பாணந்துறை, பல்லேமுல்ல பிரதேசத்தில் மோட்டார்...
-
"சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது" , "பலத்த கூச்சல் போடும் குளத்துத் தவளைகளால் என் நிம்மதி தொலைகிறது" , "வீட்டுக்குப் பக்கத்தில் சாணம் மணக்கிறது".. "கூரையில் புறாக்கள் புறுபுறுக்கின்றன..""வீதி வளைவில் கழுதை கனைக்கிறது..."" வயலில் சூடடிக்கும் சத்தம் என் ஜன்னலில் கேட்கிறது... ".. கோவில் மணி ஓசை கிட்டவாய் ஒலிக்கிறது.." -இப்படியெல்லாம் அயலோடு குற்றம் குறைபட்டுக் கொண்டு யாரும் இனிமேல் நீதிமன்றங்களை நாடமுடியாது.
கிராமங்களில் இது சகஜம். இந்த உணர்வுப் பாரம்பரியத்தோடு சேர்ந்து வாழுங்கள்...இவ்வாறு நகரங்களில் இருந்து வருவோருக்குப் புத்தி சொல்கிறது புதிய பிரெஞ்சுச் சட்டம்.கிராமச் சூழல்கள் சார்ந்த உணர்வு களுக்கென்று தனியான பாரம்பரியம் இருக்கிறது. நகரமயமாகி வருகின்ற உலகில் கிராம உணர்வுப் பாரம்பரியங் களைத் தக்க வைப்பதற்குப் பெரும் போராட்டங்களை நடத்தவேண்டி இருக்கிறது.
பிரெஞ்சுக் கிராமத்தவர் களின் அத்தகைய நீண்ட காலப் போராட்டங்களுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. பிரான்ஸின் கிராமங்களில் அவற்றின் உணர்வுப் பாரம்பரியமான சில விடயங்களுக்குச் சட்டப்பாதுகாப்பை வழங்கும் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேறி உள்ளது.பிரெஞ்சு மொழியில் 'La loi visant à protéger le patrimoine sensoriel des campagnes' என்று பெயரிடப்பட்ட அந்தச் சட்டம் கிராமங்களின் வாசனைகள், ஒலிகள், விவசாய நடவடிக்கைகளுக்குச் சட்டரீதியான பாதுகாப்பை வழங்கும்.
மாடுகள், மந்தைகளின் சத்தம்.. சேவல் கொக்கரிப்பு,கழுதைகளின் வாசனை, மணி ஓசை, மரம் அரியும் ஆலையின் சத்தம், இரவில் செய்யும் விவசாய நடவடிக்கைகளின் ஒலிகள், சாணத்தின் மணம்.. தவளைகளின் ஒப்பாரி.. குதிரைகளின் குளம்பு ஒலி.. இப்படிப் பலவிதமான கிராமங்களின் உணர்ச்சிப் பாரம்பரியங்களை இனிமேல் யாரும் சட்டச் சிக்கலுக்கு இழுக்க முடியாது.
தனிமையையும் வெறுமையையும் பெருக்கும் நகர வாழ்வை விட்டு வெளியேறிக் கிராமப் புறங்களில் சொத்துக்களை வாங்கிக் கொண்டு குடியேறுவோர் அங்கு கிராமங்களின் தனி இயல்புகளுடன் அடிக்கடி முரண்படுகின்றனர்.நகர வாழ்வின் நெரிசல் மிகுந்த குடியிருப்புகளில் இரவு பத்து மணிக்குமேல் யாரும் அயலவருக்கு இடையூறாகச் சத்தம் எழுப்புவதை சட்டங்கள் தடுக்கின்றன.
நீண்டகாலம் நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விட்டவர்கள் கிராமங்களுக்குச் சென்று வாழ்க்கையைத் தொடங்கும் போது அங்கு சூழலில் இயல்பாக உள்ள இயற்கையான ஓசைகள், ஒலிகளை தங்களுக்கு இடைஞ்சலாக உணர்கின்றனர்.அடுத்த வீடுகளுடன் அயல் சண்டைகள் வெடித்து விவகாரங்கள் நீதிமன்றம் வரை செல்கின்றன.பக்கத்து வீட்டு சேவல் தினமும் காலையில் பலத்த சத்தமாய் கூவித் தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் குற்றஞ்சாட்டி அயலவர் ஒருவர் தொடர்ந்த வழக்கு நாடளாவிய கவனத்தை ஈர்த்தது. 'மொறிஸ்' என்ற பெயர் கொண்ட அந்தச் சேவல் நீதிமன்றம் வரை சென்று வழக்கில் வென்று உலகப் பிரபலம் பெற்றது.
பிரான்ஸின் கிராமங்களில் இருந்து இதுபோன்ற அயல் சண்டை வழக்குகள் பற்றிய செய்திகள் தினமும் வருகின்றன.கிராமம் ஒன்றுக்கு நகரில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்தில் தெருக்களில் சாணம் கிடப்பதைக்கண்டு முறையிட்டனர். இன்னுமொரு சம்பவத்தில் சிறிய தேவாலயம் ஒன்றின் மணி தினமும் காலையில் ஏழு மணிக்கு ஒலிப்பதை ஆட்சேபித்து அந்த நேரத்தை மாற்றுமாறு கேட்டனர்.உள்ளூர் நிர்வாகத்தின் தலைவர் அதற்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டார். உள்ளூராட்சி சபைத் தலைவர் ஒருவர் வீதிகளில் "வளைவு வருகிறது கவனம்" என்று எச்சரிக்கை அறிவிப்புப் பலகை வைப்பதுபோல் "கிராமம் வருகிறது கவனம்" எனப் பயணிகளை எச்சரிக்கும் பாணியில் அறிவிப்புப் பலகை ஒன்றை தனது கிராமத்தின் நுழைவாயிலில் பொருத்தி சர்ச்சையைக் கிளப்பினார்.குதிரைகள், கழுதைகளின் லாயங்களில் இருந்து கெட்ட மணம் வீசுவதாக முகம் சுழிப்போருக்குப் பதிலடி கொடுப்பதற் காகவே அந்த உள்ளூர் மக்களின் பிரதிநிதி அப்படிச் செய்தார்.
கிராமங்களில் அவற்றின் தனித்துவங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற இத்தகைய முரண்பாடுகளுக்குத் தீர்வு காணவும் கிராமங்களின் சூழல் சார்ந்த உணர்வுப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்கின்ற நோக்குடனுமே புதிய சட்டத்தைப் பிரான்ஸின் நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.அந்தந்தக் கிராமங்கள் தத்தமது பகுதியின் உணர்வுப் பாரம்பரியமான ஒலிகள், வாசனைகளைப் பட்டியலிட்டுத் தயாரித்துப் பதிவேடு ஒன்றைப் பேணி அவற்றை பாதுகாப்பதற்குப் புதிய சட்டம் அனுமதிக்கிறது.கிராமங்களில் வீட்டையோ வளவையோ வாங்கிக் கொண்டு குடியேற வருகின்ற நகர வாசிகள் சொத்துக்களை வாங்குவதற்கு முன்பாக அங்கு காணப்படுகின்ற அயல் அம்சங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு டையவர்களாக இருப்பதை இச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. #கிராமங்களின் #ஓசைகள் #வாசனைகள் #சட்டப்பாதுகாப்பு #பிரான்ஸ்
-
------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.23-01-2021
{{retweet_count}}{{favorite_count}} -
லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 43 புலம்பெயா்ந்தோா் உயிாிழந்துள்ளதுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனா்.
லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே உள்ள கடற்கரை நகரான ஷவையாயிலிருந்து படகில் அதிகளவில் புலம்பெயா்ந்தோரை ஏற்றிச்செல்லப்பட்ட நிலையில் நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்தமையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் படகில் பயணித்த பெரும்பாலானோர் 43 போ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் நிலையில் 10 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்
அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கின்றதனால் விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு கப்பல்கள் செல்ல முடியாத நிலையினாலேயே இந்த படகு விபத்தில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனா் என அகதிகள் நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். #படகு #விபத்து #புலம்பெயா்ந்தோா் #பலி #லிபியா
{{retweet_count}}{{favorite_count}} -
இலங்கையில் நீடித்த அமைதிக்கும் தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும்.இவ்வாறு அதிபர் எமானுவல் மக்ரோனிடம் அவசர வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர்.
பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரான்ஸின் பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள தீவுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அந்தக் கடிதத்தில் ஒப்பம் இட்டுள்ளனர்.
இலங்கையில் தமிழ் சமூகம் தற்போது எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழ்நிலை மீது கவனத்தைக் குவிக்கும் நோக்குடன் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் -
போருக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் உண்மையான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் வஞ்சகத்தனமான வேறு வடிவங்களில் முன்னெடுக்கப் படுகின்றன.
2015 ஐ. நா. தீர்மானத்தில் கூறப்பட்டவாறு ஒர் இடைக்கால நீதிச் செயல்முறையை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தவறி விட்டது.
போர் குற்றவாளிகளைத் தண்டிப்பது உட்பட பாதிக்கப்பட்ட தமிழர்களது நிலங்களை மீளளிப்பது, இழப்பீடுகளை வழங்குவது போன்றவற்றை உள்ளடக்கிய பொறிமுறையை இலங்கை நிறைவேற்றவில்லை.
தமிழர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள், கருத்துக்கள் அங்கு மேலெழுகின்றன.
தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு தமிழர்களுக்கு எதிராக அரசியல் நிர்வாகம் கையாளப்பட்டு வருகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் மீது சித்திரவதைகளும் கண்காணிப் புக்களும் தொடர்கின்றன.
மறுபுறத்தில் சிங்கள படைகளைச் சேர்ந்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படுகிறது.
உள்நாட்டுப் போரில் யுத்தக் குற்றங்கள், மனிதத்தன்மைக்கு எதிரான மீறல்களைப் புரிந்தவர் என்று பகிரங்கமாக அறியப்பட்ட சவீந்திர சில்வா நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-இவ்வாறு அந்தக் கடிதத்தில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையில் உண்மையான - நீடித்த - பகிர்ந்து கொள்ளப்பட்ட - அமைதியின் வெற்றிக்கு பிரான்ஸ் தனக்கிருக்கும் அனைத்து செல்வாக்குகளையும் பயன்படுத்தி அவசரமாக உதவ வேண்டும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர்களது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.மக்ரோனுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்டிருக்கும் உறுப்பினர்கள் விவரம் :
- Jean-Christophe Lagarde – MP for Seine-Saint-Denis – Member of the study group on the Tamil people
- Marie-George Buffet – MP for Seine-Saint-Denis – President of the study group on the Tamil people
- Clémentine Autain - MP for Seine-Saint-Deni
- François Pupponi - MP for Val-d'Oise – Member of the study group on the Tamil people
- Jean-Félix Acquaviva – MP for Haute-Corse
- Emmanuelle Anthoine – MP for la Drôme
- Ericka Bareigts – MP for Réunion
- Olivier Damaisin – MP for Lot-and-Garonne
- Alain David – MP for Gironde
- Caroline Fiat – MP for Meurthe and Moselle
- Régis Juanico – MP for Loire
- Yannick Kerlogot – MP for Côtes d'Armor
- Sonia Krimi – MP for Manche
- Jean-Paul Lecoq – MP for Seine-Maritime
- Paul Molac – MP for Morbihan
- Sébastien Nadot – MP for Haute-Garonne
- Bérengère Poletti – MP for Ardennes
- Gabriel Serville – MP for Guyane
- Eric Straumann – MP for Haut-Rhin
- Michèle Victory – MP for l'Ardèche
- Sylvia Pinel – MP for Tarn-et-GaronneFélix Acquaviva – MP for Haute-Garonne
குமாரதாஸன். பாரிஸ்.22-01-2021
{{retweet_count}}{{favorite_count}} -
படக்குறிப்பு,அதிபராக ஜோ பைடன். அமெரிக்க ஜனாதிபதியாக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே அதிக ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதற்குமுன் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கையைவிட பைடன் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கை அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பதவியேற்ற முதல் நாளில் பைடன் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகள் 15. ஜனாதிபதியின் குறிப்புகள் என்று பொருள்படும் பிரசிடென்ஷியல் மெமோக்கள் -2.
பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும், கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் - முகக் கவசம்
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை சேர்ப்பதற்கான நடைமுறையைத் தொடக்குவதற்கான ஒரு நிர்வாக உத்தரவைப் பைடன் பிறப்பித்தார். பருவநிலை மாற்றம் புதிய அமெரிக்க நிர்வாகத்தின் முன்னுரிமைகளில் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ் எல் குழாய் அமைப்புத் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட ஜனாதிபதி ஒப்புதலை பைடன் திரும்பப் பெற்றார். இந்த திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பூர்வகுடி அமெரிக்கர்களும் 10 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். வெள்ளிக்கிழமை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பைடன் தொலைபேசியில் பேசும்போது இந்த விவகாரத்தை விவாதிப்பார் என்று வெள்ளை மாளிகையின் புதிய ஊடகச் செயலாளர் ஜென் சாகி தெரிவித்தார்.
அமெரிக்க மக்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது அவசியம் என்பது தொடர்பாகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
முஸ்லிம்கள், மெக்சிகோ, இனப் பாகுபாடு
சில முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத் தடைகளை பைடன் ரத்து செய்து உத்தரவிட்டார்.
மெக்சிகோ - அமெரிக்கா இடையே தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு நிதி அளிக்கும் வகையில் டிரம்ப் பிறப்பித்த அவசரகால உத்தரவை பைடன் திரும்பப் பெற்றார்.
இனப்பாகுபாடு, பாலின சமத்துவம் தொடர்பான வேறு சில உத்தரவுகளையும் பைடன் பிறப்பித்தார்.
உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று கூறிய டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அதற்கான நடைமுறைகளையும் தொடங்கியது. இப்போது அந்த நடைமுறைகள் நிறுத்திவைக்கப்படும். இதனை ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியா குட்டரஸ் வரவேற்றுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு அலுவலகம் அமைக்கப்படும்.
டிரம்ப் காலத்தின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரும் விஷயத்தில் தாமதம் காட்டப் போவதில்லை என்பதும், கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்கா வரலாற்றுச் சிக்கலில் இருக்கும் நிலையில் வேகமாக முடிவெடுக்கவேண்டியதாக புதிய ஜனாதிபதி பதவி இருக்கும் என்பதும் இந்த அதிவேக உத்தரவுகள் வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசில் நிர்வாக உத்தரவுகள் எனப்படும் எக்சிகியூட்டிவ் ஓடர்கள் என்பதன் பொருள் என்ன?நிர்வாக உத்தரவுகளை ஒரு ஜனாதிபதி பிறப்பிக்க முடியும். அவற்றுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறவேண்டியதில்லை.
ஆனால், ஒரு ஜனாதிபதி இப்படி பிறப்பித்த உத்தரவு ஒன்றினை நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்க வழி உண்டு.
நாடாளுமன்ற நிராகரிப்பை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரத்து செய்யவும் முடியும்.
முதல் கபினட் உறுப்பினரை செனட் உறுதி செய்தது!
கபினட் உறுப்பினர்கள் நியமன விஷயத்தில் பைடன் நிர்வாகம் பரிந்துரைத்த பெயர்களில் ஒன்றுக்கு செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
ஏவ்ரில் ஹெய்ன்ஸ் தேசிய உளவு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டதை செனட் உறுதி செய்துள்ளது.
படக்குறிப்பு,ஏவ்ரில் ஹெய்ன்ஸ் 51 வயதான இவர்தான் இந்தப் பதவிக்கு வரும் முதல் பெண்.
இவரது நியமனத்துக்கு ஆதரவாக 84 செனட் உறுப்பினர்களும், எதிராக 10 உறுப்பினர்களும் வாக்களித்தனர். "உளவுத் தகவல்கள் எவ்வளவு கடினமானவையாக இருந்தாலும், அசௌகரியமான தகவல்களாக இருந்தாலும் அவற்றைத் தருவதே தமது பதவி என்று பார்ப்பதாக" அவர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே ஒபாமா நிர்வாகத்தில் தேசியப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் இவர்.
ஆனால், இவரது அரசுப் பணிகளை விட அதற்கு முந்திய இவரது வாழ்க்கை சுவாரஸ்யமானது.
சட்டக் கல்லூரியில் படிப்பதற்கு முன்பு ஜப்பானில் ஜூடோ கற்று அதில் பிரௌன் பெல்ட் வாங்கியவர் இவர். ஒரு பழைய விமானத்தை மீளக் கட்டமைத்து, அதை மீண்டும் சிதைத்தவர். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் படித்தவர். மெக்கானிக் ஷாப்பில் கார் எஞ்சின்களை ரிப்பேர் செய்தவர். தனியாக ஒரு காபி கடை நடத்தியவர். பாலுறவு நூல்களை விற்று பிரபலம் அடைந்த ஒரு புத்தக கடையை நடத்தியவர்.
கேபினட்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறர் பெயர்களுக்கும் செனட் விரைவாக ஒப்புதல் தரவேண்டும் என்று பைடன் நிர்வாகம் விரும்புகிறது. ஆனால், முதல் நாளில் அதற்கான ஒப்புதல் வருவதற்கு வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
BBC
{{retweet_count}}{{favorite_count}} -
அமெரிக்காவின் முதல் பெண், ஆசிய வம்சாவளி, ஆப்பிரிக்க வம்சாவளி துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிசுக்கு முதல் லத்தீன் உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோடோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றார்.
அதிபர் ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகமாக கேப்பிட்டால் வளாகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு நடக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்னர் டிரம்ப் ஆதரவாளர்களால் இங்குதான் வன்முறை நடத்தப்பட்டது.
டொனால்டு டிரம்ப் புறக்கணிப்பு
வழக்கமாக புதிய அதிபரை முன் வாசல் வழியாக பதவியை இழக்கும் அதிபர் வரவேற்பார். ஆனால், இந்நிகழ்வில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளவில்லை.
1869க்கு பின் தமக்கு பின் பதவியேற்பவரின் நிகழ்வில் கலந்துகொள்ளாத முதல் அதிபர் டிரம்ப் ஆவார்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டு வாஷிங்டன் டி.சி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சமூக இடைவெளி விதிமுறைகளும் அமலில் இருந்தன.
பதவியேற்பு விழாவை நேரடியாக பார்க்க அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளின்டன், மற்றும் ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஆகியோர் பைடனின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றார்கள்.
கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் நிகழ்வில் பங்கேற்றவர்களை ஜோ பைடன் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அமெரிக்க தேசிய கீதத்தை பாடகி லேடி காகா பாடினார்.
கறுப்பினத்தைச் சேர்ந்த இளம் பெண் கவிஞர் அமண்டா கார்மன் இந்த நிகழ்வில் உரையாற்றினார். 22 வயதாகும் இவர்தான் அதிபர் பதவியேற்பு விழா ஒன்றில் உரையாற்றியவர்களிலேயே இளம் வயது நபர் ஆவர்.
அதிபரான பின் ஜோ பைடன் முதல் உரையில் பேசியது என்ன?
"இது அமெரிக்காவின் நாள். ஜனநாயகத்தின் நாள். வரலாறு மற்றும் நம்பிக்கைக்கான நாள்" என்று அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், பதவியேற்ற பின்பான தன் முதல் உரையில் தெரிவித்தார்.
"பல சோதனைகளை சந்தித்துள்ள அமெரிக்கா, சவால்களில் இருந்து மீண்டுள்ளது. இன்று என் வெற்றியை அல்ல, ஜனநாயகத்தை கொண்டாடுவோம்" என்று அவர் கூறினார்.
"ஜனநாயம் எவ்வளவு விலைமதிப்பானது என்று நாம் மீண்டும் கற்றுக் கொண்டுள்ளோம். ஜனநாயகம் சற்று பலவீனமானது, ஆனால். இன்று ஜனநாயகம் வென்றிருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
"சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் (கேப்பிட்டோல்) வன்முறை வெடித்தது. ஆனால், இங்கு நாம் ஒரே நாடாக, கடவுளுக்கு கீழ் ஒன்றிணைந்து இருக்கிறோம். கடந்த இரண்டு தசாப்தங்களாக எப்படி நடந்ததோ அப்படி இன்றும் அமைதியான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது."
அதிபராக பதவியேற்ற பின் பேசிய முதல் உரையில், பெண் துணை அதிபரான கமலா ஹாரிஸ் குறித்தும் அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
"180 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வாக்களிக்கும் உரிமை கேட்டு பேரணி நடத்தியபோது, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்னர். ஆனால், இன்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக இங்கு கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். எதுவும் மாறாது என்று கிடையாது" என்று அவர் தெரிவித்தார்.
எனக்கு வாக்களிக்காதவர்களையும் நான் பாதுகாப்பேன் என உறுதி கூறுகிறேன் என்று அவர் பேசினார்.
பர்புள் நிறம் அணிந்த முக்கிய பிரமுகர்கள் - என்ன காரணம்?
புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் பர்புள் நிற ஆடையை அணிந்திருந்தனர்.
இரு கட்சியும் ஒன்றிணைக்கும் வண்ணமாக பர்புள் நிறம் பார்க்கப்படுகிறது. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் நிறமான முறையே சிவப்பு மற்றும் நீல நிறத்தை சேர்த்தால் பர்புள் நிறம் வெளிப்படும்.
இந்த பதவியேற்பு விழாவின் தீம் "அமெரிக்கா யுனைட்டட்" என்பதை குறிக்கும் விதமாகவே பலரும் பர்புள் நிற ஆடையை அணிந்து வந்துள்ளனர்.
BBC
{{retweet_count}}{{favorite_count}} -
வெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் ஏதும் இன்றிவெளியேறினார் ட்ரம்ப்!அமெரிக்காவில் கடந்த 4ஆண்டுகால டொனால்ட் ட்ரம்ப் அத்தியாயம் இன்று அமைதியாக முடிவுக்கு வந்தது.புதிய அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக ட்ரம்ப் அவரது துணைவியார் மெலேனியா (Melania Trump) சகிதம் வெள்ளை மாளிகையை விட்டு அமைதியாகக் கிளம்பினார்.
அங்கு கூடியிருந்தவர் களுக்கு கை அசைத்துப் பிரியாவிடை கூறியவாறு வெளியேறிச் சென்றார்.ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்து விட்டுப் புறப்பட்ட அவர் புதிய அதிபருக்கான செய்தி ஒன்றை வெள்ளை மாளிகையில் விட்டுச் செல்கிறார் என்று தகவல் வெளியாகி யுள்ளது.
அதே போன்று புதிய முதல் பெண்மணிக்கான வாழ்த்து செய்தி ஒன்றையும் மெலேனியா ட்ரம்ப் அங்கு விட்டுச் சென்றுள்ளார். "மரைன் வண்" என்னும் அதிபருக்கான சிறப்பு வான்படைப் பிரிவின் (Air Force One) வெள்ளை நிறமான விசேட ஹெலிக்கொப்டர் ஒன்று வெள்ளை மாளிகையில் இருந்து ட்ரம்ப் தம்பதிகளை ஏறிக்கொண்டு பறந்த காட்சிகள் உலகெங்கும் தொலைக் காட்சிகளில் வெளியாகின.
பின்னர் அன்றூஸ் கூட்டுப் படைத்தளத்தில் (Joint Base Andrews) இருந்து அதிபரது கடைசி உத்தியோகபூர்வ விமானப் பயணம் புளோறிடா நோக்கி ஆரம்பித்தது.அங்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் பிரியாவிடை உரை நிகழ்த்திய அவர், "வேறு வழிகளில் மீண்டும் திரும்பி இங்கு வருவோம்" என்று குறிப்பிட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வோஷிங்டனை விட்டு வெளியேறியுள்ள டொனால்ட் ட்ரம்ப் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற வாழ்நாள் அந்தஸ்துடன் புளோரிடாவில் தனது வாழ்க்கையைத் தொடரவுள்ளார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜூன் 14, 1946 இல் பிறந்த டெனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக வருவதற்கு முன்னர் பிரபல வர்த்தகர்கவும் தொலைக்காட்சிப் பிரபலமாகவும் விளங்கியவர். அமெரிக்காவில் மட்டுமன்றி உலக அளவிலும் எதிர்பார்த்ததுக்கு மாறாக அதிபரது வெளியேற்றம் எந்தவித குழப்பங்களோ இழுபறிகளோ இன்றி அமைதியாக முடிவடைந்துள்ளது. ட்ரம்ப் இறுதி நேரத்தில் இராணுவச் சட்டத்தை அமுல் செய்து பதவியில் நீடிப்பார் என்பது உட்பட பல்வேறு ஊகங்கள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூட காணப்பட்டன. அவரது இறுதிக்கட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து உலகெங்கும் அமெரிக்க இராணுவத் தளங்களில் நேற்று முழு உஷார் நிலை பேணப்பட்டதாக செய்திகள் வெளியாகின. தலைநகர் வோஷிங்டன் தேசிய காவல் படையின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.
குமாரதாஸன். பாரிஸ்.20-01-2021
{{retweet_count}}{{favorite_count}} -
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து நேற்றுவரை பக்க விளைவுகள் சம்பந்தமாக 139 அறிக்கை கள் பதிவாகி இருக்கின்றன. ஊசி ஏற்றிய பின்னர் நிகழ்ந்த ஐந்து உயிரிழப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் சுகாதார அமைச்சு இத்தகவல் களை வெளியிட்டிருக்கிறது.
மூன்று உயிரிழப்புகள் நான்ஸியிலும் (Nancy) ரூர் (Tours) மற்றும் மொம்பெலியே (Montpellier) பகுதிகளில் தலா ஒவ்வொன்றுமாக ஐந்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவை 75 வயதுக்கு மேற்பட்டவர்களுடைய இறப்புகள் ஆகும்.
ஒவ்வாமை போன்ற எந்தவித பக்கவிளைவுகளையும் வெளிப்படுத்தாத இவர்களது மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்பது பூர்வாங்கப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த மரணங்களை "தடுப்பூசியால் நிகழ்ந்த மரணங்கள் என்று கூறுவதை விட தடுப்பூசி ஏற்றிய காலப் பகுதியில் நிகழ்ந்த இறப்புகள்" என்று அழைப்பதே சரியானது ஆகும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் செய்தியாளர்களது கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.
வயோதிபத்தில் பல்வேறு நோய்களாலும் அவற்றுக்கான சிகிச்சைகளினாலும் நொந்து நெடிந்து மிகவும் பலவீனமான நிலையில் இருப்பவர்களது இறப்புகள் கொரோனா வைரஸ் சமயத்தில் மிகவும் இயல்பாக நிகழ்பவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.எதுவாயினும் ஐந்து இறப்புகள் குறித்தும் தடுப்பூசி தொடர்பிலும் முழு அளவில் விசாரணை நடத்தப்படும். வலுவான சந்தேகம் காணப்படும் இடத்து மேலதிக ஆய்வுகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.பிரான்ஸில் நேற்றுவரை நாடெங்கும் 585,664 பேருக்குத் முதல் தடவைக்குரிய தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்ற ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடுமையான, மற்றும் எதிர்பாராத பக்க விளைவுகள் தொடர்பாக 139 அறுக்கைகள் இதுவரை கிடைத்துள்ளன என்று உணவு, மருந்து பக்க விளைவுகளைக் கண்காணிக்கும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் நிகழ்ந்த ஐந்து மரணங்களுடன் சேர்த்து ஜரோப்பாவில் இதுவரை தடுப்பூசியுடன் தொடர்புடைய 71 இறப்புக்கள் பதிவாகி உள்ளன. இங்கிலாந்து, ஜேர்மனி, நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ள அந்த உயிரிழப்புகள் அனைத்தும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுடயவை ஆகும்.
குமாரதாஸன். பாரிஸ்.20-01-2021
{{retweet_count}}{{favorite_count}} -
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் குன் ஹைக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சாம்சங் துணைத் தலைவர் ஜேய் ஒய் லீக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2017-ல் கைது செய்யப்பட்டஅவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மேல்முறையீடு செய்ததன் மூலம் அவருடைய தண்டனை ரத்து செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் வழக்கை உச்ச நீதிமன்றம் சியோல் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியதனையடுத்து நேற்றையதினம் சியோல் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
தென் கொரிய சட்டப்படி 3 ஆண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனைகள் மட்டுமே ரத்து செய்யப்படவோ குறைக் கப்படவோ வாய்ப்புள்ளது. அதற்கு அதிகமாக இருந்தால் தண்டனையை அனுபவித்தாக வேண்டும் என்பதனால் லீக்கு மீண்டும் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓராண்டு சிறையில் இருந்ததால் இரண்டரை ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபரில் நிறுவனத் தலைவரும் லீயின் தந்தையுமான லீ குன் ஹீ காலமான நிலையில் அவருடைய பொறுப்புகளைக் கைப்பற்ற இருந்த நிலையில் இவருக்கு இந்த சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #சாம்சங்_துணைத்தலைவருக்கு #லஞ்சம் #சிறைத்தண்டனை #தென்கொரிய
{{retweet_count}}{{favorite_count}} -
ஜேர்மனியின் தென் கிழக்கு மாநிலமான பவாறியாவில் (Bavaria)மருத்துவமனை ஒன்றில் சுமார் 35 நோயாளிகளுக்கு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பவாறியாவில் Garmisch-Partenkirchen என்னும் பனிச்சறுக்கல் விளையாட்டு நகரில் உள்ள மருத்துவமனையிலேயே 75 தொற்றாளர்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 35 பேருக்கு குழப்பமான புதிய தொற்று அறியப்பட்டிருக்கிறது. அது இங்கிலாந்து மற்றும் தென்னா பிரிக்கா வகையைச் சேர்ந்ததா அல்லது வேறு புதிய வகை வைரஸா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை - பவாறியா மாநில அரசு புதிய வைரஸ் தொற்றைத் தடுக்கு முகமாகப் பொதுப் போக்குவரத்து களிலும் மற்றும் கடைத் தொகுதிகள் போன்ற இடங்களிலும் FFP2 என்னும் காற்று வடிகட்டும் தன்மை அதிகம் உள்ள முகக் கவசங்களை அணியுமாறு தனது மக்களைக் கேட்டுள்ளது.தற்சமயம் பாவனையில் உள்ள சாதாரண மாஸக்குகளும் மக்கள் துணியில் தாங்களே தைத்து அணிந்து கொள்ளும் முகக் கவசங்களும் தீவிர தொற்றும் தன்மைகொண்ட புதிய வைரஸைக் கட்டுப்படுத்த போதாது என்று அறிவியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்தே FFP2 வகை மாஸ்க்குகள் அங்கு கட்டாய பாவனைக்குக் கொண்டுவரப் பட்டுள்ளன.
சாதாரண மாஸ்க்குகளை விட விலை உயர்ந்த FFP2 வகை மாஸ்க்குகள் (full protective filter masks) சுவாசக்காற்றை முழு அளவில் சுத்திகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. பவாறியாவைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பொதுப் போக்குவரத்து களில் இந்த வகை மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கும் யோசனையை ஜேர்மனிய அரசு பரிசீலித்து வருகின்றது.அயல் நாடான ஒஸ்ரிய அரசு பொதுப் போக்குவரத்துகளில் பயணிகள் FFP2 மாஸ்க் அணிவதை ஜனவரி 25 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கி உள்ளது.
துணியில் தைத்த மாஸ்க் வகைகள் புதிய வைரஸ் தொற்றை தடுக்காது!
வேகமாகப் பரவும் புதிய வைரஸிடம் இருந்து தப்புவதற்கு தரமான மாஸ்க் வகைகளை அணியுமாறு பிரான்ஸின் பொதுச் சுகாதாரத்துக்கான உயர் அதிகார சபை(Haut conseil de la santé publique) அறிவுறுத்தி உள்ளது.இரண்டாம் வகைக்குள் (catégorie 2) அடங்கும் துணியினாலான மாஸ்க்குகள் காற்றை வடிகட்டும் திறன் குறைந்தவை. அவை புதிய வைரஸ் தொற்றை தடுக்கக் கூடியவை அல்ல என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
மாற்றமடைந்த இங்கிலாந்து வைரஸ், தென்னாபிரிக்க வைரஸ் என்பன ஜரோப்பாவில் வேகமாகப் பரவி வருவதால் மாஸ்க் அணியும் நடைமுறைகளில் புதிய ஆலோசனை களை சுகாதார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
வீடுகளில் சாதாரண துணியினால் தயாரிக்கப்படுகின்ற மாஸ்க்குகளை அணிவதைத் தவிர்த்து முதலாம் வகைக்குள்(catégorie 1)அடங்கும் மீளக் கழுவிப் பயன்படுத்தக் கூடிய துணியினாலான மாஸ்க்குகளை (masque en tissu réutilisable de catégorie 1) வாங்கி அணியுமாறும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
பொதுச் சுகாதார உயர் அதிகார சபையின் இந்த சிபாரிசுகளை நாட்டில் நடைமுறைப் படுத்துகின்ற தீர்மானத்தை சுகாதார அமைச்சே எடுக்கவேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதில் துணிகளால் தயாரிக்கப்படுகின்ற மாஸ்க்குகள் 70 வீதமும் காற்றை வடிகட்டும் தன்மை கூடிய ரிசுக்களால்(பேப்பர்) முறைப்படி தயாரிக்கப்படுகின்ற(surgical masks and category 1 fabric masks) மாஸ்க்குகள் 90 வீதமும் பாதுகாப்பானவை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குமாரதாஸன் - பாரிஸ்.
{{retweet_count}}{{favorite_count}} -
முறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் காரணமாக, பேரழிவு தரக்கூடிய நிலையொன்றுக்கு உலகம் முகம்கொடுத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வறிய நாடுகளில் உள்ள கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தரப்பினர் தடுப்புமருந்தை பெற்றுக்கொள்ளாத போது, செல்வந்த நாடுகளிலுள்ள இளையவர்கள் அதனை முதலில் பெற்றுக்கொள்வது நியாயமற்றது என ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்ராஸ் அதானம் கேபிாியேசஸ் தெரிவித்துள்ளார்.
49 செல்வந்த நாடுகளில், 39 மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையிலான தடுப்புமருந்துகள் விநியோகப்பட்டுள்ள நிலையில், வறிய நாடொன்றில் 25 தடுப்புமருந்துகளே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் தமது நாட்டில் கொரோனா தடுப்புமருந்தை உருவாக்கியுள்ளதுடன் அமெரிக்க – ஜெர்மனி இணைந்து தயாரித்த பைசா் தடுப்புமருந்து போல, பன்னாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்புமருந்துகளும் உள்ளன.
இவற்றில் பெரும்பாலான நாடுகள், தமது பிரஜைகளுக்கு தடுப்புமருந்தை வழங்குவதற்கே முன்னுரிமையளிக்கின்றன என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை, கொரோனாவிற்கான பதில் நடவடிக்கைகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு மற்றும் சீனா விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
சர்வதேச அவசரகால நிலையை, உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே பிரகடனம் செய்திருக்க வேண்டுமென தொிவித்துள்ள ஸ்தாபனத்தினால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழு பொது சுகாதார நடவடிக்கைகளை சீனா விரைவாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது. #முறையற்ற #கொரோனா_தடுப்புமருந்து #பேரழிவு #உலகசுகாதாரஅமைப்பு #WHO
{{retweet_count}}{{favorite_count}} -
பாரிஸ் பிராந்தியத்தில் நகரங்களுக்கு இடையே குறுந்தூர போக்குவரத்துக்கு 'பறக்கும் றக்சிகள்' (Flying taxis) எனப்படும் சிறிய வான் ஊர்திகள் 2030 ஆம் ஆண்டு முதல் சேவைக்கு வரவுள்ளன.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நகரங்களுக்கு மேலே சேவையில் ஈடுபடவுள்ள பறக்கும் டாக்சிகளின் முதலாவது பரீட்சார்த்த ஓட்டம் வரும் ஜூன் மாதம் பொந்துவாஸில் உள்ள ஓடு தளத்தில் (Pontoise aerodrome) நடத்தப்படவுள்ளது.
பறக்கும் டாக்சி சேவையை நடத்துவதற்கான றக்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவற்றைத் தயாரிக்கின்ற 30 வெளிநாட்டு நிறுவனங்களை பாரிஸ் நகர போக்குவரத்து சேவையினர் தெரிவு செய்துள்ளனர்.இந் நிறுவனங்களில் ஒன்றுக்கே பாரிஸ் நகர றக்சி சேவையை நடத்தும் வாய்ப்புக் கிட்டும். இந்த நிறுவனங்களில் முதலாவதாக ஜேர்மனியின் 'வெலோகொப்ரர்'
(Volocopter) நிறுவனத்தின் றக்சிகளே எதிர்வரும் ஜூன் மாதம் பரீட்சார்த்தப் பறப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பயணப் பொதிகளுடன் இரண்டு பயணிகள், ஒரு விமானி என மூவர் செல்லக் கூடிய அந்த றக்சிகள் மணிக்கு 110 கிலோ மீற்றர்கள் வேகத்தில், 400-500 மீற்றர்கள் உயரத்தில் பறக்கக் கூடியவை.
ஹெலிக்கொப்ரர், ட்ரோன் இரண்டினதும் தொழில்நுட்பங்களை இணைத்து தயாரிக்கப்படுகின்ற இந்த சிறிய வானூர்திகளை பாரிஸ் விமான நிலையங்களின் குழுமமும், RATP போக்குவரத்து சேவை நிறுவனமும் இணைந்து சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளன.2024 இல் பாரிஸில் நடைபெறவிருக் கின்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் போது பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் டிஸ்னி லான்ட் போன்ற உல்லாச இடங்களுக்கு பறக்கும் றக்சி சேவைகளை நடத்தப்போவதாக பிரான்ஸின் 'எயார் பஸ்' நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருப்பது தெரிந்ததே.
குமாரதாஸன். பாரிஸ்.
18-01-2021{{retweet_count}}{{favorite_count}} -
கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய ரஸ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி நாடு திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளாா்
ரஸ்ய ஜனாதிபதி புட்டினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த 44 வயதான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி டாம்ஸ்க் நகரிலிருந்து மொஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அவர் குடித்த தேனீாில் விஷம் கலந்து கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவா் ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்குச் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டடு உடல்நிலை தேறிய நிலையில் அவா் நேற்றையதினம் ஜெர்மனியில் இருந்து ரஸ்யாவிற்கு புறப்பட்டார்.
அவர் ஜெரெமெட்வோ விமான நிலையத்தினை சென்றடைந்ததும் விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளாா் .
நவால்னியின் கைது தொடா்பில் ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் அவரை ந உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நோவிசோக் நச்சுப்பொருளை பயன்படுத்தி, அலெக்சியை கொலை செய்ய முயற்சி நடந்ததை பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #கொலை_முயற்சி #ரஸ்ய #எதிர்க்கட்சித்தலைவர் #கைது #அலெக்சி_நவால்னி{{retweet_count}}{{favorite_count}} -
படக்குறிப்பு,உயர் பதவிகளில் உள்ள பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலின் தொடர்ச்சியாகவே தற்போது நீதிபதி கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த வன்செயல் நடந்துள்ளது.
அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை குறிவைத்தும், உயர் பதவிகளில் உள்ள பெண்களைக் குறிவைத்தும் நடத்தப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த படுகொலை நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து திரும்பி அழைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்த நாட்டில் வன்முறை அதிகரித்து வருகிறது.
திருப்பி அழைக்கப்பட்டவர்கள் போக ஆப்கானிஸ்தானில் தற்போது 2,500 அமெரிக்கத் துருப்புகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை நடந்த திடீர் தாக்குதலில் அந்த இரு நீதிபதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களின் ஓட்டுநரும் காயமடைந்தார்.
காபூலின் காலா-எ-ஃபதுல்லா பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
சமீப கால படுகொலைகளுக்கு தாலிபன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இந்த படுகொலைகளை தாங்கள் செய்ததாக அவர்கள் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபன்களுக்கும் இடையே டோஹாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில்தான் இந்த குறிவைத்த, திட்டமிட்ட படுகொலைகள் நடந்துவருகின்றன.
BBC
{{retweet_count}}{{favorite_count}} -
இந்தோனேசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளதனால் ஜாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறதென தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவிலேயே அதிக அளவில் மக்கள் இந்தத் தீவிலேயே வாழும் நிலையில் இதுவரை மக்களை வெளியேறுமாறு எவ்வித ஆணைகளும் பிறப்பிக்கப்படவில்லை என்பதுடன் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக தொிவிக்கப்படவில்லை. .
செமெரு மலைச் சரிவில் வாழும் கிராம மக்கள் இந்த வெடிப்பு குறித்து அவதானத்துடன் இருக்குமாறு தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் எச்சரித்துள்ளனா்.
எரிமலை வெடிப்பு தொடர்பன காணொளியில், 3,676 மீட்டர் உயரம் கொண்ட எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல் பல வீடுகளின் மேல் இருப்பதைக் காட்டுகிறது.
கடந்த சில வாரங்களில் இந்தோனேசியா பல நிலச் சரிவுகள், சுலாவசித் தீவில் பலமான நிலநடுக்கம், ஸ்ரீவிஜயா விமான விபத்து என பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #இந்தோனேசியா #செமெருமலை #எரிமலை #விமான_விபத்து #நிலநடுக்கம்
{{retweet_count}}{{favorite_count}} -
ஜேர்மனி அதிபர் அங்கெலா மெர்கலின் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (Christian Democratic Union) தலைவராக கட்சியின் மூத்த பிரமுகர் ஆர்மின் லாசெற் (Armin Laschet) தெரிவு செய்யப் பட்டிருக்கிறார்.
வரலாற்றில் முதல் முறையாக கட்சித்தலைவர் தெரிவு அங்கு டிஜிட்டல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றிருக் கிறது. ஒன் லைனில் நடந்த கட்சியின் மாநாட்டில் ஆர்மின் லாசெற் 521 வாக்குகள் பெற்று தலைவராகத் தெரிவானார்.
59 வயதான மையவாதி ஆர்மின் ஜேர்மனியின் மக்கள் தொகை கூடிய North Rhine-Westphalia மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஆவார். அவர் அங்கெலாவின் இடத்துக்கு அதிபர் வேட்பாளராக வருவாரா என்பதை நிச்சயிக்க இன்னமும் பொறுத்திருக்க வேண்டும்.
உலகின் சக்தி மிக்க நாடுகளில் ஒன்றான ஜேர்மனியின் தலைமைப்பதவிக்கு வரக்கூடிய செல்வாக்கு மிக்கவர்களில் கூட்டணிக் கட்சியான கிறிஸ்தவ சமூக யூனியனின் (Christian Social Union) தலைவர் மார்கஸ் சோடர்(Markus Soeder) அவர்களும் உள்ளார்.
பவாறியா (Bavaria) என்ற பெரிய மாநிலத்தின் ஆளுநராக அவர் பதவி வகிக்கிறார். ஜேர்மனியில் சான்சிலர் எனப்படும் நாட்டின் அதிபர் பதவியில் கடந்த 16 ஆண்டுகள் நீடித்துவந்த அங்கெலா மெர்கல் அம்மையார் வரும் செப்ரெம்பர் மாதம் பதவிவிலகுகின்றார்.
2005 முதல் அதிபர் பதவியில் நீடித்துவரும் அவர் செப்ரெம்பர் 26 இல் நடைபெறவுள்ள தேர்தலில் ஐந்தாவது தவணைக்காலத்துக்கும் போட்டியிடப் போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.
மைய வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின்(CDU) தலைவர் பதவியில் இருந்தும் விலகி உள்ளார்.இடையில் நடைபெற்ற கட்சித்தலைவர் தெரிவில் வெற்றியீட்டிய கிறம்ப் கரம்போவர் (Kramp-Karrenbauer) அம்மையார் கட்சிக்குள் ஒற்றுமையை நிலைநாட்ட முடியாத சிக்கலில் பதவி விலகி இருந்தார்.
இப்போது கட்சி அதன் தலைவராக ஆர்மின் லாசெற் (Armin Laschet) அவர்களைத் தெரிவு செய்துள்ளது.வைரஸ் நெருக்கடி, அதை கையாண்ட விதம், அதற்குப் பிந்திய பொருளாதார நிலைவரம் என்பன அடுத்த செப்ரெம்பர் தேர்தலில் தாக்கம் செலுத்தும் முக்கிய விடயங்களாக இருக்கும்.
குமாரதாஸன். பாரிஸ்.16-01-2021
{{retweet_count}}{{favorite_count}} -
பிரித்தானியா அதன் தரை, ஆகாய, கடல் வழிகள் அனைத்தையும் திங்கள் காலைமுதல் அடைக்கவுள்ளது. ஏதேனும் காரணத்துக்காக உள்ளே பிரவேசிக்கும் அனைவரும் 72 மணித்தியாலத்தினுள் செய்யப்பட்ட வைரஸ் பரிசோதனை நெக்கடீவ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பத்துநாட்கள் வரையான தனிமைப்படுத்தலுக்கும் இணங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படு கின்றது.
விதிகளை மீறுவோர் அபராதங்களையும் எதிர்கொள்ள நேரிடும். நாடு உள்நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸின் படுவேகமான பரவலில் சிக்கித் தடுமாறிவருகின்றது. இந் நிலையில் பிறேசில் வைரஸ் போன்ற வெளிநாட்டுத் தொற்றுகளும் உள்ளே பரவிவிட வாய்ப்புள்ளதால் நாட்டின் வெளித் தொடர்புகளைக் கடுமையான முறையில் இறுக்கி மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கள் முதல் அமுலுக்கு வருகின்ற போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் பெப்ரவரி 15 வரை நடைமுறையில் இருக்கும் என்று பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது டவுனிங் வீதி (Downing Street) வாசஸ்தலத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார்.
பிறேசிலில் அமசோன் மாகாணத்தில் தோன்றியுள்ள சந்தேகத்துக்குரிய புதிய வைரஸ் கிருமி பற்றிய அச்சம் காரணமாக சகல தென் அமெரிக்க நாடுகளுடனான போக்குவரத்துகளையும் பிாித்தானியா நேற்று வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தி உள்ளது.
உலகம் கொரோனா வைரஸின் முதலாவது நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முன்னரே அதன் மாற்றமடைந்த புது அவதாரங்கள் உலகை அச்சுறுத்தத் தொடங்கி உள்ளன. உரு மாறிய வைரஸின் பரவல் பற்றி அவசரமாக ஆராய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலக் கூட்டம் குறித்த நாளுக்கு 15 தினங்கள் முன்பாகக் கூட்டப்பட்டுள்ளது. #பிறேசில்_வைரஸ் #அச்சம் #பிரித்தானியா #உருமாறிய_கொரோனா
-------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.
{{retweet_count}}{{favorite_count}} -
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் அங்கிருந்த நோயாளிகள், ஊழியர்களில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள றிலையில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதிகளவானோார் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேவேளை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை எனற் போதிலும் இரண்டு முதன்மை நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதனால் நிலடுக்கத்துக்குப் பிந்திய வலுவான அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் சுனாமி ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக அதிகாரிகள் தொிவித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. .#இந்தோனேசியா #நிலநடுக்கம் #சுனாமி #மருத்துவமனை #பலி
{{retweet_count}}{{favorite_count}} -
இலங்கை அரசு , மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை!
2009 போரின் முடிவின்போது , முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் மக்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துள், பாதிக்கப்பட்ட மாணவர்களால் நிறுவப்பட்டிருந்த நினைவிடம் இரவோடிரவாகத் தகர்க்கப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். வெறுமனே மீள அடிக்கல் நடுவதோ ,மாணவர்களின் போராட்டத்தினை இதன் மூலம் முடித்து வைப்பதோ தீர்வாகாது!
அழிக்கப்பட்ட நினைவிடம் மீள உடன் கட்டியெழுப்பப்படல் வேண்டுமென்றும் அதன்போது முன்னைய நினைவிடத்தின் தகர்க்கப்பட்ட எச்சங்களும் பேணப்பட வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றோம். நினைவிடங்களை அழிப்பது ,நினைவுகளை ஆழமாக்கி மேலும் வலுப்படுத்தும் என்பதை அதிகாரங்கள் அறியாது!.
ஒருபுறம், போர் வெற்றியைக்கொண்டாடும் சின்னங்களையும் சிற்பங்களையும் நிர்மாணித்துப் பேணி வருகிறது இலங்கை அரசு . மறுபுறத்தில் நீண்டகால அரசியல் ஒடுக்குதலின் வழியாக கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் தமிழ் மக்கள் அமைத்த நினைவுச் சின்னங்களைத் தகர்க்கிறது . நினைவு கூரும் அடிப்படை உரிமையையும் அவர்களுக்குத் தடை செய்கிறது.
நினைவிடங்களை இடிப்பதும், ஒடுக்கப்படும் மக்களின் வரலாற்றையும் மரபையும் சுவடுகளையும் அடையாளங்களையும் அழிப்பதும் கொடுங்கோன்மை அரசுகளதும் வெற்றியில் திளைப்போரதும் வழமை. எனினும், இப்போதுள்ள மூர்க்கமான இலங்கை அரசு மிகவும் திட்டமிட்ட வகையில் தமிழ், முஸ்லிம் , மலையக மக்களுக்கு எதிராக வெளிப்படையாக இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது முழு இலங்கையும் சிங்கள பௌத்த மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதைப் போலியாக நிறுவ முயலும் ஒரு பாரியதொல்லியல், பண்பாட்டு , மரபுரிமைத்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
ஏற்கெனவே வடக்கிலும் கிழக்கிலும் நினைவிடங்களையும் சிலைகளையும் இடித்துத்தகர்த்த வரலாறு இலங்கை அரசாங்கங்களுக்கு இருக்கின்றன. 1974 இல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று கொல்லப்பட்டவர்களுக்காக நிறுவப்பட்ட நினைவுத் தூண்கள் எத்தனை தரம் இடிக்கப்பட்டன என்பதை நாங்கள் அறிவோம். யாழ் நூலக எரிப்பு ஒரு வரலாற்று, பண்பாட்டு அழிப்பாகும்.
இன்றைய இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையின் எல்லா மக்களுக்கும் எதிரான கொடும் ஒடுக்குமுறையை முன்னெடுத்து வருகிறது. கொரோனாவை காரணம் காட்டி ,மரணிக்கும் முஸ்லிம் ,கிறிஸ்தவ மக்களின் உடல்களை ,அம்மக்களின் மரபு , நம்பிக்கைகளைப் புறம் தள்ளி விட்டு, சர்வதேச நியமங்களையும் மீறி எரித்து வருகிறது.முஸ்லிம் வெறுப்பை பகிரங்கமாகவே விதைக்கிறது. தமிழ் ,முஸ்லிம், மலையக மக்களுக்கு மத்தியில் அச்சத்தினையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் முகமாகவே அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம் பெற்றுவருகின்றன என்பதை மிகுந்த கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
போரில் அநியாயமாக கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்தினை, அவர்தம் மக்கள் நினைவுகூர்வதும் , அதற்கு நினைவுச் சின்னம் அமைப்பதும் , அதனை பேணுவதும் அம்மக்களின் அடிப்படை உரிமையாகும். அந்த மக்களைப் போரில் கொன்ற இலங்கை அரசாங்கம் இதனை தொடர்ச்சியாகவே மறுத்து வருகிறது. அதனை நினைவு கூரும் அடையாளங்களை அரசியல் , இனவாத மேலாதிக்க நோக்கில் அழித்தொழித்து வருவது அழிப்பின் தொடர்ச்சியான செயலே ஆகும். இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு , மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறாமல், அரசாங்கம் மேலும் மேலும் வேண்டுமென்றே நல்லிணக்க செயல்முறைகளைத் தவிர்த்து வருகிறது.
இந்த ஒடுக்குமுறை இனவாத அரசுக்கு எதிராக , பல்வேறு வழிகளில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களும், சமூகங்களும் ஒன்றிணைந்து முன் செல்வது காலத்தின் தேவை.இந்த இனவாத, ஒடுக்குமுறை அரசின் தன்மையை சிங்கள மக்கள் புரிந்து கொள்வது முக்கியம்.சிங்கள மக்களின் தார்மீக ஆதரவுதான் ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான மிகப்பெரும்பலமாகும்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவிடத்தைத் தகர்த்தமைக்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம் மக்களும், மலையக மக்களும் , தென்னிலங்கை ஆதரவுச் சக்திகளும் பரவலாக இணைந்து கொண்டமை ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுத் தோழமை வலுப்படுவதைக் காட்டுகிறது. இத்தகைய உணர்வுத் தோழமையின் வலுவும் தொடர்ச்சியும் வீச்சும்தான், ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்கான நம்பிக்கையாக அமைவதுடன் , ஒடுக்குதலை எதிர்கொள்வதற்கான பலமாகவும் அமையும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
0000
ACTIVITY CENTRE FOR TAMIL LANGUAGE COMMUNITIES (ACT)
12 01 2021கடந்த 10ம் திகதி, இலங்கையை தாயமாகக் கொண்ட பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் ZOOM ஊடாக நடாத்திய கலந்து ரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் வழியாக தொகுக்கப்பட்ட அறிக்கை.
இதில் பின்வருவோர் ஒப்பமிட்டுள்ளனர்
The following people have signed the statement:- Cheran Rudhramoorthy – Canada – Professor
- M. Fauzer – UK – Activist
- N. Shanmugaratham – Norway – Professor
- Ranjith Henayaka – Germany - Activist
- N. Suseendran – Germany – Activist
- A. Charles - UK - Activist
- S. Najimudeen – Canada – Doctor
- Althaff Mohideen – UK- Academic
- S.Sivarajan – Germany- Activist
- S.SugunaSabesan – UK- Artist
- Uma Shanika - Germany - Activist
- Mohamed Nisthar – UK – Lawyer
- Thiru Thiruchothi – France- Activist
- Steven Pushparajah – Norway – Engineer
- Mcm. Iqbal- UK – Activist
- Km . Ganesha – UK – Accountant
- Niyas A Samad – Sri Lanka – Engineer
- Baazir Rahman – UK – Journalist
- V. Sivalingam – UK – Activist
- Selvadurai Jeganathen - Germany – Activist
- Mohamed Saiful islam – Ireland – Activist
- Arulmala Arumynaygam – UK – Lawyer
- Mathavy Shivaleelan – UK – Teacher
- Mohamed Ariff – UK – Self Employee
- M.Y.M Siddeek – UK – Academic
- Puthiyavan Rasaiya – UK – Film Director
- Ajazz Mohamed – Sri Lanka – Lawyer
- Sam Sampanthan – UK – Activist
- Muise Wahabdeen – Switzerland – Activist
- Abdul Niyas – UK – Self Employee
- TLM Jemseed – UK – Accountant
- Ahmed Miskath – UK – Activist
- Anton Joseph – Germany – Activist
- Suthan Raj – France – Journalist
- Ruban Sivaraja – Norway – Engineer
- Abdul Razique – Sri Lanka – Self Employee
- SK .Vickneaswaran – Canada – Activist
- Balasundram – France – Activist
- Rajani Iqbel – UK – Activist
- A. Thayananthan - Netherland – Self Employee
- Thiva Jayabakrishan – UK - Self Employee
- Hakeem Aswer – Sri Lanka – Student
- P. Jesurathnam – UK – Activist
- Jifry Anver – Thailand – Self Employee
- Azhar Omar – Sri Lanka – Self Employee
- Senaka Wattegedera - Germany – Activist
- R. Ramesh – Sri Lanka – Self Employee
- Elm. Irshath – Sri Lanka – Self Employee
- Thambiah Thayaparan- UK- Biochemist
- Waffa Farook - Sri Lanka- Activist
- Ravi Ponnudurai- Canada- Activist
- Kokula Ruban - UK – Activist
- Padmi Liyanage – Germany – Activist
- Villa Anandaram- Canada- Activist
- Jazeel Fazy - UK – Activist
- Sithi Vinayaganathen – Norway - Activist
{{retweet_count}}{{favorite_count}} -
இலங்கை உள்ளிட்ட ஆசிய வலயத்துக்கு உட்பட்ட 11 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஜப்பானுக்குச் செல்ல இன்று(14) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலையடுத்து அந்நாட்டு தேசிய கொள்கைத்திட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, தாய்லாந்து, தாய்வான், ஹொங்கொங், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென் கொரியா, சீனா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஜப்பானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் 4 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
{{retweet_count}}{{favorite_count}} -
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளனா்.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் வன்முறையில் ஈடுபடுமாறு ட்ரம்ப் தமது ஆதரவாளர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும், எதிராக 197 வாக்குகளும் கிடைத்துள்ளன.
ல மணி நேரம் நடைபெற்ற கடுமையான விவாதங்களுக்குப் பின்னா் இந்த கண்டனத் தீர்மானம நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் தேசிய பாதுகாப்புத் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதல் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ள நிலையில், அவருக்கெதிரான குற்றச்சாட்டு தொடா்பில் செனட் அவையில் விசாரணை நடைபெறும். அங்கே அந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால் மீண்டும் அவர் ஜனாதிபதிபதவிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படும்.
எனினும் ஜனவரி 20ம் திகதி அவரதுபதவிக்காலம் முடிவதற்கு முன்பாக மீண்டும் செனட் கூடாது என்பதனால் அவர் பதவி நீக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது #அமெரிக்க_ஜனாதிபதி #டொனால்ட்_டிரம்ப் #கண்டனத்_தீர்மானம் #வன்முறை
{{retweet_count}}{{favorite_count}} -
https://youtu.be/oXYK8Tr7Vjc
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்ட சம்பவமும் அதனால் வெடித்த தமிழர் எதிர்ப்பு நிகழ்வுகளும் உலக அளவில் இளையவர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.
ஜரோப்பாவில் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் பெற்றுவிளங்கும் HugoDécrypte யூரியூப் வீடியோ செய்தியில் நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக சம்பவமும் அதனுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளும் ஒளிபரப்பாகி உள்ளன.
பிரான்ஸின் இளம் ஊடகவியலாளரும் இணைய வீடியோ வடிவமைப்பாள ருமாகிய ஹியூகோ ட்ராவேர்ஸ் (Hugo Travers) வாசித்து அளித்த செய்திப் பதிவிலேயே யாழ். பல்கலைக்கழக விவகாரம் நேற்று முக்கிய இடம்பெற்றிருந்தது.
அண்மைக்காலத்தில் தனது குறுகிய வீடியோ செய்திப் பதிவுகளால் மில்லியன் கணக்கில் இளைய தலைமுறையினரைக் கவர்ந்தவர் ஹியூகோ ட்ராவேர்ஸ்.
யூரியூப் சமூகவலைத்தளத்தில் "ஹியூகோ டெக்ரிப்டே" ("HugoDécrypte") என்னும் பெயரில் அவர் நடத்துகின்ற வீடியோ செய்தித் தொகுப்பிலேயே முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்ப்பு தொடர்பான விடயங்கள் ஒளிபரப்பாகி உள்ளன.
ஹியூகோ ட்ராவேர்ஸ் 1997 இல் பிரான்ஸில் பிறந்தவர். பிரெஞ்சு - இங்கிலாந்து இரட்டைப் பிரஜையான அவர் சிறிய வீடியோ பதிவுகள் ஊடாக இளையோர் மத்தியில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு HugoDécrypte யூரியூப் சனலை 2015 ஆம் ஆண்டில் தொடக்கினார்.
கடந்த ஆண்டு அதன் பயனாளர்களது எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியது.
2019 இல் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அதிபர் மக்ரோன் இளையவர்களின் கேள்விகளுக்கு பதுலளிப்பதற்காக HugoDécrypte வீடியோ தளத்துக்கு செவ்வி வழங்க முன்வந்திருந்தார்.மரீன் லூ பென் உட்பட பல பிரெஞ்சு அரசியல் பிரமுகர்களது செவ்விகளையும் HugoDécrypte ஒளிபரப்புச் செய்துள்ளது.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான நேற்றைய அதன் செய்திப் பகிர்வை பிரான்ஸில் பல்லாயிரக் கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.குமாரதாஸன். பாரிஸ்.
13-01-2021{{retweet_count}}{{favorite_count}} -
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் எதிா்வரும் 20ம் திகதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடைமுறைகளை தடுக்கும் வகையில், டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த 6ம் திகதி நாடாளுமன்றத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த வன்முறையை தொடா்ந்து நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டிவிட்டதாக தொிவித்து டிரம்பை பதவி நீக்கம் செய்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகின. இதற்காக பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் 25-வது திருத்தத்தை பயன்படுத்தி டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நிராகரித்துள்ளார். தனது முடிவை நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் மூலம் அவா் தெரிவித்துள்ளார். #அமெரிக்க_ஜனாதிபதி #டொனால்ட்டிரம்ப் #பதவி_நீக்கம் #மைக்பென்ஸ்
{{retweet_count}}{{favorite_count}} -
உலகக் கத்தோலிக்கர்களது திருத்தந்தை போப் பிரான்ஸிஸ் அவர்கள் இந்த வாரம் வைரஸ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் "Canale 5" தொலைக் காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே பாப்பரசர் தடுப்பூசி ஏற்றவுள்ள தகவலை வெளியிட்டிருக்கிறார்.
வத்திக்கானின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 84 வயதான பாப்பரசரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.
"நெறிமுறைப்படி அனைவருமே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தான் உணர்வதாக" தெரிவித்திருக்கின்ற பாப்பரசர், தடுப்பூசி ஏற்றாதவர்கள் தங்களது சொந்த ஆரோக்கியத்துடன் அடுத்தவரது நலனையும் பாதிப்புக்குள்ளாக்கு கின்றனர் - என்றும் கூறியிருக்கிறார்.புனித பாப்பரசரின் தனிப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான Fabrizio Soccorsi கொரோனா வைரஸுடன் தொடர்புடைய குழப்பமான நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளார் என்ற தகவலை வத்திக்கான் செய்தித் தாள் L’Osservatore Romano வெளியிட்டிருக் கிறது.
78 வயதான மருத்துவர் பொதுவான நோய்களுடன் டிசெம்பர் 26 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.அவருக்கு வைரஸ் தொடர்பான பாதிப்புகள் காணப்பட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மருத்துவர் கடைசியாக பாப்பரசருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவரவில்லை என்று செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன.இந்த நிலையிலேயே பாப்பரசர் தடுப்பூசி ஏற்றவுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
இதேவேளை பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத்தும் அவரது கணவரும் கடந்த சனியன்று வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டனர் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
--------------------------------—-------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.
10-01-2021{{retweet_count}}{{favorite_count}} -
இங்கிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்டவை போன்ற மரபு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றைத் தாங்கள் ஆய்வு செய்துவருவதாக ஜப்பானின் சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.
ரோக்கியோவில் விமான நிலையப் பரிசோதனைகளின்போது பிறேசில் நாட்டில் இருந்து வந்த நால்வரிடம் புதிய தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 40 வயதுடைய ஆண் ஒருவர், 30 வயதான பெண், மற்றும் இரண்டு பதின்ம வயதினர் ஆகியோரே புதிய வைரஸை காவி வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் பிறேசிலின் அமேசோனா(Amazonas) பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப் படுகிறது.
மாறுதல் அடைந்த அந்தப் புதிய வைரஸ் கிருமி குறித்து உலக சுகாதார நிறுவனத் தினதும் ஏனைய நாடுகளினதும் நிபுணர்களோடு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க வைரஸ் தொற்றிய இருபது பேர் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர். அவை வேகமாகப் பரவக்கூடும் என்ற அச்சத்தால் அந்நாட்டு அரசு தலைநகர் ரோக்கியோவில் சுகாதார அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளது.மரபு மாற்றம் அடைந்த வைரஸ் கிருமி தற்போது புழக்கத்தில் உள்ள தடுப்பூசி களை எதிர்க்கும் தன்மையைக் கொண்டிருக்கலாம் என்ற அச்சம் பொதுவாக நிலவுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
10-01-2021{{retweet_count}}{{favorite_count}} -
(படம் :அணுவாயுதங்களை இயக்கும் ரகசியங்கள் அடங்கிய கறுப்பு சூட்கேஸ்கள் விமானத்தில் ஏற்றுவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட ஒரு காட்சி-மார்ச் 2018)பொதுவாக நாட்டின் அதிபர்கள் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கும் சமயத்தில் ரகசியக்காப்பு பிரமாணம் என்ற ஒன்றும் இடம்பெறுவதுண்டு. மிக முக்கிய பாதுகாப்பு ரகசியங்கள், பேரழிவு அணுவாயுதங்களை இயக்குவதற்கு அனுமதிக்கும் ரகசிய குறியீடுகள் (nuclear codes) போன்றவற்றின் பரிமாறுதல்கள் இந்த ரகசியக் காப்புப் பிரமாணத்துள் அடங்கும்.
இரண்டாம் உலகப் போரின் போது அன்றைய அமெரிக்க அதிபர் ஹரி ட்றூமன் (Harry Trueman) ஜப்பானின் ஹீரோஷீமா, நாகஷாகி நகரங்கள் மீது உலகின் முதலாவது அணுகுண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். அதன் பின்னர் அணு ஆயுதத் தாக்குதல் களுக்கான பணிப்புகளை வழங்கும் ரகசியப் பொறிமுறைகள் வெள்ளை மாளிகைக்குள்ளேயே பேணப்பட்டு வருகின்றன.
அணுவாயுதத் தாக்குதல் ஒன்றுக்கான உத்தரவை வழங்கும் பொத்தான்கள் (button) அடங்கிய "அணுப் பந்துகள்" (nuclear football) என்னும் இலத்திரனியல் கருவிகள் வெள்ளை மாளிகையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கறுப்பு சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கருவிகளையும் அவை தொடர்பான ரகசிய ஆவணங்களையும் அணுகும் அதிகாரம் இன்னமும் அதிபர் ட்ரம்பிடம்தான் இருக்கிறது.அதிபரின் முக்கிய இடமாற்றங்களின் போது இந்தக் கறுப்பு சூட்கேஸ்களும் அவரோடு இடத்துக்கிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தாக்குதல் உத்தரவு தன்னால்தான் வழங்கப்படுகிறது என்பதைக் கட்டளைப்பீடங்களுக்கு உறுதிப்படுத்தும் ரகசியக் குறியீடுகள் அதிபருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் வகையில் மிக ரகசியமாகப் பேணப்படுகின்றன.
அணு ஆயுதத் தாக்குதல் உத்தரவு ஒன்றை நிரந்தரக் கட்டளைப்பீடங் களுக்கு அனுப்புவதற்கு முன்னர் அது குறித்து அதிபர் முதலில் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதிக்கு (Chairman of the Joint Chiefs of Staff)தெரிவிக்க வேண்டும் என்று இராணுவ ஆவணங்கள் கூறுகின்றன.
அண்மைய நாட்களில் ட்ரம்பின் நடவடிக்கைகள் குறித்துக் கவலை கொள்வோர் அணு ஆயுதக் குறியீடுகள் (nuclear codes) தொடர்பான அச்சத்தையும் எழுப்புகின்றனர்.
நிதானம் தவறி நடக்கின்ற அதிபர் வேண்டும் என்றே ஒரு போரைத் தொடக்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கக் கூடும் என்ற சந்தேகம் அமெரிக்கப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆலோசகர்களிடம் காணப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப் குறித்தும் அணு ஆயுதங்களை இயக்கும் ரகசிய குறியீடுகள்(nuclear codes)பற்றியும் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியுடன் (Chairman of the Joint Chiefs of Staff) ஆலோசனை நடத்தியிருப்பதாக சபாநாயகர் நான்ஸி பெலோசி (Nancy Pelosi) அம்மையாரும் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தங்கியுள்ள தனது கடைசி நாட்களில் அவர் அணுவாயுத ரகசியங்களை அணுகுவதைத் தடுக்குமாறு பென்டகன் அதிகாரிகளிடம் அவர் கேட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் வரலாற்றில் அதிபர் ஒருவர் நாட்டின் தேசியப் பாதுகாப்புத் தொடர்பான இத்தகைய ஐயங்களுக்கு உள்ளாகுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதேவேளை - காங்கிரஸ் கட்டடத்தில் நடந்த சம்பவங்களை அடுத்து அதிபர் ட்ரம்பை சுற்றி உருவாகிய அழுத்தங்கள் மேலும் இறுகி வருகின்றன. முகநூல், ருவீற்றர் போன்றன ட்ரம்ப்பின் கணக்குகளை முடக்கியதால் அவர் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்.ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் புதிய அதிபரது பதவியேற்பு நிகழ்வில் பதவி விலகும் அதிபர் கலந்துகொள்ளும் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. 1869 ஆம் ஆண்டு அன்றைய அதிபர் அன்றூ ஜோன்சனுக்குப் (Andrew Johnson) பிறகு பதவியேற்பு நிகழ்வைப் புறக்கணிக்கின்ற முதலாவது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவார்.
பைடன் பதவியேற்பதற்கு முன்னராக மிக வேகமான குற்றவிசாரணைச் சட்ட நடவடிக்கை ஒன்றின் மூலம் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் இருந்து தூக்குவதற்கான தீவிர ஆலோசனைகள் தொடர்ந்து இன்னமும் நடைபெற்று வருகின்றன.குமாரதாஸன். பாரிஸ்.
09-01-2021{{retweet_count}}{{favorite_count}} -
இந்தோனேசிய விமானம் விபத்துக்குள்ளான கடல் பகுதியில் இருந்து மனித உடல்களின் பாகங்கள் மற்றும் விமான பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் விழுந்த ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகின்ற நிலையில்
நேற்று நடந்த மீட்பு பணியின்போது விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பாகங்கள் காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா? என்பது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்தநிலையில் ஜாவா கடற்பகுதியில் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மனித உடல்களின் பாகங்கள் மற்றும் உடைகளை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். எனவே, விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளதாகவும் விமனத்தில் பயணித்த பயணிகளில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை எனவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தினை காணவில்லை
PublicPublish January 9, 2021 10:38 am
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான SJY 182 எனப்படும் போயிங் 737 ரக விமானம் , புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகவும் விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. #இந்தோனேசியா #ஜகார்த்தா #விமானத்தினை #காணவில்லை #போயிங்737
{{retweet_count}}{{favorite_count}} -
லண்டனில் வைரஸ் தொற்று நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அறிவித் திருக்கும் நகரத்தின் மேயர் சாதீக் கான், (Sadiq Khan) அங்கு மருத்துவ சேவை களின் சீர்குலைவைக் குறிக்கும் "மேஜர் இன்ஸிடன்ற்" ('Major incident') நிலைவரத் தைப் பிரகடனம் செய்துள்ளார்.
"விரைந்து அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மருத்துவமனைகள் நிரம்பிப் பெருகிப் பெரும் ஸ்தம்பிதமும் மரணங்களும் நிகழலாம்" என்றும் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sussex மற்றும் Surrey பகுதி மருத்துவ சேவைகளது நிலவரங்களை வைத்தே இந்த "மேஜர் இன்ஸிடன்ற்" பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் ஒரு லட்சத்துக்கு ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் தொற்று உச்ச நிலையில் உள்ளதாக எச்சரிக்கப் பட்டுள்ளது.
அவசர நிலைமையை முகாமை செய்யும் குழுக்களை விரைந்து சேவைக்கு அழைக்கவேண்டிய கட்டாயத்தை அல்லது ஒர் அனர்த்த முகாமைத்துவத் தின் அவசிய நிலைமையை 'Major incident' குறிக்கிறது.
மனித உயிர்கள், அத்தியாவசிய சேவைகள், சுற்றுச் சூழல், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு கடும் பாதிப்பு, சேதம், தீங்கு, இடையூறு என்பன ஏற்படும் சமயங்களிலேயே இவ்வாறு அரிதாக "மேஜர் இன்ஸிடன்ற்"('Major incident') நிலைமை பிரகடனப்படுத்தப் படுகிறது.
லண்டன் வாசிகளில் முப்பது பேரில் ஒருவர் என்ற கணக்கில் வைரஸ் தொற்றுப் பரவலடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 7ஆயிரத்து 34 பேர் நேற்றுவரை லண்டன் மருத்துவமனை களில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கிய காலத்துடன் ஒப்பிட்டால் இது 34 வீதம் உயர்ந்த எண்ணிக்கை ஆகும். தற்சமயம் நாளாந்தம் 800 பேர்வரை மருத்துவ மனைகளுக்கு கொண்டுவரப்படுவதால் படுக்கைகள் நிரம்பி பெரும் இடப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.இதேவேளை - பிரித்தானியா எங்கும் ஒரு நாள் உச்ச எண்ணிக்கையாக இன்று 68 ஆயிரத்து 53 தொற்றுக்கள் பதிவாகி இருக்கின்றன. ஓரிரு நாட்களில் ஆயிரத்து 325 மரணங்களும் பதிவாகி இருப்பது மருத்துவ வட்டாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
08-01-2021{{retweet_count}}{{favorite_count}} -
படக்குறிப்பு,737 மேக்ஸ் ஓராண்டுக்கு முன்பு அடுத்தடுத்த விபத்துகளை சந்தித்த போயிங் 737 மேக்ஸ் (Max) ரக விமானங்கள் இயக்குவது நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
அந்த 737 மேக்ஸ் ரக விமானத்தின் வடிவமைப்பு தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அமெரிக்க அரசுக்கு 250 கோடி டொலர் குற்றவியல் கட்டணமாக செலுத்த போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிறுவனம், “வெளிப்படைத்தன்மையைவிட லாபத்தை” முக்கியமாக பார்த்தது என்று அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது.
இந்த ரக விமானங்களின் மூலம், இரண்டு மோசமான விபத்துகள் இதுவரை நிகழ்ந்துள்ளன. போயிங் அளிக்கவுள்ள தொகையில், சுமார் 500 மில்லியன்டொலர் பணம், விமான விபத்தில் இறந்த 346 பேரின் குடும்பத்தினரை போய் சேரும்.
போயிங் நிறுவனத்தின் தலைமை இயக்குநரான டேவிட் கல்ஹோன், “இத்தகைய தீர்மானத்திற்கு வந்தது எங்களின் நிறுவனத்திற்கு ஒரு நல்ல விஷயமாகவே நான் நம்புகிறேன். எங்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு மற்றும் நல்லெண்ணத்திலிருந்து நாங்கள் எவ்வளவு குறைவாக செயல்பட்டுள்ளோம் என்பது எங்களால் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்பதை காட்ட இதை ஒரு சரியான வழியாகப் பார்க்கிறேன்.” என்றார்.
”இந்த தீர்மானத்தின்மூலம், அதிகாரிகளிடம் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. நம்மிடம் அதிகாரிகள் எதிர்பார்க்கும் இத்தகைய தன்மையிலிருந்து விலகினால், எவ்வளவு பின்விளைவுகளை நாம் சந்திக்கவேண்டி இருக்கும் என்பதையும் இது விளக்குகிறது” என்று அவர் தெரிவித்தார்.
’மோசடி மற்றும் ஏமாற்று நடவடிக்கை’
இந்த விமானத்தில் உள்ள MCAS என்று கூறப்படும் தானியங்கி முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து நீதித்துறை அதிகாரிகளிடம் கூறாமல் போயிங் அதிகாரிகள் மறைத்துவிட்டனர்.
2018இல் இந்தோனேசியாவில் நடந்த விபத்து மற்றும் 2019இல் எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில், இந்த தானியங்கி முறைக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது.
அவ்வாறு தகவல்கள் பகிரப்படாததால், விமான ஓட்டிகளின் பயிற்சி அட்டையில், இந்த குறிப்பிட்ட விமான முறை குறித்த தகவல்கள் குறைவாக இருந்தன. இதனால், விமான ஓட்டி அளித்த கட்டளைகளை மீறிய விமானங்கள், தவறான தரவுகளின் அடிப்படையில் செயல்பட்டதால், விமானம் மேலே எழும்பிய உடனேயே தலைகீழாக கீழே விழவேண்டிய நிலை ஏற்பட்டது.
” லயன் ஏர் விமானம் மற்றும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவை சந்தித்த விபத்துகள் மூலமாக, உலகின் முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்றான இதன் பணியாளர்கள், மோசடி மற்றும் ஏமாற்று வழிகளில் ஈடுபட்டது வெளியானது.” என்ற குறிப்பிட்டார் உதவி வழக்குரைஞரான ஜெனரல் டேவிட் பர்ன்ஸ்.
“போயிங் ஊழியர்கள் வெளிப்படைத்தன்மைக்குப் பதிலாக லாபத்தை மனதில் வைத்து, சில தகவல்களை அரசின் விமான நிர்வாகத்திடமிருந்து மறைத்தனர். அவர்கள் மோசடியை ஊக்குவிக்கும் வகையில் நடந்துகொண்டனர்.”
இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, போயிங் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தில் உள்ளபடி நடந்துகொண்டால், அவர்கள் அமெரிக்க அரசை மோசடி செய்ததாக போடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த தொகையில், 177 கோடி டொலர் பணம், விமான விபத்து ஏற்பட்ட போது, பயணிகளுக்கு இயக்கப்படாமல் தரையிறக்கப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு அளிக்கப்படுகின்றன. இதில் ஒரு பகுதி தொகை ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது.
நிறுவனம் 243.6 மில்லியன் டொலர் அபராதமாக அளிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், எதியோப்பியன் ஏர்லைன் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தின் சார்பில் வாதிடும் வழக்கறிஞர்கள், போயிங் நிறுவனத்திற்கு எதிராக அவர்கள் போட்டுள்ள உரிமையியல் வழக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வராது என்று கூறியுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், போயிங் செய்த தவறுகளில் ஒரு சிறு துளி மட்டுமே என்றும், குற்றவியல் வழக்குகளிலிருந்து தப்பிக்க பில்லியன் கணக்கில் பணம் அளிக்கும் இதே நிறுவனம்தான், நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கடுமையாக நடந்துகொள்கிறது என்கிறனர் வழக்கறிஞர்கள்.
மேலும் பேசிய அவர்கள், மேக்ஸ் 737 விமானத்தில் உள்ள அனைத்து குறைபாடுகள் குறித்து விளக்கி, வெளிப்படையான ஒரு பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே, அந்த ரக விமானம் மீண்டும் செயல்பாட்டிற்கு விடப்பட்டிருக்க வேண்டும்.” என்றும் அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
மேக்ஸ் ரக விமானம் மீது உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து வருவதாக போயிங் தெரிவித்துள்ளது. மேக்ஸ் ரக விமானங்கள் கடந்த டிசம்பர் முதல் மீண்டும் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
’ விசாரணை இதோடு முடியாது’
தியோ லெஜ்ஜிட் - வணிக செய்தியாளர்
அமெரிக்க விமான சேவையின் பாதுகாப்பு ஆய்வாளருக்கு, சரியான பதிகளை அளிக்காமல், சில விஷயங்களை மறைத்தனர் என்பதே, போயிங் நிறுவன ஊழியர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு.
இத்தகைய சூழலில் பார்த்தால், இந்நிறுவனம் மிகவும் லேசான தண்டனையோடு தப்பியுள்ளது என்பதை உங்களால் கூற முடியும்.
விசாரணையை தவிர்த்துக்கொண்ட இந்த நிறுவனம் செலுத்தும் தொகையில் பெரும் பகுதி விமான நிறுவனங்களுக்கே செல்கிறது. இந்த தொகையில் கணிசமான பகுதியை அது எப்படி இருந்தாலும் செலுத்தியிருக்கவேண்டியதாகவே இருந்திருக்கும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வழக்குரைஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட விமர்சகர்கள் எழுப்பும் கேள்விகள் அப்படியே இருக்கின்றன. அவை இன்னும் விடை கேட்டுத் துளைத்துக்கொண்டே இருப்பதாக சுட்டக்காட்டப்பட்டுள்ளது.
BBC
{{retweet_count}}{{favorite_count}} -
மின் வெட்டைத் தவிர்ப்பதற்காக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன் படுத்துமாறு பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இன்று வெள்ளிக் கிழமை பகல் மின் பாவனை அதன் அதி உச்ச அளவைக் கடக்க இருப்பதை அடுத்தே பிரான்ஸின் மின் பரிவர்த்தனை வலைப்பின்னலின் முகாமையாளர் (Gestionnaire du réseau électrique-RTE) இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடும் பனிக் குளிர் காலநிலையால் வெப்பநிலை பல பிரதேசங்களிலும் மைனஸ் 4. 5 பாகை (-4.5 ° C) வரை குறைவதால் இன்று மின்பாவனை உச்ச அளவான 88,000 மெஹாவாட்ஸ் (megawatts) என்ற அளவைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முழுத் தேவைக்குமான மொத்த மின் உற்பத்தி 88,200 மெஹாவாட்ஸ் ஆகும்.இதனால் உடனடியாக மின் வெட்டு ஏற்படும் நிலைமை இல்லை.
அவசர சந்தர்ப்பங்களில் மாற்று வழிகளில் மின் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இயன்றவரை மின் விளக்குகள், அவசியமற்ற மின் சாதனங்களை நிறுத்தி ஒத்துழைக்குமாறு பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் அதன் 70 வீதமான மின் தேவைக்கு அணு மின் உலைகளிலேயே தங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஏற்பட்ட பொது முடக்கம் அணு உலைகளின் (nuclear reactors) பராமரிப்பு வேலைகளைப் பாதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மின் உற்பத்தி சிறு வீழ்ச்சி கண்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.08-01-2021
{{retweet_count}}{{favorite_count}} -
இரு வார பதவிக்காலம் முடிவதற்குள் குற்றப் பிரேரணை மூலம் ட்ரம்பைபதவி நீக்க வோஷிங்டனில் முயற்சி?பதவிக்காலம் முடிவடைய இன்னமும் இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை அதிகாரத்துக்கு அருகதை அற்றவர் என அறிவித்து அவரைப் பதவியில் இருந்து அகற்ற முயற்சிகள் முன்னெடுக்கப் படுகின்றன.
அமெரிக்காவின் சில முக்கிய ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டிருக்கின்றன.பதவியில் இருந்துகொண்டே நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிராக ஒரு சதிப் புரட்சிக்கு தனது ஆதரவாளர்களைத் தூண்டியதன் மூலம் அதிபர் ட்ரம்ப் நாட்டை நிர்வகிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று அமெரிக்கப் பிரமுகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2020 தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்வதற்கும் அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளைக் கையாள்வதற்கும் இயலாத மனநிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்த லாக உள்ள அவரைப் பதவி நீக்கவேண்டும் என்ற கருத்தை சில அமெரிக்கப் பத்திரிகைகளும் ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன.
அமெரிக்காவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான காங்கிரஸ் கட்டடத்தில் நேற்று நிகழ்ந்த வன்முறைக் கலகங்களுக்கு அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களைத் தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்களே காரணம் என்று பகிரங்கக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ட்ரம்ப் தனது கடமைகளை ஆற்றுவதற்குத் தகுதியற்றவர் (unfit) எனத் தெரிவித்து குற்ற விசாரணைப் பிரேரணை (impeachment) ஒன்றைக் கொண்டுவந்து அவரைப் பதவி நீக்குவதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீதி விவகாரக் குழுவில் இடம்பெறும் குடியரசுக் கட்சிப் பிரதிநிதிகள் துணை அதிபர் மைக் பென்ஸை (Mike Pence) தொடர்பு கொண்டுள்ளனர்.
அமெரிக்க அரசமைப்பின் 25 ஆவது திருத்தத்தின்படி அமைச்சரவையின் பெரும்பான்மையுடன் துணை ஜனாதிபதி ஒருவர் அதிபரை நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர் என அறிவிக்க முடியும்.
(25th Amendment to the U.S. Constitution, which allows the vice president and a cabinet majority to declare the president "unfit" to hold office). ஆனால் அரசமைப்பின் படியான இத்தகைய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால் ட்ரம்ப்பின் மிகக் குறுகிய பதவிக்காலத்துக்குள் அது சாத்தியம் அல்ல என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். .காங்கிரஸ் கட்டடத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளில் முன்னாள் படை வீரரான பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.52 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குமாரதாஸன். பாரிஸ்.07-01-2021
{{retweet_count}}{{favorite_count}}
Fashion
4 தமிழக மீனவர்கள் கொலை – இலங்கை தூதரிடம் இந்தியா கடும் கண்டனம்..!
Travel
இலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று
இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி!
Technology
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடந்தும் முதலிடம்
ஒலிம்பிக் தொடாில் பெயர் – கொடியை பயன்படுத்த ரஸ்யாவுக்கு தடை
Latest Articles
ஊடகவியலாளர் பிரகீத்தை நினைவு கூர்ந்து காணாமல் போனவர்களுக்காக ஒரு இணையதளம்!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல்...
இலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்...
பெண்ணிடம் சங்கிலியை பறித்து விற்று 100,000 ரூபாய்க்கு அலைபேசிகள் வாங்கிய இளைஞர்
கல்வியங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...
கிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு
“சேவல் சத்தமாய் கூவுவதால் என் தூக்கம் கலைகிறது” ...
இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி!
காணி அபகரிப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றம்இளங்கலைஞர்...
கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு பொறுப்பு வைத்தியர் நியமிக்கப்பட வேண்டும்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பொறுப்பு ...
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவா்களுக்கு பயணத்தடை – சொத்துக்கள் முடக்கப்படலாம்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என மிக நம்பகமான ...
வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு...
தீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.
இலங்கையின் 3 தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் கால்...