முகமாலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க பாராளுமன்றில் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.
முகமாலை பளை பிரதேசத்தில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் இறுதியில் குறித்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து காவல்துறை குழுக்களும் இராணுவத்தினரும் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.