சர்வதேச ஊடக சுதந்திர தினத்தன்று , ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும், படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக புதன் கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும்.
முன்னதாக பிற்பகல் 2.30 மணியளவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.பிரதான வீதியில் அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அதனை தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் இணைந்து ஊடக சுதந்திரத்திற்காகவும் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணையுமாறு யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுத்துள்ளது