ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக இத்தாலியை சேர்ந்த அன்ரனியோ ரஜனி (Antonio Tajani ) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றமானது ஐரோப்பிய ஒன்றியத்தினால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாகும்.
உலகின் இரண்டாவது மிகப்பெரும் வாக்காளர்களைக் கொண்ட மக்களாட்சி அமைப்பாகவும் நாட்டு எல்லைகளைக் கொண்டதாகவும் மிகப் பெரிய மக்களாட்சி அமைப்பாகவும் ஐரோப்பிய பாராளுமன்ற அமைகின்றது.
751 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பாராளுமன்ற தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பழமைவாத கட்சியின் சார்பில் போட்டியிட்ட இத்தாலியை சேர்ந்த அன்ரனியோ ரஜனி வெற்றி பெற்றுள்ளார்.
அன்ரனியோ 351 வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட இத்தாலிய சோசலிச கட்சி வேட்பாளர் 282 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.