குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச ஊழியர்களின் மாதச் சம்பளத்தை இரண்டு தடவைகளில் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாதாந்த சம்பளத்தை இரண்டு தடவைகளில் வழங்குவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அரச ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
மாதத்தின் 20ம் திகதி அல்லது 25ம் திகதி அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது வழமையானதாகும். இந்த நடைமுறையில் மாற்றம் செய்யதிட்டமிட்டுள்ள அரசாங்கம் அடிப்படைச் சம்பளத்தை குறித்த திகதிகளில் வழங்கி கொடுப்பனவுகளை 5 அல்லது 10ம் திகதி வழங்குவது குறித்து; கவனம் செலுத்தி வருகின்றது. எனினும் இந்த முயற்சிக்கு இடமளிக்கப் போவதில்லை என அஜித் திலரட்ன தெரிவித்துள்ளார்