15 January 09 10:06 am (BST)
வன்னியிலிருந்து கிடைக்கும் காட்சியூடகங்கள் நம்மை அதிர்வுக்குள்ளாக்குகின்றன. குருதி தோய்ந்த மனித உடல்கள்.
ஆணாகவும் பெண்ணாகவும் சிறுவர்களாகவும் முதியவர்களாகவும் வயது வேறுபாடற்ற மனித உடலங்கள். சாவுக்காய் காத்திருக்கும் மனிதர்கள் பிணங்கள் போல நடமாடுவதாகப் படுகிறது. நிம்மதியாய்த் துயின்று எத்தனை நாட்களாகியிருக்கும்?
சாவகாசமாய் ஒரு கவளம் சோறுண்டு சற்றுத் திண்ணையில் சாய்ந்திருந்து மாதங்கள் இப்போது எத்தனையாகியிக்கும்? அன்று நாம் இருந்தோம். எமது வீட்டினிலே. எமது நிலத்தில். வாழ்வில் நம்பிக்கைகளுடன். என்று வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று? யாருடைய காதுக்கும் இவர்களுடைய குரல் எட்டவில்லை. யாருடைய இதயத்தையும் இந்த மக்களுடைய அவலம் பிழியவில்லை. யாருடைய மனச்சாட்சியையும் இவர்களுடை ஓலம் உலுப்பவில்லை.
ஆனாலும் காத்திருப்பு! எதற்காக? எவருக்காக? யாருக்காக? புரியாத காத்திருப்பு!
தீராத துயராகிப் போன இந்த நெஞ்சங்களின் ஆறாத காயங்களை ஆற வைக்க யாருமில்லாத நிலையில் ஏக்கங்களுடன் தூசிபடிந்த முகங்களுடனும் ஏதோவொரு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள் இந்த மக்கள்.
15 தடவைக்கும் மேலாக இடம்பெயர்ந்தவர்களும் இவர்களுள் அடக்கம். அவர்களுடைய வாழ்வு வெறும் எண்ணிக்கைகள் சார்ந்ததாக மாறிவிட்டுள்ளது. இன்று இத்தனை பேர் உயிரிழந்தார்கள், எத்தனை பேர் காயப்பட்டார்கள்? எத்தனை பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறினார்கள் என்கிற எண்களாக நகருகிறது அவர்கள் வாழ்வு.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் தர்மபுரத்தில் ஒரு தற்காலிகக் கொட்டிலில் இயங்குகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையோ படையினரின் செல் வீச்சுக்கு மூச்சுத்திணறி தனது புதிய கட்டிடங்களையும் கைவிட்டு தர்மபுரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது.
மன்னார் மாவட்டம் வவுனியா வடக்கு, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறபகுதிகள் என்று எல்லாப் பகுதிகளிவிருந்தும் இடம் பெயர்ந்தவர்களால் பிதுங்கி வழிகிறது தர்மபுரம்.
பரந்தன் முல்லைத் தீவு வீதி மிக மிக நெருக்கடியான ஒரு வீதியாக மாறிவிட்டுள்ளது. பஸ்கள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், உணவு லொறிகள், ட்ரக்டர்கள் பாடசாலை மாணவர்கள் என்று நிரம்பி வழிகிறது. மழைக்காலம் ஆனபடியால் வீதியின் உலர்ந்த பகுதிகளை மாடுகளும் நாய்களும் ஆக்கிரமித்து விட்டிருக்கின்றன.
இவற்றுக்கிடையில் சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், லான்ட் மாஸ்ரர்களிலும் வண்டில்களிலுமாய் அவரவர் தட்டுமுட்டுச் சாமான்களுடன் மக்கள் கூட்டம் நகர்ந்தபடி இருக்கிறது.
எங்கு போவது என்றும் அறியார், அவர் ஏது செய்வது என்றும் அறியார்? னாலும் போர் அரக்கன் அவர்களைத் துரத்துவதை விட்டானா?
ஜனவரி எட்டாம் திகதியிலிருந்து தர்மபுரம் நோக்கி தொடர்ச்சியாகச் செல் வந்து விழத் தொடங்கியது. மூன்று சந்தர்ப்பங்களில் இடம் பெயர்ந்த மக்கள் மத்தியிலேயே வந்து விழுந்து வெடித்தது.
இந்த ஐந்து நாட்களுள் ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 32 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களுள் இரண்டு பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? 60 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர் ஒருவரையும் செல் கொன்று போட்டிருக்கிறது. 15 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட 11 வயோதிபர்களும் கூட படுகாயமடைந்திருக்கிறார்கள். படுகாயமடைந்த 38 பேரில் 19 பேர் பெண்கள் என்கிறது ஒரு கணிப்பீடு.
ஓடிக்களைத்து சற்று ஓய்வாக முன்னரே தர்மபுரத்திலிருந்தும் சிறிலங்கா இராணுவத்தின் செல் இவர்களைத் துரத்த ஆரம்பித்தது.
ஜனவரி 11ஆம் திகதியிலிருந்து தர்மபுரத்திலிருந்தும் ஓட ஆரம்பித்தார்கள். இடம் பெயர்ந்து தர்மபுரத்தில் இருந்த வைத்தயசாலைக்கருகிலும் செல் வந்து விழ ஆரம்பித்தது. சுமக்க முடியாமல் வீட்டுத் தளபாடங்களைச் சுமந்து போன ட்ராக்டர்கள் வீதியின் சீரற்ற நிலை காரணமாக பழுதடைந்து நகரமுடியாமல் ஆங்காங்கே நின்று விட்டன. இதுவும் அந்த வீதியின் சனநெரிசலை இரட்டிப்பாக்கி விட்டுள்ளது.
வன்னி முழுவதும் வந்து விழும் செல்களால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கி விட்டுள்ளது. அவர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ்கள் தெருவின் நெரிசல் காரணமாக நகர முடியாமல் ஊரந்து ஊர்ந்து தான் செல்ல வேண்டிய நிலை.
தர்மபுரத்தையும் தாண்டிச் சென்ற மக்கள் மரங்களின் கீழும் வெறும் தற்காலிக கூரையின் கீழும் மீளவும் குடியமர்ந்துள்ளனர். 2008 ஆரம்பத்தில் மன்னர் தட்சணாமடுவிலிருந்து இடம் பெயர ஆரம்பித்த செல்வராசா செல்வி அங்கிருந்து பெரியமடு, கணேசபுரம், வன்னேரிக்குளம் முறிப்பு, கல்மடு, தர்மபுரம் என்று தொடர்ந்து இடப் பெயர்வுக்குள்ளாகி வருகிறார். தற்போது தர்மபுரத்திலிருந்தும் புறப்பட வேண்டியதாயிற்று.
2008 ஜனவரியில் தட்சிணாமடுவில் பஸ் ஒன்றுக்கு ஆள ஊடுருவும் அணி வைத்த கிளைமோரில் 15 வயதேயான மில்ரன்கொல்லப்பட்டது பற்றி அவர் நினைவுகூர்கிறார். அவருடைய மருமகள் அனிற்றா 16 வயது அந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தாள். அவருடைய உறவினரான தம்பையா தர்மலிங்கம்(45) விமானப்படையினரின் குண்டுவீச்சில் சில நாட்களுக்கு முன்னர் பலியானாh. அந்த மரண வீட்டிற்குப் போகமுடியவில்லை என்கிற துயர் செல்வியை வாட்டி வதைக்கிறது.
பாலசுப்ரமணியம் கமலேஸ்வி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் 1996இல் குடும்பத்துடன் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்து வந்தார். மல்லாவியில் வசிக்க ஆரம்பித்த இவர்களிடம் ஏராளமான பசுமாடுகள் எருதுகள், கோழி தாரா போன்ற வளர்ப்புப் பறவைகள் இருந்தன. அண்மைய இராணுவத் தாக்குதல்களுடன் இவர்கள் ஸ்கந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். பின்னர் கிளிநொச்சி அங்கிருந்து தர்மபுரம் இப்போது அங்கிருந்தும் புறப்பட்டாயிற்று. மரணத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அவர்கள் மேற்கொண்ட இடப் பெயர்வினால் அவர்களுடைய மாடுகளும் எருதுகளும் கொல்லட்டுப் போயின. பல செல்லடியிலும் எஞ்சியவை வெள்ளத்திலுமாக அள்ளுண்டு போய் விட்டன.
திருக்கெதீஸ்வரன் திரேசா பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். 1996இல் அக்கராயனுக்கு இடம் பெயர்ந்தவர். அண்மைய இராணுவத் தாக்குதலில் கல்மடு பின்னர் நெத்தலியாறு என்று இடம் பெயர்ந்தவர். நெத்திலியாறு அரசினர் தமிழ் பாடசாலையில் தங்கியிருந்த போது ஜனவரி 11ஆம் திகதி பாடசாலை வளவில் வந்து விழுந்த செல்லினால் அவருடைய அன்ரி ஏழுமலை மனோன்மணி படுகாயங்களுக்குள்ளானார். இப்போது மரநிழலில் எதிர்காலம் பற்றிய ஏக்கத்துடனும் அச்சத்துடனும் நகர்கிறது அவரது வாழ்வு.
நம்பிக்கைகள் எதுவுமற்ற கையறு நிலை அவர்களுடையது. அடுத்த நேர உணவுக்கு ஏது செய்வது? காயமடைந்தவருக்கு மருந்துபோட போதிய மருந்து இல்லை. சன நெருக்கடியும், குண்டுகளின் கந்தக நெடியும் தலையை கிறுகிறுக்க வைக்கின்றன. காற்றிலும் நீரிலும் பருவும் வியாதிகளைத் தடுப்பதற்கு வகையேதுமில்லை. தொழில் ஏதுமற்ற நிலை. நிவாரணத்திற்காகக் காத்திருக் வேண்டிய அவலம்.
அதுவும் எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் போது
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியை பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஓளித்தபடி காத்திருந்த போது
பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க?
என்று தீரும் இந்த அவலம். ஒரு சில நாடுகளுடன் சேர்ந்து சிங்கள அரசு பயங்கரவாதப அழிப்புப் போர்வையில் நடத்தும் இனவழிப்பை கண்டும் காணாதிருக்கும் சர்வதேசமும் இதற்கு உடந்தையா? இவர்கள் அனைவரும் தமிழன அழிப்பிற்கும் அபலைத் தமிழர்களின் துன்பத்திற்கும் என்றாவது பதில் சொல்லியே ஆகவேண்டும். அப்பாவிகளின் கண்ணிருக்கு இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
ஜயா நீங்கள் எழுதிய கையோடை உங்கள் அதி உயா மாண்புமிகு தேசியத்தலைவருக்கும் தயவு செய்து ஒரு கொப்பி அனுப்பி விடுங்கோ பங்கருக்கை பார்பபாரோ தொயேல்ல
Hello Mr. Ramanan: Ettappans like you are only good at mud slinging. Thalaivar Prabhakaran has saved the tamil freedom movement from being destroyed by combined efforts of world powers. He has withdrawn to 'fight another day'. World is never same. The change is coming. When the change actually starts taking place, Pulikal varalaru padaippar. Diaspora tamils will continue their support to our freedom movement.
வெளிநாடுகளில் இருந்துகொண்டு தமிழீழம் கொக்கரிக்கும் கொடுமையாளர்களே வன்னியில் மக்களின் அவலத்திற்கும் உயிர்பலிகளுக்கும் காரணம். வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை. தமிழீழ கொக்கரிப்பு. பாவம் எமது மக்கள் வன்னியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படியிருந்தும் இந்த திருந்தா ஜென்மங்களுக்கு இன்னமும் திருந்துவதிற்கு மனமும் அறிவும் வரவில்லை. வன்னியில் உள்ளவர்கள் அனைவரையும் கொன்றொழித்த பின்னரே இவர்களது தமிழீழப் பசி அடங்கும். அதன்பின்னர் இவர்களது தமீழழத்தில் அந்த ஜீவன்களின் ஆத்துமாக்கள் தான் ஜீவிக்கப் போகின்றன. மக்களை வெளியே போகவிட்டு என்ன மண்ணையாவது செய்யுங்கள். அதற்கு வழி செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு போராட்டம் மண்ணாங்கட்டியென்று கொக்கரிக்காதீர்கள்.
பிரபாகரன் பங்கருக்குள் போயிருப்பது எம்மைக்காக்கவே.மரணபயத்தினால் அல்ல அவா ஒன்றும் பேரினவாதிகளின் வேட்டிக்குள் போய் ஒழிந்து கொண்டு அடிமைகளாக அறிக்கை விடவில்லை.அல்லது இருப்பதையும் சுருட்டிக்கொண்டு வைப்பாட்டிகளுடன் போய் வெளிநாடுகளில் தஞ்சம் அடையவில்லை. இன்றும் எம் தேசியத் தலைவர் போர்களத்தில் தான் இருக்கின்றார். உலக நாடுகளின் துணையுடன் வெட்கம் கெட்ட இனத் துரோகிகளின் காட்டிக் கொடுப்பும் தான் இன்று இந்த நிலை. திரு. ரமணன் நீங்கள் தான் போய்ச் சொல்ல வேண்டும் உங்கள் தலைவர்களுக்கு விரைவில் பேரின சிங்களத்தால் சோரம் போனவர்கள் எல்லாம் கருவேப்பிலைகள் போல துாக்கி எறியப்பட்டு நடு வீதியில் கிடக்கப் போகின்றார்கள் என்று. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். சத்தியம் தோற்றதில்லை. எம் இனம் எம் இனத்தை நம்பித்தான் போராடுகின்றது. இந்தியனையோ,அல்லது உலக பயங்கரவாத நாடான பாக்கிஸ்தானையோ,சீனாவையோ அமெரிக்காவையோ நம்பி அல்ல என்பதனையும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் பங்கருக்குள் இருந்தாவது எம் தலைவன் தமிழீழம் பெற்றுத் தருவான் அந்த நம்பிக்கை யானையின் தும்பிக்கை போல அனைத்து தமிழருக்கும் நான்சொல்வது துாய தமிழனுக்குப் பிறந்த தமிழருக்கு உண்டு என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். தோல்விகள் பின்னடைவுகள் என்றும் நிரந்தரமானதல்ல. இது பெண்ணிற்காகவோ பொன்னிற்காகவோ தொடங்கிய போரட்டமல்ல. இனத்தின் உரிமைக்காக எம் மண்ணின் மீட்பிற்காக தொடங்கப் பெற்ற போராட்டம் அது நிச்சயம் என்றும் தோல்வியடையாது. இது உறுதி.
பரணி வெளிநாட்டில் இருந்ததான் கொக்கரிக்க முடியும் >நீங்கள் உள்நாட்டில் இருந்து வன்னி மக்கள் குறித்து கொக்கரித்து பாருங்கோ பார்ப்பம் என்ன நடக்கு எண்டு > சும்மா காக்க பிடிகிறவன் சமாளிக்க இந்த கதைகளை சொல்லுறதுதான் பரவாயில்லை. நீங்க உங்க இருந்து கொக்கரிங்கோ பார்ப்போம் நாளை எண்ண நடக்கு எண்டு? உண்மையில் வன்னியில் கஷ்டப்படும் உறசவுகளை உள்ளுரில் இருப்பவா;களை விட வெளிநாடுகளில் இருப்பவா;கள் அதிகமான அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அப்படி அங்கு அறிந்து கொண்டாலும் வாயடைத்து மெளனியாக நிற்க வேண்டியது தான். பரணி வெளிநாட்டில் இருப்பா;களுக்கு பேசும் உரிமை இருக்கிறது குறிப்பாக தமிழ் மக்கள் குறித்து பேசமுடியும்> அங்கிருந்து பேசுங்கள் பார்க்கலாம் உங்களையும் புலி எண்டு சொல்லி விடுவார்கள் கவனம்.
உயிர் என்பது போனல் வராது. வாழ்க்கை என்பது ஒருமுறை தான். வெளிநாடுகளில் இருந்துகொண்டு கோஷமிடுபவர்கள் அக்கறையிருந்தால் அங்கேயே இருந்து போராடியிருக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிர் போனாலும் பரவாயில்லை அப்படித்தான் இருக்கின்றது. வெளிவரும் படங்களைப் பார்த்தும் நெஞ்சில் ஈரமில்லாமல் போகிறதே உங்களுக்கு. அவன் அங்கு ஈவுஇறக்கமின்றி குண்டுகளைப் போடுகின்றான். இங்கு நீங்கள் தமிழீழம் தமிழீழம் என்று கொக்கரிப்பு. எமது மக்களின் உயிரைப் பணயம் வைக்காது முழு இலங்கையையும் வேண்டுமானாலும் ஆட்சிசெய்யலாம். களத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரமே இதற்கு வியாக்கியானம் பேசமுடியும். அதைவிடுத்து சுகமாக இங்கிருந்துகொண்டு தமது உணர்வுகளுக்காக மக்களைப் பலிகொடுக்கும் படுகேவலான உணர்வுகொண்டவர்களை என்னவென்று சொல்வது. பச்சோந்திகள். பச்சோந்திகள்.
பரணியின் துணிச்சலை பாராட்டுகின்றேன். ஊடகங்கள் அனைத்துமே உண்மையான செய்திகளை கொண்டு செல்ல இன்றுவரையும் பயப்படுகின்றன. இவர்கள் சரியாமுறையில் கருத்துக்களை பக்கசார்பற்று பேச முன்வந்திருப்பார்களானால் விடுதலைப்புலிகளால் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை எப்போதோ காப்பாற்றியிருக்க முடியும். தவிர பரணி அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் இங்கிருக்கும் வெளிநாடுவாள் பச்சோந்தி ஒட்டுண்ணிகளுக்கு வன்னி மக்களின் அவலம் என்பது தீனி மற்றும் அவல் போன்றதேயொழிய அக்கறை கொள்வதானது அல்ல.
நாம் வெளிநாடுகளில் இருந்து கூச்சலிடவில்லை. ஒட்டுண்ணிகளே, வடக்கிலும் கிழக்கிலும் இன்று என்ன நடக்கின்றது? அவைகள் இன்று திறந்த வெளி சிறைச்சாலையாக சிங்களவனின் கொலை வெறிக்கும் ஒட்டுண்ணிகளின் வெள்ளை வான்களிலும் பலியாகிக் கொண்டுள்ளனர். வாய் திறந்து பேச முடியாது. சுதந்திரமாய் நடமாட முடியாது. இப்படியிருக்கும் போது வன்னி மக்களை இந்த கொலைக்காரர்கள் வாவென அழைத்தால் வருவார்களா? அல்லது அவர்களது உயிர்களுக்கு என்ன உத்தரவாதம். பயங்கரவாத இனவழிப்பு சிங்கள அரசின் இராணுவம் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரிகின்றதா?அல்லது அப்பாவி மக்களுடன் யுத்தம் புரிகின்றதா? அந்த மக்கள் எந்த நம்பிக்கையில் இன்றும் விடுதலைப் புலிகளின் பின்னால் அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்கின்றார்கள்? எங்கோ இருந்து கொண்டு வன்னிமக்களை புலிகள் பணயக் கைதியளாக வைத்துள்ளனர் என்று சிங்கள இனவாத அரசின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு சோரம் போகும் பரணி, ரகு போன்றவர்கள் இருக்கும் இடம் எது என்பதனை அவர்களின் எழுத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது. ஏன் வன்னி மக்களின் மேல் பற்றறுள்ள அரசிடம் மடிப் பிச்சை கேட்டு வாழும் ஒட்டண்ணிக் குழுக்கள் அரசிடம் கூறி அப்பாவி மக்களின் மீதான தாக்குதலை நிறுத்தச் சொல்வது தானே. முடிந்தால் சொல்லிப்பார்க்கட்டும் நாளை அவர்களுக்கு என்ன கதி என்பதனை அவர்கள் அறிவார்க்ள. கூழுக்கு கூத்தாடும் கூலிகளே உங்கள் போலி மனிதாபிமானத்தை நிறுத்துங்கள்.
பரணி அவர்களுக்கூங்கள் கருத்தையும் வாசித்தேன்.இனமானத்தோடு கொதிப்படைந்து எழுதிய மற்றவர்களின் கருத்தையும் வாசித்தேன்.இன்று இலங்கையரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள போர் தமிழர்களுக்கு எதிரானது என்பதை நீங்கள் உணர மறுக்கின்றீர்கள்.அது ஏன்?.நித்திரை கொள்பவனை எழுப்பலாம் நித்திரை கொள்பவன் மாதிரி நடிப்பவனை எழுப்பவே முடியாதென்பதற்கொப்ப உங்களது கருத்து இருக்கின்றது.தமிழீழ விடுதலைப் போர் ஆயுதப் போராட்டமாகப் பரிணாமம் பெற்றது ஏன் என்பதை பரணி அறிந்திருப்பார்.ஏன் தமிழர் போராட வேண்டும் அல்லது உரிமைக்காக அரசை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டார்கள் என்பதை வரலாற்றைப் பின்னோக்கிப் பாரக்கும் போதுதான் தெரியும்.தமிழீழ விடுதலைப் போரும் அதனை பல தியாகங்களுக்கு மத்தியில் நடத்திக் கொண்டிருக்கும் விடுதலைப்பலிகளும் இல்லையென்றால் பாதித் தமிழர் எப்பவோ அழிந்திருப்பார்கள்;கணிசமான தொகையினர் சிங்களவராக மாற்றப்பட்டிருப்பார்கள்.தமிழர்கள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது.மக்கள் அவலத்தின் விளிம்பிற்கே போயுள்ளார்கள்.இவையெல்லாம் யாரால் என்றால் நீங்கள் விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுகிறீர்கள்.அப்படியென்றால் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் போட்டு மக்கள் அவல்துவலாக சிதறுகின்றார்களே இவற்றைச் செய்பவர்கள் யார்?.பிரபாகரன் இல்லையேல் தமிழர்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்பது காணல் நீரேதான்.மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் ஒரு விடயத்தை இங்கே கூறி வைக்கின்றேன்.இலங்கையில் விடுதலைப்புலிகள் இல்லையேல் தமிழர்கள் கிள்ளுக்கீரைதான் என்பதை மறக்காதீர்கள்.மூக்குப் போனாலும் சகுணம் பிழைக்கக்கூடாதென்பதில் பரணி உங்களுக்கிருக்கும் மோசமான நயவஞ்சகமான விருப்பத்தை அறியமுடிகின்றது.தமிழர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு தமிழர்கள் அழிக்கப்படுவதை எதிரத்து கேட்க திராணியற்று அரசின் வேலைக்காரர்களாகவிருப்பவர்கள் தமிழர்களைக் காப்பாற்றுவார்கள் என்பது குதிரைக் கொம்பே.வெளியாட்டிலிருந்து கொண்டு தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்பவர்கள் பொழுது போக்கிற்காகவல்ல.இஸ்ரேலியர்கள் நாடு நாடாய் திரட்டப்பட்ட போது அந்தந்த நாடுகளிலிருந்து கொண்டே இஸ்ரேலியர்கள் தமக்கென்றொரு நாட்டை உருவாக்கினார்கள்.அதைத்தான் வெளிநாட்டுத் தமிழர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களால் உணர முடியவில்லை.வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரானவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்கள் அறிவார்கள்.தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்றால் தமிழன் அழிவதற்கச் சமனே.
நண்பர் அங்கயர்பிரியன் அவர்களிடம் இருந்து சில விளக்கங்களை பெறவிரும்புகின்றேன். இன்று இலங்கையரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள போர் தமிழர்களுக்கு எதிரானது என்பதை நீங்கள் உணர மறுக்கின்றீர்கள். என்ற தங்களது நியாயமான கூற்றை எல்லா தமிழின உணர்வாளர்களும் எற்றுக் கொள்ள முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இன்று இடம் பெற்றுக் கொண்டிருக்கும் 1)நான்காம் கட்ட ஈழப் போர் என விடுதலைப்புலிகளால் பெயர் சூட்டப்பட்டு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்போரை யார் வலிந்த தாக்குதல் மூலம் மாவிலாற்றில் ஆரம்பித்து வைத்தவர்கள் என்பதை சற்று எனக்கு விளக்க முடியுமா?. 2) சா;வதேச கண்காணிப்பில் நோர்வே தரப்பினரது மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற யுத்தநிறுத்தத்தின் போது அவ்யுத்தநிறுத்த விதிமுறைகள் யாரால் அதிகமாக மீறப்பட்டது என்பது பற்றி சற்று அறியத்தரமுடியுமா? 3) யுத்தநிறுத்தகாலத்தில் சகோதரப்படுகொலைகளை யாரால் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றி சொல்ல முடியுமா?. 4)யுத்தநிறுத்த காலத்தில் எதற்காக காதிர்காமர் கொலை செய்யப்பட்டார் என்று சொல்ல முடியுமா? 5)யுத்தநிறுத்த காலத்தில் சரத்பொன்சேகா எதற்காக கற்பிணி போன்றதோர் மனித வெடிகுண்டால் தாக்கப்பட்டார் என்று சொல்ல முடியுமா? 6)யுத்தநிறுத்தகாலத்தில் எதற்காக கோத்தபாய ராஜபக்சமீதும் வெடிகுண்டுத் தாக்குதல் இடம் பெற்றது என்று சொல்ல முடியுமா? 7) யுத்த நிறுத்த காலத்தில் 74 இலங்கை இராணுவத்தினரை யார் கண்ணி வெடி மற்றும் கிளைமோர் தாக்குதல் மூலம் கொலை செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? இவற்றையெல்லாம் நான் ஏன் கேட்;கின்றேன் என்றால். சா;வதேசங்களால் கண்காணிப்புகள் நிகழ்ந்து கொண்ருக்கும் போது யாரால் யுத்தநிறுத்தம் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டன? அப்போது யார் போருக்கு தயார் என்ற நிலையைக் காட்டிக்கொண்டனர். யார் போரை ஆரம்பித்தார்ககள் என்பதை தயவு செய்து யுத்தநிறுத்த விதிகளுக்கு அமைய பதில் தாருங்கள். நன்றி ரகு.
உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு நன்றி. ஆனால் ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ள வேண்டம். நான் எந்தவொரு சமயத்திலும் விடுதலைப் புலிகளைக் குறைகூறவில்லை. அவர்களது போராட்டத்தை விமர்சிக்கவும் வரவில்லை. நான் சொல்லவருவதை விளங்கிக் கொள்ளவும். அல்லது அதற்கு முயற்சிக்கவும். சிங்கள அரசு ஈவு இறக்கமின்றி மக்களைக் கொன்றுகுவிக்கிறது. சர்வதேச சமூகத்தினாலேயே ஒன்றும் செய்யமுடியவில்லை. அப்படியாயின் விடுதலைப் புலிகள் அவர்களது உயிர்களுக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டுமல்லவா? அதனைத் தான் ஏன் செய்ய மறுக்கின்றார்கள். சிங்களப் படைகளின் பக்கம் மக்களை அனுப்பினால் அவர்கள் உயிர்பிழைத்துக் கொள்வார்கள் தான். ஐயா ஜனா சும்மா பகட்டுக்காகவும் பேசுவதற்காகவும் பேசக்கூடாது. வாவென அழைத்தால் வருவார்கள். தற்போது வரை வந்துள்ள சுமார் இரண்டாயிரம் பேரை கொன்றுவிட்டார்களா என்ன? அறிவுபூர்வமாக பேசுவதாக நினைக்காதீர்கள். நீங்கள் உணர்வுபூர்வமாக பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். அதனால் தான் உங்கள் உணர்விற்கு அந்த அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைக்கின்றீர்கள். சார் என்ன சொன்னாலும் என்னால் எமது அப்பாவி மக்களின் ஒரு உயிர்கூட பறிக்கப்படுவதை எந்தக் காரணம் கொண்டும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதற்கு யார் காரணமோ அவர்களுடன் நான் முரண்பட்டவனே. அது சிங்கள அரசாங்கமாக இருந்தாலும் சரி. தமிழீழ விடுதலைப் புலிகளாக இருந்தாலும் சரி. இது உறுதி.
விடுதலைப்புலிகளின் வரலாற்றுத் தவறுகள் யாவும் தயவு தாட்சண்யமின்றி பகிரங்கமாகவும் நடுநிலையோடும் நின்று விமர்சிக்கப்படவேண்டும். பரணி அவர்கள் கூறியது போன்று உணர்வு பூர்வமாக விவாதிக்கப்படாது அறிவு பூர்வமாக அலசப்படவேண்டும்.
நன்பரே செம்மணிப் புதைகுழிகளுக்குள் கிடந்தத பாம்புகளின் மிருகங்களில் எச்சமல்ல சிஙகள பேரினவாதத்தை நம்பிய எம் தமிழரின் எச்சங்கள். எதற்காக அத்தனை துாரம்...! அண்மையில் வவுனியாவில் புதைக்கப்பட்ட உடலங்கள் விடுதலைப் புலிகளினுடையதா? இல்லை அது பொதுமக்களினுடையது. சில வாரங்களாக கரையோரப் பகுதிகளில் ஒதுங்கும் உடலங்கள் யாரால் கொன்று போடப்பட்வை என்பதை என்ன சர்வதேச பொலிஸார் வந்து சொல்லவா வேண்டும். வன்னியில் உள்ள சனத்தில் 99விதம் போராளிக் குடும்பத்தவர். அவர்கள் ஆக்கிரமிப்பாளனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் என்ன நேரும் என்பதனை அவாகள் அறிவார்கள். சனநாயக நாட்டின் தலைநகரில் தமிழர்கள் வெள்ளை வான்களினால் கொன்று குவிக்கப்படவதை உங்களால் மறுக்க முடியுமா? சரி ஆக்கிரமிப்பாளனின் கட்டப்பாட்டுக்குள் வந்தவர்கள் என்ன சுதந்திரமாகவா வாழ்கின்றனர்.எங்கோ முகாம்களில் கொண்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இனி அவர்களில் எத்தனை பேர் கரையோதுங்கப் போகின்றார்களோ? விடுதலைப் புலிகள் மக்களை போக விடாமல் தடுக்கின்றனர் என்ற சகட்டு வாதத்தை விட்டு விடுங்கள். அது சிங்கள அரசின் பொய்பரப்புரைக்கு நாமும் துணைபோவதாகும். விடுதலைப் புலிகள் இத்தனை காலம் தமிழ் மக்களைக் காத்தார்கள். கேடு கெட்ட சமாதானத்தின் வழி சென்றதனாலேயே இத்தனை அழிவு. சர்வதேசத்தின் குரல்களை செவிமடுத்ததனாலேயே இத்தனை இன்று இத்தனை அழிவு. என் கேள்வி ஜனநாயகம் பேசும் சிங்கள அரசு ஏன் பொதுமக்களின் வதிவிடங்கள் என்று தெரிந்தும் குண்டுகள் கொட்டுகின்றனர் என்பதே. இவர்கள் தமிழனத்தை காக்கவா வாவென்று அழைக்கின்றார்கள். அப்படி எந்தத் தமிழனாவது நம்பினால் நம்பிக் கொண்டிருந்தால் அது அவர்களின் முட்டாள் தனம். புலிகள் முடிந்தவரை தமது வளங்களைப் பயன்படுத்தி தமிழரை காக்கவே முயல்கின்றனர். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
அன்புடன் பரணி ரகு உட்பட அனைவருக்கும்.இங்கே நான் குறிப்பிடும் கருத்துக்கள் மூலமாக நான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக வக்காலத்து வாங்குகின்றேன் என்றோ நியாயப்படுத்துகின்றேன் என்றோ நினைக்க வேண்டாம்.தமிழீழ விடுதலைப்பலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் ஏற்பட்ட அமைதிகாக்கும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விதிகளுக்கமைய ;இலங்கை இராணுவத்தின் கட்டமைப்புக்குச் சமனான தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்மைப்பை ஏற்றுக் கொண்டு (1)இரு பகுதியினரும் ஆட்களைச் (இராணுவம்)(போரளிகள்)சேர்க்கலாம்(2)இரு பகுதியினரும் பயிற்சிகளைக் கொடுக்கலாம்(3)இரு பகுதியினரும் ஆயுதக் கொள்வனவைச் செய்யலாம் என்பதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது பகுதியை அபிவிருத்தி செய்யலாம் என்ற விதிகளுக்மைய இரு பகுதியினராகிய இராணுவமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் தத்தமது செயல்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தனர்.ஆனால் இந்த ஒப்பந்தமானது ஒரு சூழ்ச்சிக்குரிய ஒப்பந்தம் என்பது வேறு விடயம்.(ஏனெனில் இந்தக்காலத்தில் அநாவசியமாக காலத்தைப் போக்கடித்தமையுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவு படுத்தும் வேலையும் இடம்பெற்றது.இந்த ஒப்பந்தத்திற்கு முன்னரே இக்காலகட்டத்தில் எவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளைக் கையாள்வது என்பதை முனகூட்டியே திட்டமிட்டதன் பின்பே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருந்தது.)ஒப்பந்த காலத்தில் இராணுவத்தின் நடவடிக்கைகள் யாவும் முகாங்களுக்குள் முடக்கப்பட்டிருக்கவில்லை.அதே போல் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளும் முகாங்களுக்குள் முடடக்கப்படவில்லை.இச்சூழ்நிலையே அச்சம் நிறைந்த சூழ்நிலையாகும் ஏனெனில் இருபகுதியினரும் வெளிப்பார்வைக்கு நட்புநிலையை மேற்கொள்வதாகத் தெரிந்தாலும் இரு பகுதியினருக்குமிடையில் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டேயிருந்தனர்.போர் வடிவமற்ற களமுனை நிலையற்ற ஒரு போருக்கான சூழ்நிலையை இராணுவத்தினர் ஆங்காங்கே இராணுவத்தினர் பொதுமக்களை மக்களை தாக்கும் நிலையை மேற்கொண்டிருந்தனர்.இது தமிழீழ விடுதலைப்புலிகளை போருக்கழைப்பதற்கான உத்திகளே.எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமை காத்திருந்தனர்.இந்த ஒப்பந்தத்தை விரும்பாத அரசு வெளிநாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாக இவ்வொப்பந்தத்தை செய்திருந்தது.அமைதி முறிவிற்கான சூழ்நிலையை அரசு தோற்றுவித்தற்கான காரணம் விடுதலைப்புலிகள் ஆட்களைச் சேர்ப்பது ;பயிற்சி கொடுப்பது ;ஆயுதங்களைக் கொள்வனவு செய்தல் என்பனவேயாகும்.எதிர்க்கட்சியினதும் பெளத்த குருமாரினதும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் இராணுவம் சிறு சிறு தாக்குதலை மேற் கொள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் எதிரத்தாக்குதலை மேற் கொண்டனர்.இராணுவம் என்ன செய்தாலும் பேசாமல் இருக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கின்றது?.தங்களை நேரடியாகத் தாக்கவில்லை பொதுமக்களைத்தானே கொலை செய்தார்கள் இராணுவம் என்று பேசாமலிருக்க முடியுமா?.பொதுமக்கள் இறந்தாலும் பரவாயில்லை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைதிகாத்திருக்க வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?.மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட போருக்கு முன்பு இராணுவத்தினரின் எவ்வித தாக்குதல் சம்பவங்களும் இடம்பெறவில்லையா-நிறையவே இடம்பெற்றிருக்கின்றன.போரும் அமைதியுமாகவே காலம் ஓடியது.தமிழீழ விடுதலைப்புலிகள் வலிந்து தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையை அவர்கள் தோற்றுவிக்க மாட்டார்கள்.ஏனெனில் அரசாங்கத்திற்கு கோடி கோடியாக பணத்தைக் கொட்டிக் கொடுத்து ஆயுதங்களை வாங்கக்கூடிய வசதி உண்டு உதவி உண்டு.ஆனால் விடுதலைப்புலிகளின் நிலை அப்படி அல்ல போருக்கான அத்தனை உதவிகளையும் எந்த ஒரு வெளிநாடுகளும் செய்யவில்லை.தமிழர்களிலேயே விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் தங்கியிருந்தன.இந்நிலையில் ஒவ்வொரு போராளியும் மிகப் பெரும் பெறுமதிமிக்கவனாகவே இருந்தான்.இதனால் தேவையற்ற வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதன் மூலமாக தமிழீழ விடுதலைப்புலிகள் போரளி ஒருவனை இழக்க ஒரு போதும் தம்மை உட்படுத்தியிருக்க மாட்டார்கள்.தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் ஆயுதங்களிலிருந்து போகும் தோட்டாக்களை அநாவசியமாக செலவழிக்க மாட்டார்கள்.இதனால் வலிந்த தாக்குதல் மூலம் ஆயுத விரையத்தை மேற்கொள்ள வாய்ப்பே இல்லை.இலங்கையின் நிலை எப்படியிருக்கிறதென்றால் எங்கே குண்டு வெடித்தாலும் எந்த ஆராய்வும் இல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலையின் போடுவது ஒரு சம்பிரதாயபூர்வமான செயலாகிவிட்டது.இலங்கையில் இடம்பெற்றுவரும் குண்டு வெடிப்பகளுக்கு இலங்கையில் அமைதியின்மையை விரும்பும் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் ஏஜண்டுகளாகவிருக்கும் சமூக விரோதிகள் ஏன் காரணமாகவிருக்க மாட்டார்கள்?.தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையில் முரண்பாடுகளை வளரவிடுவதில் இலங்கைக்கு வெளியே திட்டமிடப்படுகின்றது என்பதை மறுக்க முடியாது.வெளிநாடுகளில் முன்னால் வெளிவிவகார அமைச்சர் லகஸ்மன் கதிர்காமர் மேற்கொண்ட தமிழர்களுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளினால் தமிழருக்கும்; தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதிருப்தியிருக்கலாம்.இதனைச் சாட்டாக வைத்து சமூக விரோத ஏஜண்டுகள் இக்கொலையைச் செய்திருக்கலாம்.தமிழீழ விடுதலைப்புலிகள் இதனைச் செய்வதற்கான காரணங்கள் எதவும் இல்லை.எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் சார்ந்த அரச நடவடிக்கை ஒரே மாதிரியாகத்தானிருக்கும்.எனவே ஒரு வெளிநாட்டமைச்சரை கொலை செய்வதன் மூலம் தமிழர் பிரச்சினை தீர்ந்துவிடாது என்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தெரியும்.சரத் பொன்சேகாவின் ´விடயமும் அதேதான்.ஒரு இராணுவத்தளபதி இறந்தால் இன்னொரு இராணுவத்தளபதி வரத்தான் போகிறார்.எனவே தமிழீழ விடுதலைப்புலிகள் இதனைச் செய்திருக்கக்கூடிய சாத்தியமில்லை.எல்லாத் தாக்குதலின் போதும் அரசு "இது தற்கொலைத் தாக்குதல்"இறந்த தமிழ் இளைஞனின் உடலையே அல்லது இளம்பெண்ணின் உடலை அடையாளப்படத்துகின்றது.அத்தாட்சியாக அடையாள அட்டை ஒன்றும் கட்டெடுக்கப்படுகின்றது.இவற்றையெல்லாம் அரசே செய்வதற்கான சாதத்தியம் இல்லாமலில்லை.ஆங்காங்கே கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் போய்விடுகிறார்கள்.இவர்கள் காணமல் போய்விட்டதாக கருத வைத்து தேவையேற்படும் வலிந்து இவர்களை தற்கொலைப்போராளிகளாக பலிக்கடாவாக பயன்படுத்தக்கூடிய அரச நடவடிக்கை இல்லாமலில்லை.இலங்கையில் எற்பட்டுள்ள இனப்பிரச்சினையும் அது சார்ந்த தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இராணுவத்தின் யுத்தமும் பல்வேறுபட்ட அரசியல் வன்முறைக் குழப்பங்களை எற்படுத்தியுள்ளன´.சூழ்நிலையை தமக்குச் சாதகமாகப் பாவிக்கும் சமூக விரோதிகள் தாமே சகோதர படுகொலைகளை நிகழ்த்திவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் மேல் பாரத்தைப் போட வாய்ப்புண்டு.தமிழீழ விடுதலைப்புலிகள் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்வது எவ்விதத்திலும் நியாயமில்லை.கிழக்கு மாகாணத்தில் நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது ஒரு கொலையாவது இடம்பெறுகின்றதே?.யாழ்ப்பாணத்தில் கொலைகள் இடம்பெறுகின்றதே காணாமல் போகின்றார்களே !வெள்ளைவான் கடத்தல் இடம்பெறுகின்றதே இவற்றுக்கெல்லாம் யார் காரணம்?.அரசாங்கத்துடனிருக்கும் "அவர்கள்"ஏன் செய்திருக்க மாட்டார்கள்.தமிழீழ விடுதலைப்புலிகள் பல்வேறுபட்ட சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக இனங்காட்ட நாம் ஒரு அனுமதிக்கக்கூடாது.தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லையேல் இலங்கையில் தமிழர்கள்"தமிழர்களாக" இருக்க மாட்டார்கள்.தமிழர்களாகிய எமக்கு முன்னால் இருக்கும் கடமை ஒன்று உண்டென்றால் தமிழர்கள் ஒரணியாய் விடுதலைப்புலிகளுடன் நிற்பதேயாகும்.மீண்டும் ஒரு முறை இங்கே குறிப்பிடுகிறேன்.இங்கே விடுதலைப்புலிகள் சார்ந்த நியாயப்படுத்தல் எதுவும் இல்லை.நியாயமே உண்டு.தமிழர்களுக்கு எதிராக எல்லாரும் சிந்திக்கிறார்கள்.ஆனால் தமிழர்கள் தனித்து நிற்கிறார்கள்.அவர்களுக்காக அவர்கள்தான்.நான் விடுதலைப்புலிகளின் எல்லாச் செயல்பாடுகளையும் ஏற்றுக் கொள்பவன் அல்ல.ஆனால் பிரபாகரன் போன்ற தலைவன் ஒருவரை இலங்கைத் தமிழர்கள் இழக்கவே கூடாது.
நான் நினைக்கின்றேன் ஜனா என்ற அன்பர் செவ்வாய் கிரகத்தில் பிறந்து புதன்கிரகத்தில் சென்று குடியேறி அங்கிருந்து கொண்டு பூமி என்ற கிரகத்தில் நடக்கும் நடப்புக்களை பத்தி பேசுகின்றார். அதனால் தான் அவருக்கு வன்னி நடப்புகள் சுத்தமாகவே தெரியாமல் இருக்கின்றது. அவர் இப்பவும் நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா மலைமேல் ஏறிவா மல்லிகைப்பூ கொண்டுவா என தான் பாடிக்கொள்வதோடு மட்டுமில்லாது வன்னிமக்களான எங்களும் நிலா பாட்டு சொல்லித்தர வாறார். வன்னியில் இருக்கும் எங்களுடைய பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் என எல்லோரும் வன்னி நிலை பற்றி; எங்களுக்கு சொல்லுவதெல்லாம் பொய்யாம் புதன் கிரகத்தில் வசிக்கும் தான் சொல்வத மட்டும் மெய்யாம். உண்மையிலேயே இவருக்கு வன்னியில் குடும்பத்தினர்களோ உறவினர்களோ இருந்திருந்தால் அவர் அவ்வாறு பேசியிருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.வன்னி மக்களை விடுதலைப்புலிகள் தடுத்து நிறுத்தவில்லை. இது அரசபயங்கரவாத்தின் திட்டமிட்ட பொய் பிரச்சாரம்- மக்கள் எல்லோரும் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல பயந்துதான் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று மனநோயாளிகள் போல் புலம்பிக்கொண்டிருக்கின்றார். வன்னியில் இருந்து வெளியேற முடியாது அல்லல்ப்படும் மக்கள் மூலமாக கிடைக்கப்பெறும் செய்திகள் வன்னியில் இருக்கும் எங்களது குடும்பத்தினர் மூலமாக கிடைக்கப்பெறும் செய்திகள்- கியூமன் ரைட்ஸ் எனப்படும் சாவதேச கண்காணிப்பகத்தினால் இரண்டு தடவைக்கு மேல் விடுதலைப்புலிகள் மேல் எச்சரிக்கை விடுத்த செய்திகள்- சாவதேச செங்சிலுவைச் சங்கம் விடுத்த அறிக்கை - இன்று பல்வேறு தமிழ் இணைத்தளங்களினூடாக வெளிவரும் செய்திகள்- வீடியோ ஒளிப்பதிவு- பி பி சி செய்திச் சேவையினால் வழங்கப்பட்ட செய்திகள் யாவும் பொய் என்று சொல்லும் ஒரே புத்திசாலி இவர் மட்டுமாகத்தான் இருக்க முடியும். இவரை என்னவென்று கூறுவது. அன்பர் ஜனா அவர்களே இப்போதெல்லாம் மக்கள் தாங்கள் மாந்தைகள் என்ற நிலையில் இருந்து மீண்டு எழுந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்...... என்ற இணையத்தளங்களை மட்டுமே வாசிப்பதோடு நின்று விடாது. - - - - குளோபல் தமிழ் நியூஸ்- - - போன்ற செய்தித்தளங்களையும் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் தொடர்ந்தும் பழைய உல்டாக்களையே விட்டுக் கொண்டிருக்காது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்ப ஆக்கபூர்வமான வடிவங்களை கொடுக்க முயற்சி செய்யுங்கள். பாதுகாப்புத்தேடி மக்களை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லவிடாது விடுதலைப்புலிகள்தான் தங்களது கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள்ளேயே முடக்கி வைக்கின்றார்கள் என்ற விடையம் எல்லோருக்கும் பகிரங்கமாகவே தெரிந்த விடையம். இதனை பொய் என்று கூறுவதன் மூலம் நீங்கள் தான் முழுப்பூசனிக்காயை சோற்றினுள்ளே மறைக்க முயற்சி செய்கின்றீர்கள் தவிர இம்முயற்சியின் மூலம் நீங்களும் முட்டாளாகிக் கொண்டிருக்கின்றீக்கள். இன்று விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு முக்கிய காரணமே இதுதான் என்பது ஆய்வாளர்களதும் விமர்சகாகளதும் ஒட்டு மொத்த கருத்தாகவும் இருக்கின்றது. நிலமை இவ்வாறு இருக்கும் போது நீங்கள் என்னடாவென்றால் இப்பவும் நிலா பாட்டு பாடி குழந்தைப் பிள்ளைகளுக்கு விழையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். எங்கே ஒரே ஒரு வரியில் விடுதலைப்புலிகள் பத்திரிகைகள் வாயிலாக சாவதேச உதவி நிறுவனங்களின் பாதுகாப்யை உறுதிப்படுத்திக் கொண்டு ஓர் அறிக்கையை மட்டும் விடட்டும் 'வன்னி மக்களை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை அவர்கள் விரும்பினால் தங்கள் பாதுகாப்பை அவர்கள் சுயமாக தேடிக்கொள்ளட்டும். அதற்கு எந்த வகையிலும் நாங்களச்சுறுத்தல் கொடுக்க மாட்டோம்" என்று சொல்லி ஓர் அறிக்கையை வெளியிடட்டும் அதற்கு 24 மணிநேர அவகாசமும் கொடுக்கட்டும் அதன் பின் பார்க்கலாம் வன்னி மக்கள் யார் அங்கே இருக்கப்போகின்றார்கள் என்று. தவிர விடுதலைப்புலிகள் மீது இதுவரையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு இது ஒரு சந்தாப்பமாகவும் அமையுமல்லவா. எங்கே இது வரையில் அவ்வாறு ஓர் அறிக்கையை வெளியிட்டார்களா? அதை விட்டு விட்டு சும்மா இங்கே வந்து நிலாப்பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றீர்கள்
அன்கயப்பிரியன் அவர்களின் நீண்ட பின்னூட்டல் வாசிக்கும் போது இதற்கு விளக்கம் சொல்வது என்றால் இதனை விட நீண்ட பின்னூட்டல் கொடுக்க வேண்டியிருக்கும். சரி. சுருக்கமாக கூற முயற்சிக்கின்றேன். ஐயா! நீங்கள் இறுதியாக சொன்ன ஒரு விடயத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்கின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவருக்கு மாத்திரம் மதிப்பளிக்கின்றேன். (காரணம் அப்படியொரு மனிதப் பிறப்பு. வியூகங்கள். திட்டங்கள். திறமை எல்லாம் எமது சொல்லி அடங்காத அளவிற்கு இருக்கின்றது). ஆனால்> நல்ல சந்தர்ப்பங்கள் விடுதலைப் புலிகளினால் தவறவிடப்பட்டன. (நான் விடுதலைப் புலிகளை விமர்ச்சிக்க விரும்புகின்றவன் அல்ல. இருந்தாலும் அன்கயப்பிரியனுக்கான விளக்கத்திற்காக கூறுகின்றேன்.) சமாதானக் காலம் தான் தமிழர்களுக்கான விடிவின் ஆரம்பமாக இருந்தது. ஆனால் அது விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளினால் அழிவுக் காலமாக மாறியது. 1. பேச்சுவார்த்தைகளில் ஒருசில விடுக்கொடுப்புக்களைச் செய்திருக்கலாம். செய்யவில்லை. 2. பிளவு ஏற்பட்டது காரணம் றோ. கருணா துரோகி. (இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை) கருணா பிரிந்து செல்வதற்கு முழுமையை பொறுப்பை விடுதலைப் புலிகளே ஏற்கவேண்டும். காரணம் போராட்டத்தின் போது கருணாவின் பங்களிப்பை நான் சொல்லி யாரும் அறிய வேண்டியிருக்காது. அப்படியொரு போராளியை என்ன நேர்த்திருந்தாலும் இழந்திருக்கக் கூடாது. ஆக என்னைப் பொருத்தவரையில் கருணாவிட விடுதலைப் புலிகளே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அடுத்த முக்கியமான விடயம்> இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தோ;தல். பொதுமக்களை வாக்களிக்க விட்டிருந்தால் நிச்சயமாக மஹிந்த ராஜபக்~ ஜனாதிபதியாகி இருக்க முடியாது. விடுதலைப் புலிகள் விடவில்லை. ஆனால் பின்னர் அறிக்கை விட்டனர் நாம் மக்களை வாக்களிக்க வேண்டாம் எனத் தடுக்கவில்லை என்று. இவற்றை வெளிப்படையாக சொல்லத்தான் வேண்டுமா? (இது குழந்தைப் பிள்ளைகளுக்கு சொல்லும் கதை.) ரணில் விக்ரமசிங்க சா;வதேச ரீதியாக விடுதலைப் புலிகளுக்கு வலை விரித்ததையும் அறிவோம். அந்தப் பக்கமும் விமர்சிக்கலாம். ஆனால் நிலை இன்றளவிற்கு மோசமாகியிருக்காது. விடுதலைப் புலிகளின் சமீபத் தவறுகளையே நான் இங்கே குறிப்பிட்டேன். ஐயா> அன்கயப்பிரியன்> நீங்கள் சொல்லும் கதை சினிமாவிற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும் ஆனால் சற்று சம்பவங்களை ஆழமாகவும் விரிவாகவும் நோக்கிப் பாருங்கள். சமூக விரோதிகள் காரணம் என்று சொல்கிறீர்கள். (அப்படியானால் விடுதலைப் புலிகளை நீங்கள் சமூக விரோதிகள் என்று கருதுகின்றீர்கள்.) இதனைப் பார்த்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் நீங்கள் அவ்வாறு கருதுவதாகவே எடுத்தக்கொள்வர். ஏனெனில் உண்மை தெரிந்தவர்களுக்கும்> அவர்களுக்கும் தெரியும். அடுத்தது மாவிலாறு. மாவிலாறு சம்பவத்திற்கு முன்னர் இரு தரப்பினரும் வகைதொகையற்ற யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொண்டனர். மறுப்பதற்கில்லை. ஆனால்> அறைகூவல் விடுக்கப்பட்டது மாவிலாறு சம்பவத்தில் தான். விடுதலைப் புலிகள் கங்கனம் கட்டிக்கொண்டிருந்தனர். காரணம் என்ன தெரியுமா? அப்போது இலங்கையில் இருந்த தமிழ் மக்கள் சமாதானத்தையே விரும்பினர். போரை சுத்தமாக விரும்பவில்லை. ஆனால் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் போரை விரும்பினார்கள். (விரும்பவில்லை மமதையில் போரைக் கோரினார்கள்.) விடுதலைப் புலிகளின் உயிர் நாடி புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் விரும்பத்தையே அரங்கேற்றினர். சமாதான காலத்தில் முறையான நகர்வுகளை எடுக்கத் தவறும்பட்சத்தில் இவ்வாறான நிலை ஏற்படும் என விடுதலைப் புலிகளின் அன்டரன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்ததை அனைவரும் அறிந்திருப்பீர்கள் தானே. இதற்கு முழுமையான காரணம்> விடுதலைப் புலிகள் மாற்றுக்கருத்துள்ளவரைகளை ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை. மாற்றுக் கருத்துக் கூறினால்> அவர்கள் துரோகிகள். அல்லது கருணா குழு> ஒட்டுக்குழு. இது அல்ல தமிழர் ஒற்றுமை. கொழும்பு வாழ் தமிழ் மக்களிடையே ஐயோ தமிழ் மக்கள் என்ற உணர்வ இருக்கும். ஆனால் வடக்கு மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் 'அவன் கொழும்பான்" இதனை யாரும் மறுக்க முடியாது. மலையகத் தமிழர்கள் என்றால் அவன் 'தோட்டக் காட்டான்' தமிழ்நாட்டுக் காரன் என்றால் அதற்கொரு வியாக்கியானம். இப்படி பாகுபாடு. இதனையாரும் மறுக்கமுடியாது. இதுதான் உண்மை. இனி எப்படி ஒற்றுமையாக போராடமுடியும். இன்றைய விடுதலைப் புலிகளின் தோல்விக்கு அவர்களே காரணம். வன்னியில் இன்றைய மக்களின் அவலத்திற்கும் அவர்களே காரணம். அதனைத் தவிரத்து யார் மீதும் அவர்கள் பலி போட முடியாது. இன்னும் நிறைய சொல்லலாம் வேண்டாம் நிறுத்திக் கொள்கிறேன்.
பரணி அவர்களுக்கு! தமிழீழ விடுதலைப்புலிகளை நான் என்றுமே தமிழீழ இராணுவம் என்றே உறுதியாக நம்புகிறவன். சமூக விரோதிகள் என்பது எவ்வித நோக்கமுமின்றி மக்களை அவலப்பட வைக்கும் குண்டு வெடிப்புகளை எற்படுத்தி நாட்டை நிலைகுலைய வைப்பவர்களைக் குறிக்கும்.தமிழீழ விடுதலைப் போரை ஆயுதத்தின் மூலமாக முன்னெடுக்கும் சூழ்நிலையில் குழப்பத்தோடு குழப்பாக வன்முறை ஏற்படக்கூடிய சூழ்நிலை இலங்கையில் மிகையாகவே உண்டு.இதில் எதிர்க்கட்சியினர் கூட அடங்கலாம்.எனெனில் விடுதலைப்புலிகளிடமிருந்து கருணாவை பிரத்தெடுத்தவர்கள் நாங்களேதான் என ஐக்கிய தேசியக்கட்சியினரே ஒப்புக் கொண்டுள்ளனர்.எனவே ஏன் வன்முறையாளர்களாக எதழிர்க்கட்சியினரும் இருக்கக்கூடிய நிலவரம் உண்டு.ஏனெனில் இனவாதப் போக்குள்ள அரசியல்வாதிகள் உள்ள நாட்டில் எந்த இனத்தின் மீது குரோதத்தைக் கொண்டிருக்கிறார்களோ அந்த இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் கண்டு கொள்ளாமலிருக்கக்கூடிய இருட்டடிப்பைச் செய்து அப்போரை அல்லது அதனை தலைமை தாங்கி நடத்தும் அமைப்பை பயங்கரவாதிகளாக காட்டவே தங்களது உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் வளங்களையும் பாவிக்கும்.அதனையே இலங்கையரசு செய்கின்றது.ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்களால் தெரிவு செய்யப்படும் அவர்கள் மக்களுக்கு ஜனநாயகவாதிகளாக தோற்றப்பட்டுக் கொண்டே தங்கள் அரசியல் வாழ்வை அல்லது தாங்கள் எந்த இனத்துக்குரியவர்களோ அது சார்பான செயல்பாடுகளுக்காக நிலைதவறியே நடப்பார்கள்.இந்த நிலை தவறல் என்பது குழிபறிப்பு -வன்முறை உருவைக் கொண்டதாகவே இருக்கும்.எனவே சமூக விரோதிகள் என்பது இவர்களையே குறிக்கும்.தமழீழ விடுதலைப்புலிகள் தமது மக்களுக்கு அந்த மக்களுக்குரிய மக்களுக்கு அதிஉயர்ந்த வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்பதற்காக உயிர் கொடுத்துப் போராடும் போது தமது இருப்பில் களங்கம் இல்லாமல் இருக்கவே விரும்புவார்கள்.இன்றுவரையும் புலிகள் தாக்குப் பிடித்து நிற்பதற்குக் காரணம் அவர்களது பண்பாடு சம்பந்தப்பட்ட கட்மைப்பேயாகும்.எனவே தமிழீழ விடுதலைப்புலிகள் நாட்டைக் குழப்பும் சமூக விரோதச் செயல்பாடுகளை ஒரு "போதுமே" செய்ய மாட்டார்கள் என்பதை இங்கே உறுதியாகக் கூறுகிறேன்.அடுத்து கருணா விடுதலைப் போரில் அதிகளவு பங்கு கொண்டிருந்தாலும் அவர் தமிழ் மக்களுக்குச் செய்தது துரோகமே.தனக்கு விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையெனில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் நேரிடையாக தனது மனநிலையைக் கூறிவிட்டு அவர் ஒதுங்கியிருந்திருக்கலாம்.அவர் செய்தது துரோகம் அன்றி வேறென்ன.புலிகளின் போரின் அணுகுமுறை மட்டுமல்ல தாங்கள் எண்ணியுள்ள நாட்டின் கட்மைப்பபின் வடிவத்தை இந்தியா அறியாமலிருந்திருக்க முடியாது.எனவே எச்சூழ்நிலையிலும் விடுதலைப் புலிகள் வெற்றியடையக்கூடாதென்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து பிரிப்பெடுப்பதன் மூலம் தமிழீழ பிரதேச மண்ணின் காத்திரத்தை குறைப்பதற்காகவும் றோ கருணாவைப் பிரித்தெடுக்க வாப்புண்டு.இந்தியா தனது நலனுக்காக அண்டை நாடான இலங்கையின் அரசியல் போக்கை அவதானித்து கையாள்வதற்கு வெளிநாட்டமைச்சர் இருந்தாலும் அந்த வெளநாட்டமைச்சருக்கு அறிவுரை சொல்லக்கூடிய அதிகார உரிமை றோவிற்கு உண்டு.அமெரிக்காவின் இராணுவக் கட்டமைப்பான பென்ரகனின் ஆசிய பிராந்திய இராணுவக்கட்மைப்பு திருகோணமலையை அண்மித்த தீவுகளில் இராணுவத் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.இலங்கையில் இருக்கும் பிரச்சினைக்குள்ளும் அவர்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டதானிருப்பார்கள் .
மீண்டும் தொடர்கின்றேன் அன்கயப்பிரியன் அவர்களே! உங்களின் சில கருத்துக்களை நான் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கின்றேன். விடுதலைப் போராட்டத்தில் மூழ்கிப் போயிருந்து பின்னர் அரச தரப்பில் சேர்ந்தை துரோகம் தான். ஆனால்> அது நீங்கள் சொல்வது போல ஐ.தே.க. அல்லது நான் சொல்வது போல றோ பின்னிய வலையாக இருக்கலாம். ஆனால்> அதில் சிக்குண்டதில் யாருக்கு நஸ்டம்?. தமிழ் மக்களுக்குத் தானே. றோ அல்லது ஐ.தே.க. பிரித்திருந்தால் அவர்கள் மீது கோபமடைந்து பிரயோசனம் இல்லை. காரணம் பலவீனம் இருந்தமையினால் எதிரி அதனைச் சாpயாக பயன்படுத்திக் கொண்டான். நீங்கள் அல்லது நான் பலவீனமாக இருந்துவிட்டு எதிரி எம்மைத் தாக்கினால்> அதற்கு எதிரியைக் குறைகூறக் கூடாது. எமது பலவீனத்தை பலமாக்க வேண்டும் அல்லது பிழையைத் திருத்திக் கொள்ளவேண்டும். இதுவே இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்க உறுதியான வழியாக இருக்கும். எந்தவொருச் சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் கருணாவை விட்டுக்கொடுத்திருக்கக் கூடாது. (இதனைக் குறித்து ஆழமாக பேசுவதாயின் காலமும் நேரமும் மிக நீண்டதாக இருக்கும் என்பதை நீங்களும் அறிவீர்கள்) மற்றையது நீங்கள் சொல்வது போல் விடுதலைப் புலிகள் தமிழீழ இராணுவமாக இருக்கட்டும். அதற்காக நீங்கள் குறிப்பிட்ட பிந்தைய செயல்களை அவர்கள் செய்யவே இல்லை என வாதம் பண்ணுவது அடிப்படையற்றது. அப்படியாயின் இலங்கை இராணுவம் அட்டுழியம் செய்யவில்லையா? அமெரிக்க இராணுவம் ஈராக்கில் கொடுமைகள் செய்யவில்லையா? அல்லது ஒரு காலகட்டத்தில் அகிலத்தையே உலுக்கிய ஹிட்லர்தான் இதற்கு விதிவிலக்கா? ஹிட்லர் சாpத்திரத்தில் 6 லட்சம் கொலைகள். ஆனால் உலகில் சிறந்த ராஜதந்திரி எனப் பெயர். இப்படித் தான் விடுதலைப் புலிகளும் இராஜந்திர செயல்களுக்காக இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். மற்றையது விடுதலைப் புலிகள் செய்யாத ஒன்றை செய்தார்கள் என்று கூறும் போது அதற்கு விடுதலைப் புலிகள் மறுப்பு சொல்வார்கள். ஆனால்> நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை அவர்கள் மறுக்கவில்லை. காரணம்? இப்போது புரிகிறதா?! மேலும்> விடுதலைப் புலிகள் இவற்றை செய்தது பிழையென்றோ சாpயென்றோ விவாதிக்கவில்லை. நீங்கள் சில விடயங்களை இதய சுத்தியுடன் அல்லது அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அலசி ஆராயுங்கள். இப்படி விடுதலைப் புலிகளின் பக்தகோடியாக இருக்காதீர்கள். மீண்டும் கூறுகின்றேன் விடுதலைப் புலிகளின் அந்தச் செயற்பாடுகள் தவறு என்று கூறவரவில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் இவை இராஜதந்திர செயற்பாடுகள். அவ்வளவுதான். ஆனால்> யாராக இருந்தாலும்> எந்தவொரு தரப்பாக> எந்தவொரு நியாயத்திற்காகவும் அப்பாவிப் பொதுமக்களின் ஒரு உயிர் காவுகொள்ளப்படுவதையும் என்னால் ஒருபோதும்> எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை. இந்த விடயத்தில் யார் பிழையாக இருந்தாலும் பிழையெனக் கூறவேண்டும். சுட்டிக்காட்டவும் வேண்டும். அதற்காகவே இவ்வளவும் சொல்கின்றேன். இந்தவொரு விடயத்தைத் தவிர நான் ஒருபோதும் விடுதலைப் புலிகளையோ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை விமர்சிக்க விரும்புவதில்லை. அதற்கு காரணம் பல உண்டு. அதில் ஒன்று நாம் நினைப்பது அல்லது எமது ஊகங்கள்> கணிப்புக்கள்> எமக்குத் தெரிந்தவை எல்லாவற்றையும்விட பல மடங்கு வித்தியாசமாகவும்> வேறுபட்டதாகவும் இருக்கும்! இருக்கின்றன! ஏனெனில் விடுதலைப் புலிகளும் (அதில் எல்லோரும் அல்ல குறிப்பிட்ட சிலர்) சிறந்த ராஜதந்திரிகள். பின்னர் ஏன் இவ்வளவு வியாக்கியானம் பேசுகின்றேன் என எண்ணுகின்றீர்களா? “கோபம் குறைத்து விவேகமாய் விவாதிப்பதில்” நான் மிகவும் ஆர்வமுடையவன். அதனால் தான் இந்த பின்னூட்டல்கள் தொடர்ந்தன.
பரணி அவர்களுக்கு!விடுதலைப்புலிகளின் பக்தன் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.நான் பக்தன் அல்ல.எனது எழுத்துக்கள் விடுதலைப்புலிகளுக்கு வக்காலத்து வாங்குவது போன்ற தொனியை எற்படுத்தியிருக்கலாம்.ஆனால் அது உண்மையல்ல.எனக்கிருந்த அரசியல் ஈடுபாடு;இலங்கைத் தமிழர்களாகிய எங்களது உரிமை சம்பந்தமான போராட்டங்களை நான் அவதானித்து வருபவன்.இலங்கையில் தமிழர் என்ன நிலையில் இருக்கிறார்கள் -என்ன நிலைக்காளாவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.யுத்த நிலையில் இரண்டு இராணுவத்திற்கிடையில் இடம்பெறும் யுத்தத்தில் இராணுவம் அல்லது போராளி இறப்பத என்பது யுத்தம் என்ற காரணத்திற்குள் அமையும்.ஆனால் அதற்கப்பால் பொதுமக்கள் கொலை செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாததே.யுத்தம் தொடருகின்ற போது அல்லது தாக்குதல்கள் தொடருகின்ற போது அதையே சாட்டாக வைத்து நடக்கும் கொலைகளும் குண்டு வெடிப்புகளும் இடம்பெறுகின்ற போது எவ்வித யோசனையுமின்றி விடுதலைப்புலிகளின் மேல் பழி சுமத்துவதைத்தான் தவறென்கிறேன்."இவர்கள்தான் செய்திருப்பார்கள்"என்ற ஊகத்தின் அடிப்படையில் ஊடகங்களுக்கு அறிக்கை விட அதுவே பலரால் பேசப்பட்டு பேசப்பட்டு "உண்மைதான்"என்ற நிலைக்கு வெகுசன அபிப்பராய நிலைக்கு வர வாய்ப்புண்டு.எங்கள் அனைவருக்கும் முன்னால் ஒரே ஒரு இலக்கு மட்டுமே உண்டு.அது விடுதலைப்புலிகளுடன் ஓரணியாய் நிற்க வேண்டிய நிலை உண்டு.தமிழர்களுக்கு ஒரு பிடியாய் இருப்பவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே.மற்றைய தமிழ் அரசியல்வாதிகளின் அரசியலை பாரத்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்.அவர்களின் யோக்கியதையும் அக்கறையும் என்னவென்று அறிவோம்.
இங்கு காணப்படும் கூற்றுக்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. விமர்சகர்கள் மனதில் தோன்றிய தெல்லாவற்றையும் தான்தோன்றித்தனமாக எழுந்தமானதாக கூறியுள்ளார்கள் வன்னி மக்களை புலி பணயக் கைதியளாக வைத்துள்ளனர் என்று ஒருசாரர் கூறுகின்றனர் இப்படியாக கூறுபவர்கள் ஜு ரி வி செய்தி பார்ப்பதில்லை என்பது தெரிகின்றது அதில் விளக்கமாகவே கூறப்பட்டுள்ளது வன்னிமக்கள் புலிகள்தான் தங்கள் பாதுகாவலர்கள் எனவும் தாங்கள் ஒருபொளுதும் தலைவரைவிட்டுட்டு வெளியேற மாட்டோம் எனவும் பிறகேன் நீங்கள் புலம்புகின்றறீங்கள் மற்றும் நாம் வெளிநாடுகளில் ஒட்டுண்ணிகளாக இருந்து கூச்சலிடவில்லை. நாங்கள் போராட்டத்திற்கு வேண்டிய காசைக்கொடுத்தநாங்கள் வன்னிமக்கள் போராடினார்கள் நாங்கள் அதற்குத்தேவையான காசைக் கொடுத்தோம் அவர்களுக்கும் உயிரிலை பயமிருந்தால் வெளிநாடுகளுக்கு வந்து அவர்களும் காசை அனுப்பியிருக்கலாம் தானே போராட்டம் என்டால் உயிர் இழப்புக்கள் இருக்கத்தான் செய்யும் காசில்லாமல் போராட்டம் நடாத்த முடியுமா இதிலிருந்து நாங்கள் ஒட்டுண்ணிகளாக இருந்து கூச்சலிடவில்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய இழப்புக்கள் எல்லாம் தலைவரின் தந்திரோபாயங்கள் இராணுவத்துடன் தொடர்ச்சியாக முட்டி மோதாமல் மன்னார் பனம்காமம் மல்லாவி துணுக்காய் பரந்தன் கிளிநொச்சி என்று மக்களை இடம்பெயரச்செய்து ஒரு சிறிய பிரதேசத்துள் குவிப்பதால் சிங்கள இனவாத இராணுவத்தால் ஏவப்படும் குண்டுகளுக்கு பெருந்தொகையான மக்கள் கொல்லப்படுவார்கள் அப்போது ஜ நா தலையிட்டு போராட்டத்தை நிறுத்தி தமழ் ஈழத்தை அங்கீகரிப்பார்கள் பொறுத்தருந்து பாருங்கள் இதுதான் விரைவில் தமிழ்ஈழம் பெறுவதற்கான ஒரே வளி
பரணி அவர்களே உங்பளது உறவினர்கள் வன்னியில் இவ்வளவு காலமும் புலிகளின் கட்டுப்பாட்டில் என்ன துணிச்சலுடன் இருந்தார்கள்? புலிகளின் பட்டுப்பாட்டில் இலங்கையல் எங்கு வாழ்ந்தாலும் தமிழன் பயந்து பயந்தே வாழ்ந்த காலங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் நின்மதியாகத்தானே வாழ்ந்தார்கள். அல்லது உங்கள் உறவுக்காறர்கள் புலிகளின் செயற்பாடுகளை உளவுபார்த்து சிங்கள அரசிடம் கொடுப்பதற்காக இருந்தார்களோ என்ற சந்தேகம் கூட ஏற்படுகின்றது. தமிழில் ஒரு பழமொழி உண்டு எண்ணெய் சட்டியில் போட்ட மீன் எண்ணெய் கொதிக்கின்றதென்று துள்ளி அடுப்பில் வழுந்த கதை போல வன்னியில் இருந்ததை விட மிகவும் பயங்கரமான இடத்திற்கு வந்திருப்பதை உலகில் உள்ள அத்தனை ஊடகங்களும் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்களின் கொடுமைகள் பற்றி தினம் தினம் கூறிவரும் வேளையில் உங்களைப் பொன்ற சிலருக்கு மட்டுமென் புத்தி தடுமாறுகின்றது முடிந்தால் ஒருமுறை வவுனியாவிற்குப் போய் இடைத்தங்கல் முகாமிற்குள் போய் வாருங்களேன்.
இங்கு சிலர் தமது கருத்துக்களை கற்ப்பனைகலால் வளர்த்துக்கொண்டு........ உங்களின் உறவினர் யாரும் வன்னியில் இருந்திருந்தால் இந்த ஊக்கிரமான போருக்கு முதல் என்ன நடந்தது என்பது யாருக்குத் தொரியும்? வன்னிக்கு உல்லசம் போனவர்களும் குடுத்த பணத்திற்க்காக ஊர் சுற்றிக் காட்டப்பட்டவர்களும் வால் பிடிக்கும் சொய்திகளை வாசித்தும் கேட்டும் அனந்தம் அடைந்தோர் இப்போ மக்கள் படும் வேதனையில் புலி பதுங்குவது பாய்வதுக்குத்தான் என்று வியாக்கியானம் சொல்லுவதும். பயங்கரவாதச் செயல்கலால் சர்வதேசமே வாய்முடி இருப்பதும் இன்னமும் விழங்காமல் நாளை நாளை என்று ஜடங்களாய் அலையும் மக்களும்........... இவைகளுக்கொல்லம் விடை சொல்வது எந்தப் பயங்கரவாதி?
ரகு என்பவர் புளூட்டோவில் இருந்து வந்த்துள்ளார் போல உள்ளது.நான் வன்னியை சேர்ந்த்தவன். எனக்கு உந்த உலூட்டா?? விட வேண்டாம். வவுனியாவுக்கு போன மக்களை பற்றி ஒரு சொல்லு சொல்லாமல் விட்டதில் இருந்தே நீங்கள் எந்தகைய கருத்தாளி என்பதை காட்டிக்கொடுத்து விட்டீர்கள். வன்னியில் மக்கள் ஆண்கள் வேறு , வயோதிபர்கள் வேறு ,பெண்கள் வேறாக்கப்பட்ட கொடுமைக்குள் வாழ வேண்டுமா? அல்லது வன்னியில் புலிகளுடன் சேர்ந்த்து வாழ வேண்டுமா? உங்களுக்கு நிலாப்பாட்டு மகிந்த தான் பாட வேண்டும் போலுள்ளது.
தமிழன் ரகுவுக்கும்.. நீங்கள் கூறிய அத்தனை மீறல்களும் யாரால் நடாத்தப்பட்டன என்பது இன்று(னு)மா உங்களுக்குப் புரியவில்லை. புரியாது... எதிரியும் அன்னியனும் சேர்ந்து எம்மையும் எம்மவர்களையும் அழித்து ஒழிப்பதற்கு செய்த சூழ்ச்சிகளும் எம்மவர்களின்மீது உலக வலையைப்பின்னியும் எங்கள் இனத்தை அழித்தும் மண்ணைப்பங்குபோடவே என்பது இன்னுமா புரியவில்லை உங்களுக்கு!. அல்லது சார்ந்த பக்கத்தை தக்கவைப்பதற்காகவா! இனியாவது உண்மையை உணர்ந்து நம் உரிமையைப் பெற உழைக்கும் உள்ளங்களை காயப்படுத்தாது.. உதவிசெய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாது இருப்போம். அதுவே நாம் தமிழ்த்தாய்க்கு நாம் செய்யும் பெற்றகடனாகும். இல்லையேல் வரலாற்றில் நாம் வருடிகளே!!
தமிழர் தம் அழகிய வாழ்வியலை தொலைத்து அகதி முகம்களில் முடங்கிக்கிடக்க,நோயும் பிணியும் வாட்ட,புலி,புலி என கொலைவெறி பிடித்த இனவெறிக்குழுக்களோடு தமிழ்பச்சோந்திக்குழுக்களும் சேர்ந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் தமிழர் தம் அகதி வாழ்வை சீரளிக்கும் அவல நிலை வன்னியில்.வெளிநாடுகளுக்கு அகதியாக வந்த நாமும் ஒன்று பட்டு அவதிப்படும் மக்களுக்கு உதவ மறந்து ஒருவரை ஒருவர் குறை காண்பதில் போட்டி, ஒருவரை ஒருவர் நியாயப்படுத யாருக்கும் முன் உரிமை இல்லை, எல்லோரும் குற்றாவாளிகள் அல்லது நிரபராதிகள் என இனம்காண இதுவல்ல நேரம் என்றோ இதற்கு விடைகண்டு வேற்றுமை களைந்து இருந்தால் நிலமை மறுபட்டு இருக்கலாம்,ஏன் இந்த குத்துச்சண்டை?யாரைப்பலப்படுத்த இந்த பொர்கோலம் ?சிந்திக்க தெரிந்தவர்களே சிந்தியுங்கள்?யாரை நியாயப்படுத்த இங்கு கருத்து மோதல்?அவலை நினைது உரலை இடிப்பதால் யாருக்குவிமோசனம்?உறுதி,தன்நம்பிக்கையோடு எம் நாட்டில் மக்களை அவர்கள் வாழ்வியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் செயல்படுவோம் .ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ந
//போராட்டம் என்டால் உயிர் இழப்புக்கள் இருக்கத்தான் செய்யும் -->வீமன் // //இன்றைய இழப்புக்கள் எல்லாம் தலைவரின் தந்திரோபாயங்கள்...இதுதான் விரைவில் தமிழ்ஈழம் பெறுவதற்கான ஒரே வளி -->தன்மானத் தமிழன்// அட கோக மக்கா...தலைவருடைய ஒவொரு வருசத்து "உரையையும் " மீண்டும் கேல்லுங்கோ ..அவர சொல்லுவாரு ...நீங்கள் எல்லாம் எவளவு லூசுங்க எண்டு ...அரவர் ஒருவர் தான் சரியாக இலங்கை தமிழனுக்கு எப்பிடி ஆப்பு வைக்கலாம் என்பதனை நன்றாக உணர்ந்தவர்
அயோ தமிழர்கள் ஒற்றுமை இல்லை ,அது ஒன்றே போதும்.சிங்களவன் நன்றாக புரிந்து வைத்து இறக்கிறான்.தமிழர்கள்கு சுஉரிமை கொடுக்க கூடாது என்பதில் எல்லரும் ஒன்று தான் .நாங்கள் நாய்கள் போல் நம்லுகயே அடிச்சு கொள்ளுகிறோம் !தமிழன் ரெண்டுபட சிங்களவனுக்கு கொண்டாட்டம் !
அயோ தமிழர்கள் ஒற்றுமை இல்லை ,அது ஒன்றே போதும்.சிங்களவன் நன்றாக புரிந்து வைத்து இறக்கிறான்.தமிழர்கள்கு சுஉரிமை கொடுக்க கூடாது என்பதில் எல்லரும் ஒன்று தான் .நாங்கள் நாய்கள் போல் நம்லுகயே அடிச்சு கொள்ளுகிறோம் !தமிழன் ரெண்டுபட சிங்களவனுக்கு கொண்டாட்டம் !
அன்று தந்தை செல்வா சொன்னார் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்றவேண்டும் என்று இன்றும் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும். சிங்களவனின் நயவஞ்சக செயல்களைக்கண்டு கோபம் கொண்டு தர்மத்தை காக்க அருள்புரியாத் கடவுளின் மீதே சந்தேகம் எழுகிறது?
| gtbc.fm |
-
18 வது அரசியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க இன்று சவப்பெட்டி ஊர்வல ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளது
-
2ம் இணைப்பு ‐ இராணுவ கிளர்ச்சி ஓன்று வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுகிறது – சர்வாதிகார பாதையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக சிறை செல்லவும் தயார் ‐ சரத்பொன்சேகா
-
18 வது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன
-
18வது அரசியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று சவப்பெட்டி ஊர்வலம் ‐ படங்கள் இணைப்பு
-
3ஆம் இணைப்பு‐ மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியது இன்றியமையாதது – விஜய் குமார் சிங் ‐ இந்திய இராணுவத் ஜெனரல் விஜேகுமார் சிங், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்திப்பு‐
-
உருத்திரபுரம் மீண்டும் உயிர் பெறும் கிராமம்‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்
08 September 10 02:49 pm (BST)
சுரேஸ் பாராளமன்றத்தில் பேசியுள்ள திருகோனமலை கானியின் சொந்தகாரர்கள்நாங்கள் தான்,எங்களின் இந்த கானி திருமலை நகரத்துக்குள் உள்ளது இது எங்கள் தந்தை வழி பரம்பரை உறுதி கானி 1983முன் இதில் சுற்றுல விடுதி அமைத்து இருந்தோம் (இது கடற்கரையை அன்டியுள்ளது)83கலவரத்தில் சிங்களவர்களினால் எரித்து நாசமக்கப்பட்டபின் அதை அப்படியே விட்டு விட்டு நங்கள் வேறு வீட்டில் வசித்து வந்தோம்,பின்பு எங்கள் கானியில் இந்தியன் ஆமி குடியேறி இருந்தான்
08 September 10 02:08 pm (BST)
அவை எப்ப உழைக்கும் மக்களைப் பற்றி யோசிச்சிருக்கினம்? முடிஞ்சா ஒருக்கா சொல்லுங்கோ?
08 September 10 12:42 pm (BST)
இந்தியப்படை இருந்த காலத்தில ஈபிஆர்எல்எப் இல இருந்துகொண்டு சுரேஸ் போட்ட ஆட்டத்தை விட இப்ப ஒண்டும் பெரிசாய் காட்டுச்சட்டம் இருக்கிறமாதிரி எனக்கு தெரியேல்லை



