மரண அறிவித்தல்: திருமதி மகேஸ்வரி தியாகராஜா

திருமதி மகேஸ்வரி தியாகராஜா
வயது 73
சாவகச்சேரி நுணாவில் மத்தி

பிறந்த இடம்:  வெள்ளவத்தை

தோற்றம்: 01 NOV 1946
மறைவு: 09 FEB 2020

தொடர்புகளுக்கு:

வசீகரன் – மகன்
Mobile : +94777794026

 

 

யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

மேனகன்(கனடா), கேசவன், வசீகரன், சுதாகரன்(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா), பிரசாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கவடிவேல், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வினோதினி(கனடா), இளம் சரோஹினி, சீதாலஷ்மி, இந்திரா பிரியதர்ஷனி(பிரித்தானியா), சுபாஷினி(பிரித்தானியா), அகிலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கௌதமன், மீரா, சேயோன், சுருதி, லஷ்மி, எழிலன், சாய், கார்த்திகன், சஞ்சயன், சகாயன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரையும் 12-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Spread the love