164
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய அவரை பெப்ரவரி 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லகிருவுக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கொன்றில் பிணை வழங்கும் போது, வழக்கு நிறைவடையும் வரை எதிர்ப்பு போராட்டங்களை தவிர்க்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த நிபந்தனையை மீறி அண்மையில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது
Spread the love