குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பந்தை சேதப்படுத்தியமை தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை வீரர்களுக்கு விதித்துள்ள தண்டனை அநீதியானது என அந்நாட்டு கிரிக்கட் வீரர்கள் ஒன்றியம் கருத்து வெளியிட்டுள்ளது. தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், உதவித் தலைவர் டேவிட் வார்னர் மற்றும் இளம் வீரர் கமருன் பென்க்ரொப்ட் ஆகியோருக்கு அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை போட்டித் தடை விதித்துள்ளது.
மேலும் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு 12 மாத காலத் தடையும், பொன்க்ரொப்டிற்கு ஒன்பது மாத காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வீரர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள போட்டித் தடையை மீளாய்வு செய்யுமாறு வீரர்கள் ஒன்றியம் கோரியுள்ளது.
ஏதேனும் ஓர் வழியில் வெற்றியீட்ட வேண்டும் என்ற அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையின் கொள்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என வீரர்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.