170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படாது என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் பற்றிய ஊழல் மோசடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் இதன் ஊடாக அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை காப்பாற்றவில்லை என்பது புலனாகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love