குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அணுத்திட்டம் குறித்த ஈரானிய உடன்படிக்கை ரத்து செய்வது ஆபத்தானது என பிரான்ஸ் ஜனதிபதி இமெனுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கான மூன்று நாள் பயணத்தினை முடித்துக் கொண்ட மக்ரோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மற்றும் சர்வதேச நாடுகள் அணுத் திட்டம் குறித்து உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கையை ரத்து செய்யும் வகையில் ட்ராம்ப் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.எனினும் உடன்படிக்கையை ரத்து செய்வது ஆபத்தாக அமையக் கூடும் என மெக்ரோன் குறிப்பட்டுள்ளார்.
சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு மாறும் நிலையில் இருக்கக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் ஈரானுடான உடன்படிக்கை விஸ்தரிக்கப்பட வேண்டுமென்ற ட்ராம்பின் கருத்து நியாயமானது எனவும் தெரிவித்துள்ளார். எனினும் உடன்படிக்கை ரத்து செய்வது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடும் என மக்ரோன் தெரிவித்துள்ளார்.