின்ற வாய்ப்பு வாய்க்க வேயில்லை அதற்கான அரசியல் பின்னணிகளும் உண்டு மொழி என்பது வெறும் உரையாடல் சாதனம் மாத்திரம் அல்ல அது உணர்வு சார்ந்தது ஒரு சமூகத்தின் வாழ்க்கை சார்ந்தது
அச்ச சமூகத்தின் பண்பாடு சார்ந்தது மொழியை அறிவதன் மூலம் இன்னொரு சமூகத்தில் உணர்வையும் பண்பாட்டையும் வாழ்க்கையையும் நாம் அறியலாம் இந்த சந்தர்ப்பத்தை நம் சிறார் களுக்கு நமது கல்வித் திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கவே இல்லை இது சாராரும் தத்தம் மொழிப் பெரு மித உணர்விலும் மொழி பாதுகாப்பு உணர்விலும் அதிகமாக ஆழ்ந்திருப்பதால்
உரையாடல் சாத்தியப்ப டவில்லை சாத்தியப்பட அரசியல் விடவில்லை இந்நிலையிலே இவ்விரு சாராரையும் இணைக்கின்ற ஒரு புதுமொழியாக இசை மொழி அமைந்திருந்தமை முக்கியமான அம்சமாகும்.

இரு இன மாணவர்களின் ஆற்றுகை முறையிலும் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன
ஒரு சாரார் தனியாக நிகழ்த்து வதையே பெரும்பாலாகக் கொள்ள மறு சாரார் கூட்டாக நிகழ்த் துவதைப் பெரும்பாலாக கொண்டிருந்தனர் கிராமிய இசை என்பது கூட்டிசை ஆகும்
மேடையில் ஒரு இசை நிகழ்வு அளிக்கும் போது அதனை காட்சிப் பலத்துடன்(Visual effect) அளிப்பது அதற்கு மேலும் மெருகூட்டும் தமிழ் மாணவர்களின் ஆற்கைகள் பெரும்பாலும் தனி ஆற்றுகையாக இருந்து மெல்ல மெல்ல கூட்டு ஆற்றுகையாக பின்னர் மாறின சிங்கள மாணவர்களின் ஆற்றுகை எல்லாமே முதலில் இருந்து கடைசி வரை கூட்டு ஆற்றுகைகளாகவே இருந்தன உடை அமைப்பிலும் பலத்த வேறுபாடுகள் காணப்பட்டன தமிழ் மாணவர்கள்தம் கோல உடைகளில் அதிகம் கவனம் செலுத்த வில்லை சினிமா கவர்ச்சியே அங்கு அதிகம் காணப்பட்டது.

சிங்கள மாணவர்கள் மேடை அமைப்புக்கான உடையை வடிவமைத்து இருந்தனர்
அந்த உடையமைப்பு எளிமையாகவும் அழகாகவும் இருந்து ஒரு அழகியல் உணர்வைத் தந்தது
மேடைக்கு உடையமைக்கையில் ஒளியையும் கணக்கில் எடுக்க வேண்டும் அல்லவா
அதற்கு ஒரு அழகியல் இருக்க வேண்டும் அல்லவா தமிழ் மாணவர்கள் பின்னணி இசையாக உடுக்கை மாத்தி ரமே பாவித்தனர் சிங்கள மாணவர்கள் கெட்ட பெர மகுள் பெர என அழைக்கப்படும் சிங்கள மத்தளங்களையும் உடுக்குடன் நவீன இசைக்கருவிகளையும் பாவித்தனர் இதனால் அவர்கள் ஆற்று கையில் ஒரு செழுமையும் அழகும் தெரிந்தன அதிகமானோரை மேடையில் அசைய விடுவது என்பது மேடைக் கலை சார்ந்ததாகும் இதனை கோரியோகிராஃபி எனவும் கூறுவர்.

இந்த மேடைக்கலை ஒரு சாராருக்கு வாய்க்கவில்லை என்பதனையும் அவதானிக்க கூடியதாக இருந்தது சிங்கள மாணவர்களில் நடனமாடியோரில் ஒரு மாணவி தனித்து தெரிந்தாள் அவள் பெயர் “சாதுரிகா” ஆடல் அவள் உடலில் ஊறிக்கிடந்தது என அறிந்தேன். முடிவில் அவளை அழைத்து பாராட்டினேன் இன்னும் சிறப்பாக செய்த சிலரையும் பாராட்டினேன் தமிழ் மாணவர்கள் அதிகமானோர் இசைத்துறை சாந்தவர்கள் சிலர் தனித்து தெரிந்தார்கள் அவர்களையும் அழைத்து பாராட்டினேன் பாராட்டு கலைஞர்களுக்கு மிக இன்றி அமையாது விபுலானந்த மாணவிகளுட் பலர் கூச்ச சுபாவத்துடன் காணப்பட்டனர், அறையில் அமைதியாக இருந்து பாடப் பழக்கப்பட்டவ்ர்கள் அவர்கள் அவர்கட்கு கூச்சம் கலைய உரத்துப்பாட ஒரு பயிற்சிப்பட்டறை அவசியம் என துறைத்தலைவியிடம் கூறினேன்.

விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக இசைத் துறை இத்தகைய மேடை நிகழ்வுகளைச் செய்யும் போது அங்குள்ள நாடகத்துறை ஓவியத்துறை ஆகியவற்றின் உதவிகளைப் பெற்றிருந்தால் மேலும் இந்நிகழ்வுசிறப்பாக இருந்திருக்கும் என என் அபிப்பிராயத்தை அவர்களிடம் கூறினேன்
நிறுவகத்துள் வளம் கொட்டிக் கிடக்கிறது ஒற்றுமையும் புரிந்துணர்வுமே இணைந்து செயல்படும் எண்ணமுமே மிக மிக முக்கியம் தனித்தனி ப் பெட்டிகளாக இயங்குவது அந்நிறுவகத்துக்கு அழகு அன்று பல துறைகளையும் அங்கு அமைத்தது. அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே தான் நிறுவகப்பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் கென்னடியும்
கொழும்பு கட்புல ஆற்றுகை பல்கலைக் கழக உப வேந்தர் பேராசிரியர் மோகன் நெத்தசிங்காவும்
கிழக்குப் பலகலைக்க்ழக உப வேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் அவர்களும் சிறப்பாக உரையாற்றினாரக்ள் கொழும்பு கட்புல ஆற்றுகைப் பலகலைக் கழகம் மிக வளர்ச்சி பெற்ற ஓர் அழகியல் பல்கலைக் கழகம் நான் அங்கு சென்று அதனை அவதானித்து இருக்கிறேன் சில நிகழ்வுகளும் நட்த்தியிருக்கிறேன் அதற்கு அரசு ஆதரவு நிறையவே உண்டு அத்தோடு அது கொழம்பின் தலைநகரில் அமமைந்துள்ளது.


பிற நாட்டிலிருந்து ன் வரும் கலைஞர்களுடன் ஒர் ஊடாட்டம் உண்டு அதனுடைய தொடர்பு விபுலானந்த அழகியற் கற்கைகள். நிறுவகத்தை வளர்க்க உதவும் என கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் தனது உரையில் கூறியது மிகப் பொருத்தம் உடைத்து கொழும்பு கட்புல ஆற்றுகைப் பல்கலைக்கழக உபவேந்தர்பேரா.மோகன் நெத்தசிங்ஹ உறவுப் பாலம் அமைப்பதில் நமக்கு அதிக சிரத்தை இல்லை எனவும் ஏற்கனவே இ ந்த இரண்டு இனங்களிடையேயும் பாலங்கள் இருந்திருக்கின்றன அவற்றை பலப்படுத்தலே இன்று நாம் செய்ய வேண்டியது என்றும் கூறினார் நான் உரையாற்றும் போது
“இன உறவுக்காக இது கால வரை செயல்பட்ட எம் போன்ற வயது போன பழம் தலை முறை
வாழ்வின் சாயங்காலப் பொழு தில் இன ஒற்றுமையில் பெரும் நம்பிக்கைய ற்றவர்களாக. வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அனுபவம் எமக்களித்த பாடம் அது ஆனால். இந்த நிகழ்வுகள் பெரு நம்பிக்கையை தருகின் றன. பணிப்பாளர் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கொழும்பு பல்கலைக்கழக உவேந்தர் ஆகியோர் வயதில் மிக மிக இளையவர்கள் இந்த இளம் தலைமுறையின் முன்னெடுப்பு மேலும் நம்பிக்கை தருகிறது எனவும் இந்த முயற்சிகள் தொடர வேண்டும் எனவும் என் உரையில் கூறினேன் என் உரையை நான் தமிழிலே நிகழ்த்த அதனை அந்த நிறுவகத்தின் நாட்டிய விரிவுரையாளர் செல்வி நிலங்கா அழகாக சிங்கள மொழியில் கூறினார் மாணவர்களிடையே இருந்து வந்த கைதட்டல் அந்தக் கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு சான்றாக அமைந்திருந்தது.

கலை உறவை ஏற்படுத்தட்டும் அந்தக் கலை கலையாக வெளிப்படட்டும் ஒரு மரபிலிருந்து இன்னொரு மரபு பெற்றுக் கொள்ளட்டும் இரு மரபுமே இலங்கை மரபு என்ற உணர்வு அனைவருக்கும் தோன்றட்டும்
மௌனகுரு Thangarajah Tharmalingam அழகான, அவசியமான கலைப்பதிவு வாழ்த்துகள் ஐயா!

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More