குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்க நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தேவையான அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கு அரச நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியனவற்றை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு வெளிநாட்டு செலவாணி பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்திற்கு சொந்தமான ஹோட்டல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை விற்பனை செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் சொத்துக்கள் விற்பனை செய்யப்படாது என ஜனாதிபதி உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கம் உறுதியளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.