குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் றோயல்ஸ் தலைமைப் பதவியை, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். தென் ஆபிரிக்காவில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பந்தை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக ஸ்மித் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பந்தை காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக 100 வீத அபராதமும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடையும் ஸ்மித்திற்கு விதிக்கப்பட்டுள்ளது. பந்தை காயப்படுத்திய பிரச்சினைகள் சர்ச்சைகள் காரணமாக தாம் ராஜஸ்தான் றோயல்ஸ் தலைமைப் பதவியை துறந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் புதிய தலைவராக அன்கஜே ரஹானே தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 7ம் திகதி ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. இதேவேளை, பந்தை பழுதாக்கிய சர்ச்சை தொடர்பில் பல்வேறு பிரபலங்கள் டுவிட் செய்துள்ளனர். முன்னாள் அணித் தலைவர் மைக்கல் கிளார்க் உள்ளிட்ட பலரும் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.