குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் வாஸ் குணவர்தனவிற்கு ஐந்தாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று இந்த தண்டனையை விதித்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சானி அபேசேகரவை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் அண்டு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு விசாரணைகளின் போது சானி அபேசேகரவை, வாஸ் குணவர்தன அச்சுறுத்தியிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஐந்தாண்டு கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 25000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு காலம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மொஹமட் சியாம் கொலை வழக்கில் வாஸ் குணவர்தனவிற்கு ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.