பிரித்தானிய பிரதமர் தெரசா மேயின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிhத்தானியா வெளியேறும் பிரெக்சிற் திட்டம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அழித்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்றுமாலை பிரித்தானியா வந்துள்ள டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ; அதன்பின்னர் பின்னர் அவர் பிரதமர் தெரசா மேயை சந்தித் பேச்சுவார்த்தை நடத்திய போது அமெரிக்காவுடன் வர்த்தக உறவை விரும்புவதாக தெரசா மே குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கிய ட்ரம்ப் பிரித்தானிய பிரதமரின் பிரெக்சிற் செயல்திட்டமானது, அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் எந்தவித வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையை சீர்குலைக்கும் என விமர்சித்துள்ளார்.
தற்போதைய திட்டப்படி அவர்கள் ஒப்பந்தம் செய்தால், நாங்கள் பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்வோம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்