சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பொறியியலாளர்களை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு;ளளது. நேற்று இரவு தொலைபேசி மூலம் பள்ளிக்கரணை காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ள ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததனை அடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அத்துடன் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் விமான நிலையம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் சிக்கவில்லை. இந்தநிலையில் அது வெறும் புரளி எனத் தெரிய வந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமை தொடர்பாக பொறியியலாளர்கள் இருவரை கைது விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்த்க்கது