மரண அறிவித்தல் – மூத்ததம்பி ராஜரட்னம்

rrrr
மூத்ததம்பி ராஜரட்னம்
கோப்பாய்
– 09-12-2016

யாழ்ப்பாணம் கோப்பாயை பிறப்பிடமாகவும்  கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட மூத்ததம்பி  ராஜரட்னம் அவர்கள் 09.12.2016 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மூத்தம்பி விசாலாட்சி தம்பதியினரின் மகனும் ,  ரட்னமலரின் அன்புக் கணவரும், மயூரன்,  தர்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சந்திரன் (கனடா) , மல்கா ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான நடராஜா, சுப்ரமணியம் , ராசமணி மற்றும் தையல்நாயகி, குமாரசுவாமி (லண்டன்) , பூமணி (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெறும். இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்  – குடும்பத்தினர்