167
உத்தேச அரசியல் சாசனம் ஆபத்தானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் சாசனத்தின் ஊடாக மாகாண ஆளுனர், மாகாண முதலமைச்சருக்கு பொறுப்பு சொல்லக்கூடிய வகையில் திருத்தங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாகாண ஆளுனர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கடமையாற்றுகின்றனர் எனவும் எனினும் புதிய அரசியல் சாசனத்தில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love