ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணத்தின் போது ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்பட்ட மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஊடக சுதந்திரத்தினைப் பாதிப்பதாக யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊடக சுதந்திரம் பற்றியும், தகவலறியும் உரிமைபற்றியும் பேசிக்கொண்டு இருக்கும் இந்த அரசு ஊடகவியலாளர்களது குரல்வளைகளை நெருக்கிப்பிடிப்பதை என்றுமே ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின்போது, யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், ஊடகவியலாளர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அத்துடன், வடமாகாண சபை உறுப்பினர்கள்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மிகவும் மோசமான சொற்களால் பேசி திட்டிய சம்பவமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.