29 July 10 02:04 pm (BST)
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென ஜப்பானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒகடாவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்;.பிரிஸ், டோக்கியாவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு ஜப்பான், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் ‐ யசூசி அக்காசி ‐ அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் இலங்கை, ஜப்பானுக்கு விளக்கம்:‐
2010‐07‐28 16:04:51
இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசி தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் போது அக்காசி இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் மக்கள் நிலைமை, புனர்நிர்மாணப் பணிகள், அவசரகாலச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளமை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நியமனம் போன்ற விடயங்கள் குறித்து இரண்டு அமைச்சர்களும், யசூசி அக்காசிக்கு விளக்கமளித்துள்ளனர்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் எனவும், தற்போதைய சூழ்நிலை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அக்காசி தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் இலங்கை, ஜப்பானுக்கு விளக்கம்
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் இலங்கை இமைச்சர்கள், ஜப்பானிய அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான குழுவினர் தற்போது ஜப்பானில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜப்பானிய முக்கியஸ்தர்களுக்கு விளக்கியுள்ளனர்.
| gtbc.fm |
-
18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க இன்று சவப்பெட்டி ஊர்வல ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது
-
2ம் இணைப்பு ‐ இராணுவ கிளர்ச்சி ஓன்று வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுகிறது – சர்வாதிகார பாதையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக சிறை செல்லவும் தயார் ‐ சரத்பொன்சேகா
-
18 வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன
-
18வது அரசியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் ‐ படங்கள் இணைப்பு
-
3ஆம் இணைப்பு‐ மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாதது – விஜய் குமார் சிங் ‐ இந்திய இராணுவத் ஜெனரல் விஜேகுமார் சிங், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திப்பு‐
-
உருத்திரபுரம் மீண்டும் உயிர் பெறும் கிராமம்‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்
08 September 10 02:49 pm (BST)
சுரேஸ் பாராளமன்றத்தில் பேசியுள்ள திருகோனமலை கானியின் சொந்தகாரர்கள்நாங்கள் தான்,எங்களின் இந்த கானி திருமலை நகரத்துக்குள் உள்ளது இது எங்கள் தந்தை வழி பரம்பரை உறுதி கானி 1983முன் இதில் சுற்றுல விடுதி அமைத்து இருந்தோம் (இது கடற்கரையை அன்டியுள்ளது)83கலவரத்தில் சிங்களவர்களினால் எரித்து நாசமக்கப்பட்டபின் அதை அப்படியே விட்டு விட்டு நங்கள் வேறு வீட்டில் வசித்து வந்தோம்,பின்பு எங்கள் கானியில் இந்தியன் ஆமி குடியேறி இருந்தான்
08 September 10 02:08 pm (BST)
அவை எப்ப உழைக்கும் மக்களைப் பற்றி யோசிச்சிருக்கினம்? முடிஞ்சா ஒருக்கா சொல்லுங்கோ?
08 September 10 12:42 pm (BST)
இந்தியப்படை இருந்த காலத்தில ஈபிஆர்எல்எப் இல இருந்துகொண்டு சுரேஸ் போட்ட ஆட்டத்தை விட இப்ப ஒண்டும் பெரிசாய் காட்டுச்சட்டம் இருக்கிறமாதிரி எனக்கு தெரியேல்லை



