Home உலகம் சீனப் பெண் இயக்குநரது படம் ஒஸ்கரை வென்றது -“Nomadland” க்கு மூன்று விருதுகள்

சீனப் பெண் இயக்குநரது படம் ஒஸ்கரை வென்றது -“Nomadland” க்கு மூன்று விருதுகள்

by admin

(படம் : சிறந்த நடிகை Frances McDormand மற்றும் இயக்குநர் Chloé Zhao)

அமெரிக்கர்களின் நவீன நாடோடி வாழ்க் கையைச் சித்தரிக்கின்ற ‘Nomadland’ சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கர்விருதை வென்றுள்ளது.

அதனை இயக்கிய சீனாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கின்ற 39 வயதான இளம் பெண் இயக்குநர் Chloé Zhao சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

அதே படத்தில் பிரதான பாத்திரத்தில் தோன்றிய Frances McDormand சிறந்த நடிகைக்கான விருதை வென்றிருக்கிறார்.மூன்று ஒஸ்கார் விருதுகளை தனதாக்கிய இயக்குநர் Chloe Zhao, அமெரிக்காவினது அதி உயர் சினிமா விருதை வெல்கின்ற முதல் வேற்று நிறப் பெண்ணாவார். அதேவேளை சிறந்த இயக்குநர்விருதை வெல்கின்ற இரண்டாவதுபெண் என்ற பெருமையையும் அவர்பெறுகிறார்.

2007-2009 காலப்பகுதியில் உலகெங்கும் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்த நிலை அமெரிக்கர்கள் பலரது தொழில் வாய்ப்புகளைப் பறித்தது. அவ்வாறு முதுமையில் தனது தொழிலையும் கணவரையும் இழந்த பிறகு நவீன நாடோடியாக மாறிய பெண் ஒருவரது கதையையே Nomadland சொல்கிறது.

வசிப்பிடங்களை இழந்து நாட்டுக்குள்அங்கும் இங்குமாக பருவகால வேலை களைத்தேடிக்கொண்டு வாழ்க்கையை வாகனத்துடன் தெருக்களில் அனுபவித்தவாறு தங்கள் அந்திம காலத்தைக் கடக்கின்ற அமெரிக்க நாடோடிகளின் இன்ப துன்பங்களை திரையில் பதிவு செய்கின் றது ‘ Nomadland’,

இப்படத்தின் திரைக்கதை அமெரிக்கப்பத்திரிகையாளர் Jessica Bruder எழுதிய “21 ஆம் நூற்றாண்டில் தப்பிப் பிழைக்கும் அமெரிக்கா” (Surviving America in the Twenty-First Century ) என்ற யதார்த்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

83 வயதான இங்கிலாந்தின் முதிர்ந்த நடிகர் Sir Anthony சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த துணைப் பாத்திரத்துக்கான விருதை பிரித்தானியாவின் முதல் கறுப்பின நடிகரான Kaluuya என்பவரும் பெறுகின்றனர்.

பெரும் தொற்றுநோய்ச் சூழ்நிலைக்குமத்தியில் 92 ஆவது ஒஸ்கர் சினிமா விருது வழங்கும் விழா நேற்றிரவு மட்டுப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளுடன் மிக அடக்கமான முறையில் நடந்து முடிந்தது.

மதிப்புக்குரிய தங்கச் சிலை விருதுகளை வென்ற பலர் அவரவர் வதிவிடநாடுகளில் இருந்தவாறு இணைய வழியிலேயே விழாவில் கலந்து கொண்டனர்.

தழுவல் திரைக் கதைக்கான (best adapted screenplay) ஒஸ்கார் விருதை வென்ற பிரெஞ்சு எழுத்தாளர் Florian Zeller, பாரி ஸில் இருந்தவாறே தனது தங்கச் சிலை யைப் பெற்றுக் கொண்டார்.

நாளாந்தம் மது அருந்தும் உயர் பள்ளி ஆசிரியர்களது குடிப் பழக்கம் அவர்களதுசொந்த வாழ்க்கையையும் தொழிலையும்எவ்வாறு பாதிக்கின்றது என்பதைக் காட்டுகின்ற டெனிஷ் மொழித் திரைப்படம்”Drunk” சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை வென்றது.

——————————————————————

-குமாரதாஸன். பாரிஸ்.26-04-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More