Home இலங்கை வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து, பெண் ஒருவர் மரணம்!

வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து, பெண் ஒருவர் மரணம்!

by admin

வெள்ளவத்தை காவற்துறைப்  பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயார் என்பதுடன், அவரது கணவர் நேற்று முன்தினம் தனிப்பட்ட தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் 8வது மாடிக்கு சென்று அதிலிருந்து குதித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More