குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் 10 நாட்களில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவம் அங்கிருந்து செல்ல இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறும் இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இன்னும் 10 நாட்களில் உரிய பதிலை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.