குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான தடையை நீக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்றையதினம் விசாரணைக்கு வந்த நிலையில் தாமிரபரணியில் இருந்து முறையாக அனுமதி பெற்றே குளிர்பானம் தயாரிக்கப்படுகிறது எனவும் அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்நோக்கம் இருக்கிறது எனவும் தெரிவித்து நீதிபதிகள், மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கோடையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனவும் பருவ சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் நடைபெறாத நிலை ஏற்படும் எனவும் இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கக் கூடாது என தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.